...

"வாழ்க வளமுடன்"

23 செப்டம்பர், 2010

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நாம் அனைவரும் ருசித்து உண்ணும், அன்னாசிப் பழத்தின் சிறப்பையும், மருத்துவப் பயனையும் அறிந்துகொள்வோம்.

*

அன்னாசி பழவகைகளில் வாழைப் பழத்திற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது. அனானஸ், பினா எனவும் அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Ananus Comosus.


*

மருத்துவத் துறையில் இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றம், தொழில் நுட்பத் திறன் மற்றும் மருந்து வகைகள், கண்டுபிடிப்புகள் போன்றவை பல நோய்களை அறவே ஒழித்திடும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை நினைத்து பெருமைப்பட்டாலும் இயற்கையிலேயே, உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் ‘உணவே மருந்து’ என்ற கருத்தில் பழ வகைகளும் முக்கியம் என்பதால் அவற்றை என்றுமே ஒதுக்கக்கூடாது.

*

எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் அனைத்து மூலப் பொருட்களும் அமைந்திருப்பதோடு, நறுமணமும் இனிய சுவையும் கொண்ட அன்னாசிப்பழத்தின் சிறப்பு சற்று வித்தியாசமானதாகவும் பல வித நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுகிறது.


*

அன்னாசியின் பூர்வீகம் தென் அமெரிக்க நாடான பிரேஸில் ஆகும். 15ம் நூற்றாண்டில் கொலம்பஸ் மூலம் கொண்டுவரப்பட்ட இப்பழம் முதலில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், செல்வந்தர்களின் பழமாக இருந்தது. இப்போது அனைத்து நாட்டிலும் அனைவரும் பெறுமளவில் தாராளமாகக் கிடைக்கின்றது.

***

அன்னாசியில் உள்ள சத்துக்கள்:

100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் வைட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது.

*

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

*

அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு. எனவே உணவில் சத்துப் பொருட்களை உடனடி ஜீரணமாகச் செய்வதில் அன்னாசிக்கு நிகர் வேறு பழம் கிடையாது.

*

இதன் காரணமாகவே மேல்நாடுகளில் இறைச்சி உணவு சாப்பிடும் அனைவரும், தாங்கள் சாப்பிடும்போது அன்னாசிப் பழத்துண்டுகளையும் சேர்த்து சாப்பிடுவது பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

*

சிலர் கோழிக்கறியுடன் சேர்த்து சமைப்பதும் உண்டு.


***

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்:

1. அன்னாசிப் பழச்சாறும் ஜீரணச்சக்தியை விரைவுபடுத்தும் என்பதுடன் சத்துணவு ஆகும். இச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நோயால் அவதிப்பட்டு உடல் பலவீனமானவர்கள் நன்கு உடல் தேற விரைவில் ஆரோக்கியமடைவார்கள்.

*

2. மேலும் இப்பழச்சாறு சிறுநீர் கழிவை தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும்.

*

3. குடல் புண்களை அழிக்கும் சக்தியும், நீண்ட நாள் மலச்சிக்கலையும் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

*

4. உடலில் தோன்றும் மருக்கள் கால்ஆணி ஆகியவற்றுக்கும் அன்னாசிப் பழம் அருமருந்தாகும்.

*

5. பாடகர்கள் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும்.

*

6. இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம். ரத்தசோகை, மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது.

*

7. நாம் கூட அன்னாசிப்பழ ரசம், பாயசம், ஜாம் வைத்து விருந்துகளில் பரிமாறுவது என்பது வழக்கம் தானே. முக்கியமாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் அவர்களது உணவாக இதை அடிக்கடி பயன்படுத்துவது நல்ல ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் அவர்களுக்கு அளிப்பதோடு பசியையும் தூண்டும்.


*

8. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

*

9. இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

*


10. இவ்வாறாக
அன்னாசிப் பழத்தின் பயன் அறிந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் அடிக்கடி உபயோகித்து, வாழ்க்கை வாழ்வதற்கே என்று நலம் பெற பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

***

அன்னாசி பழத்தில் சமையல் குறிப்பு:



அன்னாசிப்பழ கடலைமாவு அல்வா

நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த அன்னாசிப் பழ கடலைமாவு அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள் . இதோ உங்களுக்கான செய்முறை.

தேவையான பொருள்கள்:

அன்னாசிப்பழச்சாறு - 1 கப்
கடலைமாவு - 1/2 கப்
அஸ்கா சர்க்கரை - 1/2 கப்
உருக்கிய நெய் - 1/2 கப்
முந்திரி - 7 பருப்புகள்,
திராட்சை - 6
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

1. அன்னாசிப்பழச் சாறுடன் கடலை மாவைக் கரைத்துக் கொள்ளவும்.

*


2. ஒரு பாத்திரத்தில் அஸ்காவுடன் தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும், மிதமான தீயில் அன்னாசிக் கலவையை அதில் சேர்த்துக் கிளறுங்கள்.

*

3. அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி விடுங்கள்.

*

4. இதில் ஏலப்பொடி, முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.


***



அன்னாசிப் பழ பாயாசம்

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த அன்னாசிப் பழம் 1
சக்கரை 200 கிராம்
பாதாம் பருப்பு 50 கிராம்
பால் 250 கிராம்
பேரிச்சம் பழம் 100 கிராம்
முந்திரிப் பருப்பு 25 கிராம்
கிஸ்மிஸ் பழம் 25 கிராம்
குங்குமப் பூ சிறிதளவு

செய்முறை:

1. அன்னாசிப் பழத்தை, தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக்கவும்
*


2. பாதாம் பருப்பை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.

*

3. அன்னாசிப் பழத்தை மிக்ஸியில் போட்டு, சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*


4. சக்கரையை, சாற்றில் கலந்து, அடுப்பில் வைத்து அடியில் பிடித்துக் கொள்ளாமல் கிளறி விடவும்.

*


5. பழச்சாறு கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்.

*


6. பாதாம் பருப்பை, தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

*

7, பாலை நன்கு காய்ச்சியபின், அரைத்த பாதாம் பருப்பை அதில் சேர்க்கவும்.

*


8. கொதித்த பழச்சாற்றையும், பாதாம் பருப்பு கலந்த பாலையும் ஒன்றாக கலக்கவும்

*


9. வறுத்த முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் பழங்கள் அனைத்தையும் சேர்த்து பரிமாறவும்

*

10. :)

*


நன்றி யாழ் தளம்


***


நன்றி யாழ் தளம்.
நன்றி ஈகரை.

***

"வாழ்க வளமுடன்"

3 comments:

சசிகுமார் சொன்னது…

http://vandhemadharam.blogspot.com/2010/08/googleyahoobing-search-engine.html

See this link

prabhadamu சொன்னது…

நன்றி சசி நண்பா.

உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பா.

prabhadamu சொன்னது…

/// ers கூறியது...
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்
//

நன்றி நண்பா இணைந்து விட்டேன்.

உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "