இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இரத்த வகைகள்.....
மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இரத்தம் செலுத்துவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் காக்க முடியவில்லை.
1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. “A” வகை ரத்தம், 2. “B” வகை ரத்தம், 3. “AB” வகை ரத்தம் 4. “O” வகை ரத்தம். இவற்றில் “A” வகை ரத்தத்தை A1, B2 என்ற துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
இரத்தப் பிரிவுகளில்... A வகையினர் 42%ம், ஆ வகையினர் 8%ம், AB வகையினர் 3%ம், O வகையினர் 47%ம் மனிதர்களில் அமைந்துள்ளனர். ‘O’ வகை ரத்தமானது பொது ரத்ததானத்திற்குத் தகுதியானது அதனை “Universal Donor” என்பார்கள். ஏனென்றால் ‘O’ வகை ரத்தமுள்ளவர்கள் A, B, AB போன்ற ரத்த வகையினருக்கும் ரத்தம் கொடுக்கலாம்.
அதுபோன்று AB ரத்த வகையினரை Universal Recipient என்று அழைப்பார்கள். இவ்வகை ரத்தமுள்ளவர்களுக்கு O, A, B வகை ரத்தங்களில் எதனையும் செலுத்தலாம் (ஆயினும் அந்தந்த வகை ரத்ததிற்கு அந்தந்த வகை ரத்தம் செலுத்தும் முறைதான் சிறந்தது)
புதிய இரத்த வகைகள் :
ரத்தப்பிரிவுகளைக் கண்டுபிடித்த பின்னர், ஒரே ரத்த வகையைத் தானம் செய்த போதிலும் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக மருத்துவ அறிஞர்கள் இரத்தம் சம்பந்தமான தொடர் ஆராய்ச்சிகளில் இறங்கினர். Rh ரத்த வகையைக் கண்டுபிடித்தனர் A, B, AB, O ரத்த வகைகள் 1900லும், Rh ரத்த வகைகள் 1940-லும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தப் புதிய ரத்த வகையானது Rhesus என்ற குரங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் Rh-group என்று பெயரிடப்பட்டது. இது Rh – positive group என்றும் Rh – negative group என்றும் பிரிக்கப்பட்டது.
இதன் பின்னர்... A வகை ரத்தம் உள்ள ஒருவருக்கு A வகை ரத்தம் செலுத்தும்போது Rh வகையும் ஒற்றுமையாக அமைய வேண்டும் என்ற புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது A வகையினர் Rh+ ஆக இருந்தால் அவர்களுக்கு A வகை Rh+ ரத்தம் தான் கொடுக்க வேண்டும். Rh நெகடிவ் உள்ளவருக்கு Rh நெகடிவ் ரத்தமே சேரும்.
பாதுகாப்பான ரத்தம் செலுத்தும் முறைகள் :
இரத்தம் பெறுபவர், தருபவர் இருவரின் ரத்த வகையும், ஒன்றாக இருக்கவேண்டும். இரத்தம் வழங்குபவருக்கு எவ்வித தொற்றுநோய்களும் இருக்கக் கூடாது. (உம். மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எய்ட்ஸ்.
இரத்ததானம் செய்பவருக்கு ரத்தம் போதுமானளவு இருக்கவேண்டும் (HB 8% க்கு மேல் தேவை). இளைஞர்கள், நடுத்தர வயதினர் ரத்தம் வழங்கலாம். 60 வயதிற்கு குறைந்தவராக இருத்தல் அவசியம். ஒரு முறை ரத்தம் கொடுத்தவர் குறைந்தது மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ரத்தம் கொடுப்பது நல்லது. ரத்தம் செலுத்தும் முன்பு Cross matching செய்ய வேண்டும்.
இரத்த தானம் ஏன்?
இரத்த சோகை நோய்களில் மிகக் கொடுமையானது தலாசீமியா என்னும் நோய். இந்நோய் உள்ள குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கொருமுறை வீதம், ஆயுள் முழுவதுமே இரத்ததானம் தேவைப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய ரத்தசோகை நோய்.
கருவிலுள்ள குழந்தையின் ஹீமோகுளோபின் குழந்தையாகப் பிறந்தவுடனும் மாறாமல் இருப்பதால், உயிர்வாழ புது ரத்தம் தேவைப்படுகிறது. இந்நோய் தாக்கிய 3 -4 வயது குழந்தைகளுக்கு 6 வாரங்களுக்கு ஒரு தடவையாவது ரத்ததானம் கொடுக்க வேண்டும். வளர, வளர அடிக்கடி ரத்தம் தேவைப்படும்.
இதுபோன்ற ரத்தசோகை பீடித்த ஆயிரக்கணக்கானோர் மாற்று ரத்தம் பெற்றே உயிர் வாழ்கின்றனர். விபத்து ஏற்பட்டு இரத்தமிழந்தவர்கட்கு மட்டும்தான் ரத்ததானம் பயன்படுகிறது என எண்ண வேண்டாம். குறிப்பிட்ட காலங்களில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைப் போல, ரத்ததானம் செய்து பல உயிர்களை வாழச் செய்யலாம். மேலும் ரத்ததானம் செய்பவர்களுக்கு இருதய நோய் வருவது குறைவு என்று ஓர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
ஹீமோபிலியா :
இரத்தம் தொடர்பான வியாதிகளில் ஒன்று ஹீமோபிலியா. இது பெரும்பாலும் ஆண்களையே தாக்குகிறது. இது மரபு அணு சார்ந்த பிறவிக் கோளாறு. இதனால் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் எளிதில் உறையாமல் இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும்.
இரத்தம் உறையச் செய்யும் செயல் முறைகளில் 8வது காரணி இல்லாமல் இருப்பது அல்லது குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இரத்தத்தின் உறையும் தன்மையில் ஏற்படும் குறைபாடு நோயான ஹீமோபிலியாவை மாற்றுமுறை மருத்துவமான ஹோமியோபதி மூலம் பெருமளவு கட்டுப்படுத்த இயலும்.
இதற்கு பயன்படும் முக்கியமான ஹோமியோபதி மருந்து:
பாஸ்பரஸ் இரத்தம் கசியும் வியாதிகள் அனைத்தும் ஹீமோபிலியா அல்ல. இரத்தம் உறைவதில் ஏற்படும் கோளாறுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன.
***
நன்றி கீற்று.
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக