...

"வாழ்க வளமுடன்"

17 ஆகஸ்ட், 2010

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழிமுறைகள் சிலவற்றைக் காண்போம் வாருங்கள்...

***

* தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் மட்டுமே வசிப்பது அவசியம்.

* தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது நன்மை தரும்.

* கொழுப்புச் சத்து ௦அதிகம் உள்ள பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு வகைகள், மீன் வகைகளில் அதிக கொழுப்பு உள்ள சுரா, கெளுத்தி, மடவை, கானாங்கத்தை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* குளிர்ச்சி நிறைந்த உணவு வகைகள் குறிப்பாக வெண்பூசணி, சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பதார்த்தங்கள், தயிர் அசிட்டிக் அமிலம் அதிகம் உள்ள எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, புளிப்பு உள்ள திராட்சை போன்ற பழ வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

* அதிக காரமும் அதிக புளிப்பும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.

* எளிதில் ஜீரணமடையும் உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும்.

* மூச்சு விடுதல் சிரமம் என்பதால், வயிறு முட்ட உண்ணுதல் கூடாது.

* இரவு உணவு சாப்பிடுவதை 7 மணியளவில் வைத்துக்கொள்வது சிறந்தது.

* கீரை வகைகளில் தூதுவளை, முருங்கக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, சுண்டக்காய், சுண்ட வத்தல் ஆகியவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியம் தரும். இவை குறிப்பாக ஆஸதுமா நோய்க்கு மூல காரணமான சளியை அகற்றுகிறது.'

* உடற்பயிற்சி அவசியமாகும். குறிப்பாக, யோகாசனம் செய்வது இந்நோயால் ஏற்படும் மன உளைச்சலுக்கு சிறந்த மருத்துவமாக செயல்படுகிறது. மேலும் யோகாசனம் உள்ளுறுப்புகளை முறையாக வேலை செய்ய வைக்கிறது.

* யோகாசனத்தின் மிகப்பெரிய கொடையான மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நுரையீரலில் நச்சுத்தன்மை வெளியேற்றப்படுகிறது. சுத்தமான காற்றை உள்ளிழுக்கச் செய்வதன் மூலம் ரத்த சுத்திகரிப்பு செய்வதோடு மூச்சுக் குழலில் ஏற்படும் அடைப்புகளையும் நீக்குகிறது.

* சிறந்த ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு தியானப்பயிற்சி செய்துவந்தால் ஆஸ்துமாவை நாம் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல அதிலிருந்து பூரண குணமடைவதும் சாத்தியமே.

* நாடிசுத்திப் பிராணாயாமம், உஜ்ஜாயி பிராணாயாமம் மற்றும் ஆசனப் பயிற்சியையும் மூச்சுப் பயிற்சியையும் தகுந்த ஆசிரியரின் வழிகாட்டுதலோடு செய்யவேண்டும். மூச்சோடு இணைந்த உடற்பயிற்சி மட்டுமே ஆஸதுமா நோயிலிருந்து பூரண குணமளிக்கவல்லது என்பது நம் முன்னோர்களின் கருத்து.

* கருவுற்ற தாய்மார்கள் குழந்தைக்கு ஆஸதுமா நோய் வராமல் தடுப்பதற்கு, அவர்கள் உண்ணும் உணவு வகைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. மேற்குறிப்பிட உணவு முறைகளைப் பின்பற்றுவது நன்மை பயக்கும்.


***


நிகழ்வுகள்.காம்.


***


"வாழ்க வளமுடன்"

2 comments:

இமா க்றிஸ் சொன்னது…

எல்லாம் சரிதான் பிரபா.
//தூய்மையான காற்று// இது சனம் வசிக்கிற இடத்தில் இப்போ கிடைப்பது இல்லை. ;(

பின்ணணி நிறம் அல்லது எழுத்தின் நிறத்தை மாற்றினால் படிக்கச் சுலபமாக இருக்கும்.

prabhadamu சொன்னது…

நன்றி இமா அம்மா. உங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. நீங்கள் சொல்லுரதும் 100% உண்மைதான் அம்மா. இனி தூசி இல்லாத நாடு இருக்குமா என்பது சந்தேகம் தான்.


//// பின்ணணி நிறம் அல்லது எழுத்தின் நிறத்தை மாற்றினால் படிக்கச் சுலபமாக இருக்கும்.//////

இப்ப ஆழ்கடல் பதிவு படிக்க முடியுதா அம்மா. நீங்கள் நலமா? வீட்டில் செபா அம்மா வீட்டில் அனைவரும் நலமா?

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "