...

"வாழ்க வளமுடன்"

26 ஆகஸ்ட், 2010

நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

உட்கார்ந்து ரசித்து ருசித்துச் சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் மனிதன் ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. மாறிவரும் சுற்றுச்சூழலும் மனிதர்களிடம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அடர்த்தியான நலன்களை அள்ளித்தரும், புத்துணர்வு, சக்திïட்டும் பழ மற்றும் காய்கறிச் சாறுகள் நல்ல தேர்வு என்று சொல்லலாம்.

சத்துகள் செறிந்த பழ, காய்கறிச் சாறுகள், `வைட்டமின்- தாது உப்புகளின் காக்டெய்ல்' என்று அழைக்கப்படுகின்றன.

உடல் ஆரோக்கியத்துக்கு அதிகமாகப் பலனளிக்கும் அதேநேரம், உடம்பை எந்த வியாதியும் நெருங்காமல் தடுக்கும் பணியையும் பழச்சாறுகள் செய்கின்றன. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் பற்றாக்குறையை உடனே சரிசெய்ய பழச்சாறு பருகுவதே சிறந்த வழி.

மனித உடம்பில் பழ, காய்கறிச்சாறுகள் மூன்று முக்கியமான பணிகளை ஆற்றுகின்றன. அதாவது, சத்துகளை அளிப்பது, பாதுகாப்பாக இருப்பது, குணமாக்குவது.

பழங்களும் காய்கறிகளும் அதிக அளவிலான கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளன. அது உயிர் வாழவும், செயல்களைச் செய்யவும் தேவையான சக்தியை அளிக்கிறது. அவற்றின் மூலம் கிடைக்கும் அதிகஅளவிலான வைட்டமின்கள் உடலின் வேதிமாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.


பழ, காய்கறிச் சாறுகளின் தாது உப்புகளும், நுண் மூலக்கூறுகளும் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டுக்கு முக்கியமானவை. அவை சில உடம்புத் திசுக்களின் கட்டுமானப் பொருட்களாகவும் உள்ளன.

பழங்கள், காய்கறிகளின் பாதுகாப்பு விளைவுகள் அதிகம். அவற்றில் பைட்டோகெமிக்கல்கள், கார்ட்டினாய்டுகள், பயோபிளேவனாய்டுகள், ஐகோபீன் போன்றவை அடங்கியுள்ளன. இவை, உடம்பை புற்றுநோய், இதயநோய்கள் போன்றவற்றிலிருந்து காக்கின்றன.


பழங்கள், காய்கறிகளில் `ஆன்டிஆக்சிடன்ட்களான' பீட்டாகரோட்டின், வைட்டமின் சி, ஈ போன்றவை உள்ளன. அவை செல் தடுப்புச் சுவர்கள் சேதமடைவதிலிருந்து தடுக்கின்றன.


பழைய, இறந்த செல்களை உடம்பிலிருந்து வெளியேற்றும் பணியையும் காய்கறி, பழச்சாறுகள் செய்கின்றன. உப்புப் படிவுகள், சிறுநீரகத்தில் கற்களைக் கரைக்கும் பணியையும் செய்கின்றன.

காய்கறி, பழச் சாறுகளின் மருத்துவக் குணங்களும் பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டு வந்துள்ளன.


உதாரணமாக பீட்ரூட், கேரட் சாறுகள் உடம்பின் அடிப்படைத் தற்காப்பு அமைப்பை வலுப்படுத்துகின்றன. பசலைக்கீரை, வெள்ளரிச் சாறுகள் நல்ல சருமம், முடி, நகங்களுக்கு உதவுகின்றன.

சில பாதிப்புகள், உடல்நலக்குறைவுகளுக்கு உதவும் பழ, காய்கறிச் சாறுகள் பற்றிய விவரம்:

அசிடிட்டி: திராட்சை, பப்பாளி, கொய்யா, கேரட், பசலைக்கீரை.

பரு: திராட்சை, பேரிக்காய், பிளம், தக்காளி, வெள்ளரி, கேரட், உருளைக் கிழங்கு, பசலைக்கீரை.

ஒவ்வாமைகள்: இலந்தை, திராட்சை, பீட்ரூட் மற்றும் பசலைக்கீரை.

ரத்தசோகை: இலந்தை, உலர்பழம், ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு திராட்சை, கேரட், பசலைக்கீரை.

மூட்டு பாதிப்பு: புளிப்பு செர்ரி, அன்னாசி, புளிப்பு ஆப்பிள், எலுமிச்சை, வெள்ளரி, பீட்ரூட், கேரட், லெட்டூஸ் மற்றும் பசலைக்கீரை.

ஆஸ்துமா: அனைத்து பழ மற்றும் காய்கறிச் சாறுகள்.

சிறுநீர்ப் பை குறைபாடுகள்: ஆப்பிள், இலந்தை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட்.

ஜலதோஷம்: எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, கேரட், வெங்காயம் மற்றும் பசலைக்கீரை.

வாந்தி: ஆப்பிள், பேரி, திராட்சை, எலுமிச்சை, கேரட், பீட்ரூட், பசலைக்கீரை.

சர்க்கரை நோய்: புளிப்பு வகைப் பழங்கள், கேரட், லெட்டூஸ், பசலைக்கீரை.

வயிற்றுப்போக்கு: அனைத்து பழச் சாறுகளும்.

கண் குறைபாடுகள்: இலந்தை, தக்காளி, கேரட், பசலைக்கீரை.

தலைவலி: திராட்சை, எலுமிச்சை, கேரட், லெட்டூஸ், பசலைக்கீரை.

இதய நோய்கள்: சிவப்புத் திராட்சை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட், பீட்ரூட், பசலைக் கீரை.

உயர் ரத்தஅழுத்தம்: திராட்சை, ஆரஞ்சு, வெள்ளரி, கேரட், பீட்ரூட்.

`இன்புளூயன்சா' காய்ச்சல்: ஏப்ரிகாட், ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கேரட், பசலைக் கீரை, பீட்ரூட், வெள்ளரி.

சிறுநீரகக் குறைபாடுகள்: ஆப்பிள், கொய்யா, அன்னாசி, வெள்ளரி, பீட்ரூட்.

கல்லீரல் பிரச்சினைகள்: எலுமிச்சை, பப்பாளி, திராட்சை, கேரட், தக்காளி, பீட்ரூட், வெள்ளரி.

மாதவிலக்குப் பிரச்சினைகள்: திராட்சை, உலர் பழங்கள், செர்ரி, பசலைக்கீரை, லெட்டூஸ், டர்னிப், பீட்ரூட்.

அதிக உடல் எடை: அனைத்து காய்கறி மற்றும் பழச் சாறுகள்.

வயிற்றுப் புண்: இலந்தை, திராட்சை, முட்டைக்கோஸ், கேரட்


***

நன்றி மாலை மலர்.

***


"வாழ்க வளமுடன்"

5 comments:

Unknown சொன்னது…

ஆரோக்கியமான தகவல்கள் நண்பரே..அருமை..தொடருங்கள்..

Unknown சொன்னது…

வாழ்க வளமுடன்

GEETHA ACHAL சொன்னது…

பிரபா அருமை..எப்படி தான் இப்படி கண்டுபிடிச்சு போடுறிங்களே...சூப்பர்ப்...ஆழ்கடல் களஞ்சியம் ஒரு பெரிய ஆழ்கடல் தான்...எதாவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனே வரவேண்டிய இடம் இந்த ஆழ்கடல் தானுங்க....

prabhadamu சொன்னது…

நன்றி டாக்டர். உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும், கருத்துக்கும், உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!

"வாழ்க வளமுடன் நண்பரே" ( THE PEDIATRICIAN )

prabhadamu சொன்னது…

நன்றி கீதா அக்கா உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும், கருத்துக்கும், உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா!


////பிரபா அருமை..எப்படி தான் இப்படி கண்டுபிடிச்சு போடுறிங்களே...சூப்பர்ப்...ஆழ்கடல் களஞ்சியம் ஒரு பெரிய ஆழ்கடல் தான்...////

அக்கா ரொம்ப நன்றிக்கா. இந்த கருத்தை படிக்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்ப்படுத்து. என்னால் முடிந்த வரை இதில் நல்ல தகவலும், அனைவருக்கும் பயனுல்ல தகவலாக இருக்க எண்ணி இதில் இடுகிறேன்.




////எதாவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனே வரவேண்டிய இடம் இந்த ஆழ்கடல் தானுங்க....////


உங்களுக்கும், எல்லாருக்கும் இந்த தகவல் பயனுல்லதாக இருந்தால் எனக்கு என் கணவருக்கும் மிக்க மகிழ்ச்சியே.


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "