...

"வாழ்க வளமுடன்"

07 செப்டம்பர், 2010

சீழ் ( கட்டியில் இருந்து வரும் ) என்பது என்ன..?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



அடிபட்ட காயம் அழுகும்போது கசிந்து வெளிப்படும் ஒழுக்கே சீழ் ஆகும். தொற்றை எதிர்த்துப் போரிடுவதற்காக அமைந்த குருதியிலுள்ள சீர்குலைந்த வெள்ளை அணுக்களே சீழாகும்.

வெள்ளையணுக்கள் குருதியில் வாழ்ந்து மிகுந்த தொற்றை எதிர்த்துப் போரிடத் தயார் நிலையில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது வெட்டு பழுதுபடும்போது ஏற்படும் தொற்றை எதிர்க்க வல்ல அணுக்கள் வெள்ளையணுக்கள் எனப்படும்.


குண்டூசியின் தலைக் கொண்டை அளவு குருதியில் சாதாரணமாக 5000 வெள்ளணுக்கள் இருக்கும். ஆனால் மிக அழுகிய புண்ணில் முப்பதாயிரம் வெள்ளணுக்கள் இருக்கலாம். ஏனெனில் அந்த இடத்தில் வெள்ளணுக்கள் ஒன்று திரண்டு பலவாய் பெருகிக்கொள்கின்றன.

குருதியில் உள்ள எதிர்பொருள்கள் கிருமிகளை எதிர்த்துப் போரிட உதவுகின்றன. அவ்வாறு போரிட்டுக் கொல்லும்போது வெள்ளணுக்கள் அங்குச் சென்று அவைகளை அழித்துவிடுகின்றன.


குருதியில் எதிர்த்து நின்று தொற்றை போக்கப் போதுமான தற்காப்புப் பொருள்கள் இல்லையென மருத்துவர் ஐயங்கொண்டால் அதே தொழிலைச் செய்யும் உயிர் எதிர்ப் பொருள்களைக் கொடுப்பார்.


***

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்.
நன்றி: கீற்று.


***


"வாழ்க வளமுடன்"

2 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்ல தகவல் .
பகிர்வுக்கு நன்றி .
தொடருங்கள் .
வாழ்த்துக்கள் .

prabhadamu சொன்னது…

நன்றி நண்பா ( நண்டு @நொரண்டு -ஈரோடு ) உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "