...

"வாழ்க வளமுடன்"

25 அக்டோபர், 2010

நீர் கடுப்பு ( நீர் சுருக்கு ) நீங்க...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


1. இளநீர், சிறுநீர்ப் பாதையில் உள்ள அழற்சியைக் குறைத்துச் சிறுநீரைக் கலங்கலும், சூடுமின்றி நிறைய வெளியேற்றும்.

*

2. உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும் காரம், புளி, உப்புச் சுவை, புலால் உணவு, பட்டை, சோம்பு கரம் மசாலாவின் கலவை, டீ, காபி, புகைபிடிப்பது, மது அருந்துதல், அதிகக் கோபம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

*

3. முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் சாப்பிட, சிறுநீர் எரிவு, சுருக்கு நீங்கும்.

*

4. பறங்கிக் காய் விதை 4-8 வரையில் எடுத்துக் கஷாயமிட்டுச் சாப்பிட சிறுநீரக அழற்சி தணியும்.


*

5. இளம் பிஞ்சுப் பாக்கை உலர்த்திக் தூளாக்கிச் சர்க்கரை சம அளவு சேர்த்து 1 கிராம் அளவு சாப்பிட அஜீர்ணப் பேதி, சிறுநீரக அழற்சி, வயிற்று அழற்சி நீங்கும்.

*

6. மாதுளம் பழத்தின் மணிகளின் சாற்றை உறிஞ்சிவிட்டு விதையையும் மென்று சாப்பிடுவது நீர்க்கடுப்பைக் குறைக்கும்.

*

7. விளாமிச்சை அல்லது வெட்டிவேரை முடித்துக் கட்டிப் போட்டு நீர்ப் பானைகளில் ஊற வைக்கவும். இத்தண்ணீரைப் பருக உடல் எரிவு, சிறுநீர் எரிச்சல் நீங்கி உற்சாகம், மனத்தெளிவு பிறக்கும்.

*

8. வாழைத் தண்டின் நீரைப்பருக நீர்ச்சுருக்கு, நீர்க் கல்லடைப்பு சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி இவற்றில் குணம் கிட்டும்.

*

9. கீரை வகைகளில் பசளைக் கீரை நீர்ச்சுருக்கு, நீர்க் கடுப்பு நீங்க மிகவும் நல்ல உணவு. அது போலவே முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, மற்றும் புதினாக்கீரை நீர்க்கடுப்பை நீக்கக் கூடியவை.

*

10. ஜவ்வரிசி - கஞ்சி, கூழ் பாயசம், வடாம் போன்றவை பல வகைகளில் நமக்கு பயன்படும். நீர்த்தாரை, குடலில் ஏற்படும் எரிச்சலை நீக்கும். நீர்ச் சுருக்கு உள்ளவருக்கு ஏற்ற உணவு.

*

11. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

*

12. வால் மிளகைப் பசுவின் பாலில் ஊறவைத்து அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் சீழ் விழுதல், நீர்த் துவார வேக்காளம் குறையும்.


***

thanks த.கூ

***


"வாழ்க வளமுடன்"

4 comments:

Giri Ramasubramanian சொன்னது…

நல்ல தகவல்...நன்றி!

prabhadamu சொன்னது…

//// "ஸஸரிரி" கிரி கூறியது...
நல்ல தகவல்...நன்றி
///


உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே.


உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கிரி.


:)

Kanchana Radhakrishnan சொன்னது…

நல்ல தகவல்...நன்றி.

prabhadamu சொன்னது…

/// Kanchana Radhakrishnan கூறியது...
நல்ல தகவல்...நன்றி.

/////



உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே.

உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி Kanchana Radhakrishnan .


:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "