இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாய் இருக்கும் பெண்களுக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாய் இருப்பதாக ஐரோப்ப ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.சர்க்கரை நோயோ, அதிகமாக இனிப்பு வகைகளை உண்பதோ இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன.
*
இப்படி உடலில் சேரும் அதிகப்படியான சர்க்கரையினால் பெண்களுக்கு கருப்பை, தோல் போன்ற பல இடங்களில் புற்று நோய் வரும் என அந்த ஆராய்ச்சி எச்சரித்துள்ளது.
*
மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு வருவதற்கும் இந்த இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது ஒரு காரணம் என்று உமேயா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
*
அதுவும் 49 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது.
*
கடந்த பதிமூன்று வருடங்களாக இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும், பல ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப் பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
*
இனிப்பான எல்லாமே இனிப்பான செய்தியைத் தராது என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது !
***
by-சத்தியா
***
0 comments:
கருத்துரையிடுக