...

"வாழ்க வளமுடன்"

06 செப்டம்பர், 2010

டயட் கோக், டயட் பெப்ஸி -ஆபத்தானவை?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நாம் விரும்பி அருந்தும் பானங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக அவசியம். பெரும்பாலும் கோக்,பெப்ஸி உடலுக்கு தீமை விளைவிக்கும் என்று பொதுவாகத்தான் தெரியும்.

ஆனால் அதில் என்னென்ன ஆபத்தான பொருட்கள் உள்ளன? என்று பெரும்பாலும் நமக்குத்தெரியாது.

இப்போது டயட் கோக், டயட் பெப்ஸி என்று கலோரி இல்லாத பானம் என்று விற்பனை செய்கிறார்கள். இவற்றில் இனிப்புக்கு சர்க்கரை சேர்ப்பதில்லை.

ஆதலால் இதைக் குடித்தால் உடலில் சர்க்கரை அளவு கூடாது, நல்லதுதான், ஆனால் சர்க்கரைக்குப் பதில் ASPARTAME அஸ்பார்ட்டேம் என்ற செயற்கை இனிப்பூட்டும் பொருளைச் சேர்க்கிறார்கள்.

இந்த அஸ்பார்ட்டேம் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். அஸ்பார்ட்டேம் மூன்று பொருட்களால் ஆனது.1. அஸ்பார்டிக் அமிலம்,பினைல் அலனின், மெதனால்.

1.அஸ்பார்ட்டேம் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் உகந்ததல்ல!

2.டயட் பானங்களும், சூயிங் கம் களிலும் இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

3.அஸ்பார்ட்டேம் பிறவிக்கோளாறுகளையும், மூளைவளர்ச்சிக்குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது.

4.குழந்தைகளுக்கு இனிப்பு நோய், வலிப்பு, வன்முறை எண்ணங்கள், புத்திக் குறைவு, மூளைக்கட்டிகள் போன்றவற்றை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

1981 ம் ஆண்டு அஸ்பார்ட்டேம் உணவுப் பொருட்களில் உபயோகப்படுத்தலாம் என்று அமெரிக்க உணவுக்கழகம் அறிவித்தது. ஆயினும் மரபணு நோயான ”பினைல் கீடனூரியா” உள்ளோருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இது உகந்ததல்ல என்று குறிப்பிடக்கோரியுள்ளது.

A S C H அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சிக்கழகம் என்ன கூறுகிறது என்றால்:

உலகில் அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்ட பொருள் அஸ்பார்ட்டேம்( நல்ல பொருள் என்றால் இவ்வளவு ஆராய்ச்சி தேவையில்லையே!!!). இது மனிதருக்கு உகந்ததுதான். சிறு அளவு பினைல் கீடனூரியாப் பிரச்சினை உள்ளது உண்மைதான் என்று கூறுகிறது.

2005ல் ரமாஸ்ஸினி புற்றுநோய்க் கழகம் 1800 எலிகளில் மூண்ரு வருடம் தொடர் ஆராய்ச்சிக்குப்பின் லிம்போமா, லுகெமியா போன்ற வியாதிகள் வரும் வாய்ப்பிருப்பதைக் கண்டுபிடித்தது.

பார்மால்டிஹைட் என்ற இன்னொரு உப பொருள் அஸ்பார்ட்டேமால் உடலில் உண்டாகிறது. 14.5.2009 அன்று தேசிய புற்றுநோய்க் கழகத்தின் Laura E. Beane Freeman, Ph.D. லாரா என்ற ஆராய்ச்சியாளர் பார்மால்டிஹைடால் 37% புற்றுநோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம் என்று குறிப்பிடுகிறார். ஃபார்மால்டிஹைட் ஏன் புற்றுநோய் உண்டாக்குகிறது என்பதற்கு சரியான ஆதாரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. (http://dorway.com/dorwblog/?p=1943#more-1943).

டாக்டர்.ரஸ்ஸல், மிசிசிபி நரம்பியல் நிபுணர்-அஸ்பார்ட்டிக் அமிலம் தீவிரமான நரம்பியல் நோய்களுக்குக் காரணமாக அமைகிறது என்கிறார்இந்தப்பக்கத்தில் படிக்கலாம்..இவற்றை உண்பதால் கீழ்க்கண்ட நோய்கள் வருகின்றன என்று கூறுகிறார்.

Multiple sclerosis (MS)
ALS
Memory loss
Hormonal problems
Hearing loss
Epilepsy
Alzheimer's disease
Parkinson's disease
Hypoglycemia
Dementia
Brain lesions
Neuroendocrine disorders
அஸ்பார்ட்டேம் அதிகரித்தால் வரும் நோய்கள்:

1.பிறவிக்குறைபாடுகள்-சாதாரண மூளை குறைபாடுகளிலிருந்து மூளைவளர்ச்சிக்குறைவுவரை..

2.மூளை புற்றுநோய்-1981ல் FDA புள்ளிவிபரம் அஸ்பார்ட்டேமால் மூளைப் புற்றுநோய் வருவது கவலை அளிக்கிறது என்று குறிப்பிடுகிறது.

3.நீரிழிவு நோய்- நோய்க்கட்டுப்பாடு குறைகிறது. கண் பார்வை இழத்தலை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புத்தளர்ச்சியை உண்டாக்குகிறது.

4.மன நிலை மாற்றங்கள்-அஸ்பார்ட்டேம் மனநிலையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மனச்சோர்வு, மாறும் மனநிலை ஆகியவை அஸ்பார்ட்டேம் உபயோகித்ததை நிறுத்தினால் குறைகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

5.வலிப்புநோய்-அஸ்பார்ட்டேம் வலிப்புநோயையும் ஏற்படுத்துகிறது என்பதைப் பார்த்தோம். இதனை உட்கொண்ட விமான ஓட்டிகளுக்கு தலைவலி, வலிப்பு வந்ததாகவும் தெரிகிறது.

அஸ்பார்ட்டேம் வியாதி: இது அச்பார்ட்டேமால் ஏற்படும் நோய்க்குறிகளின் தொகுப்பாகும். தலைவலி, காதில் வித்தியாசமான சப்தங்கள் வருதல், பேச்சுக்குளறுதல், ஆகியவை இதில் அடங்கும்.

30 வருடங்களாக அஸ்பார்ட்டேம் ஒரு தீய பொருள் என்று பல ஆராய்ச்சிகள் குறிப்பிட்டும், பலர் இதனால் பாதிக்கப்பட்டும், இறந்தும் போயிருந்தாலும் உலகின் பல சுகாதார அமைப்புக்கள் இதனைத் தடைசெய்யவில்லை.

ஆராய்ச்சியாளர் ரஸ்ஸல் (Russell Blaylock, M.D.) அஸ்பார்ட்டேம் உள்ள பானங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விஷபானங்கள் என்று குறிப்பிடுகிறார்.

மருத்துவ உலகைத் தொடர்ந்து கவனித்தால் மேற்கு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட நல்ல மருந்துகள் அவர்களாலேயே தடை செய்யப்படுவதும், அதற்குப்பதில் வேறு புது மருந்துகள் வருவதும், அதற்கு ஆதாரமாக ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிடுவதும் சகஜமான ஒன்று.

இதில் உள்ள அரசியலுக்குள் நாம் போவதை விட நம்மைச் சேர்ந்தவர்களை காத்துக்கொள்வது தலையாய கடமையாகும். மேற்கத்திய உணவுக்கழகங்கள் அங்கீகரிக்கும் பல உணவுப் பொருட்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இந்தக்கட்டுரையையும் அப்படியே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு நாட்கள் செலவு செய்து இதை நான் எழுதியுள்ளேன்.

நீங்களும் மேலும் படியுங்கள். எனக்குத் தெரியாததையும் சொல்லுங்கள். நாம் விழிப்புணர்வு பெறுவது அவசியம். நல்ல அடுத்த தலைமுறை மக்களை உருவாக்க நாம் செய்யும் கடைமையும் இதுவே!!



***

by தேவன் மாயம்
நன்றி தமிழ்த்துளி.



***

"வாழ்க வளமுடன்"

4 comments:

தாமரை சொன்னது…

really usable post

பெயரில்லா சொன்னது…

நல்லவிசயங்க.
இன்னும் டயட் கோக்குலேயும் சர்க்கரை அளவு அப்படியொண்ணும் குறைவு இல்லேண்ணு சொல்றாங்களே. அது சரியா?

prabhadamu சொன்னது…

நன்றி asvin. உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.

prabhadamu சொன்னது…

வாங்க பெயரில்லா நண்பரே. நன்றி நண்பா. உங்கள் வரவு நல்வரவு ஆகுக.


உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.

நீங்கள் சொல்லுவது பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை நண்பா. இருந்தாலும் டயட் கோக்கும் உடலுக்கு அவ்வளவாக நல்லது இல்லை.

எப்போது ஒரு வாட்டி குடித்தால் பரவாயில்லை. " அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நன்ஞ்சு " என்ற பழமொழியை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக் கொண்டால் நல்லது. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "