...

"வாழ்க வளமுடன்"

09 செப்டம்பர், 2010

குழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


குழந்தை பிறந்த 1/2 மணிக்குள் தாய்ப்பாலை தரவும்.

தாயுடன் குழந்தையை மிக நெருக்கமாக வைத்திருக்கவும்.

குழந்தைக்கு தேவையான உஷ்ணத்தை பாதுகாத்தல்.

அறையின் உஷ்ணத்தை குழந்தைக்கு தகுந்தபடி வைத்திருத்தல்.

குழந்தை பிறந்தவுடன் தடுப்பூசி போட ஆரம்பித்தல்.

குழந்தையை வியாதியஸ்தரும், மற்றவர்களும் அடிக்கடி தூக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம் தாய்ப்பால் தரவும்.

தாய்ப்பாலை ஒரு பக்கம் முழுவதையும் கொடுக்க வேண்டும்.

பாலூட்டும் தாய்க்கு சத்துள்ள திட, திரவ உணவு அதிகம் தரவும்.

குழந்தை தாயின் மார்பை நன்றாக கவ்வி பால் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தை பால்குடிக்கும் போது தாய் தூங்கக்கூடாது.

தாய்ப்பால் அதிகம் சுரக்க, தாய் பிரசவத்திற்கு முன்பே தாய்ப்பாலைத் தர முடிவு செய்ய வேண்டும்.

ஜீனித் தண்ணீர், குளுக்கோஸ், தேன் முதலியன தரக்கூடாது.

குழந்தைக்குப் புட்டிப்பாலை தவிர்க்கவும்.

அடிக்கடியும், பூரணமாயும் தாய்ப்பால் தருவதால் அதிகம் சுரக்கும்.


***



பச்சிளங்குழந்தை சில அபாய அறிகுறிகள்

குறைமாதத்தில் (37 வாரத்திற்கும் குறைவாக) குழந்தை பிறத்தல்.

குறைவான எடையுடன் குழந்தை பிறத்தல்.

பிறந்தவுடன் அழாமல், மூச்சுவிடாமல் இருத்தல்.

மிக வேகமாக மூச்சு விடுதல், மூச்சுத்திணறல்

மிக அதிகமாக தொடர்ந்து கத்திக் கொண்டு இருத்தல்.

சரியாக பால் குடிக்க முடியாமை, சுறுசுறுப்பில்லாமை.

பால் குடித்தபின் மூச்சுத்திணறல் _ எதுக்களித்தல்

குழந்தையின் உடல் உஷ்ணம் மிகக் குறைதல்.

வலிப்பு (ஜன்னி) வருதல்.

ஆபத்தான பிறவிக் குறைபாடுகள்.

பிறந்த 24 மணி நேரத்திற்குள் மஞ்சள்காமாலை ஏற்படுதல்.

பிறந்த 24 மணிக்குள் மலம், 48 மணிக்குள் நீர் போகாமை.

வாந்தி & வயிற்றுப்போக்கு.

குழந்தையின் எப்பகுதியிலாவது ரத்தம் கசிதல்.

வயிறு வீக்கமாக இருத்தல்.


***


குறைமாத குழந்தைக்கு அதிக கவனம் தேவை

குழந்தையின் உஷ்ணம் குறைய வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.

தேவைப்படின் வார்மர் (Warmer) இங்குபேட்டர் (Incubater) வைத்து பாதுகாக்க வேண்டும்.

பால் குடிக்க முடியாத நிலையில் _ ஊசி மூலம் குளுக்கோஸ் செலுத்தவும்.

பால் குடிக்காத குழந்தைக்கு _ தாய்ப்பாலை சங்கில் எடுத்து ஊட்ட வேண்டும்.

இக்குழந்தைகளை நோய்கிருமிகள் எளிதாக தாக்கும்.

இக்குழந்தைகளை குளிப்பாட்டுவதை தவிர்க்கவும்.



***

நன்றி ஈகரை.


***


"வாழ்க வளமுடன்"

4 comments:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் பிரபா தாமு

தாய்மார்களூக்கு பயனுள்ள அறிவுரைகள்
பகிர்வினிற்கு நன்றி

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Asiya Omar சொன்னது…

நலமா? அருமை பிரபா.வாழ்த்துக்கள்.வலைச்சரத்தில் மோகன் குமார் உங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.பாராட்டுக்கள்.

prabhadamu சொன்னது…

வாங்க cheena (சீனா). உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.


:)

prabhadamu சொன்னது…

நன்றி ஆசியா (asiya omar) அக்கா. உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.

மிக மிக மகிழ்ச்சி அக்கா. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா.

:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "