இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தேயிலை முட்டை
1. முட்டை சத்துள்ள ஒரு உணவு வகையாகும். நாள்தோறும் ஒரு முட்டையைச் சாப்பிட்டால், அது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.
*
2. சீனத் தனிச்சிறப்பு மிக்க முட்டை தயாரிப்பு முறை இதுவாகும். இந்தியாவை போல, சீனாவும் உலகில் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகும்.
*
3. சீன உணவு வகைகளைத் தயாரிப்பதில் சில வேளைகளில் தேயிலை பயன்படுத்தப்படுகின்றது.
***
தேவையான பொருட்கள்:
முட்டை 6
தேயிலை சிறிதளவு
சமையல் எண்ணெய் 5 மில்லி லிட்டர்
காய்ந்த சிவப்பு மிளகாய் 2
சமையல் மது 10 மில்லி லிட்டர்
சோயா சாஸ் 20 மில்லி லிட்டர்
உப்பு 2 தேக்கரண்டி
சர்க்கரை 5 கிராம்
நல்லெண்ணெய் 3 கிராம்
மிளகுத் தூள் சிறிதளவு
சீன இலவங்கப்பட்டை 1
இஞ்சி 2 துண்டுகள்
பூண்டுப்பல் 3
*
செய்முறை:
1. முதலில் முட்டைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள். பிறகு, ஒரு வாணலியில் அவற்றை போடுங்கள். வாணலியில் போதுதியளவு தண்ணீரை ஊற்றவும்.
*
2. வாணலியில் முறையே, மிளகுத் தூள், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேயிலை, பூண்டு சீன இலவங்கப்பட்டை ஆகியவற்றை போடுங்கள்.
*
3. முட்டைகளை வேகவிடுங்கள். இந்தப் போக்கில், சோயா சாஸ், சமையல் மது, உப்பு ஆகியவற்றை வாணலியில் சேர்க்கலாம்.
4. வாணலியிலுள்ள நீர் கொதித்த பின், சர்க்கரையை போடலாம். சமையல் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் இதில் ஊற்றலாம்.
*
5. மேலும் 10 நிமிடங்கள் வேகவிடுங்கள். இப்போது, முட்டைகள் வேகவைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீரிலிருந்து வெளியே எடுக்க வேண்டும்.
*
6. ஒரு பெரிய தேக்கரண்டி மூலம் எடுத்து அவற்றின் தோலை லைசாக விரிசல் விடுவது போல் தட்டிக்கொள்ளுங்கள். ஆனால் தோலைத் தனியே நீக்கக் கூடாது.
*
7. பிறகு, அவற்றை மீண்டும் வாணலியின் சூப்பில் மீண்டும் போடுங்கள். தொடர்ந்து கொதிக்க வையுங்கள். மேலும் அரை மணி நேரம் தேவைப்படும்.
*
8. உடனடியாகச் சாப்பிடலாம். ஆனால், அவற்றை சூப்பில் அப்படியே வைத்தால், மறு நாள் இந்த முட்டைகள் மேலும் சுவையாக இருக்கும்.
*
9. கோடைகாலத்தில் தயாரிக்கப்பட்ட முட்டைகள் குளர் பெட்டியில் வைத்தப் பின் அதன் சுவை மேலும் அருமை.
10. ஒரு சிறிய குறிப்பு:
முட்டைகளை வேகவைக்கும் போது, குளிர் தண்ணீர் தேவைப்படும். இப்படி செய்தால், வேகவைக்கும் போது, முட்டையின் தோல் எளிதாக உடைந்து போகாது.
***
நன்றி சீன வானொலி.
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக