இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தற்க்காலத்தில் அனைவரிடமும் கைப்பேசி இல்லாதவர்கள் இல்லை. ஒரு பொருளின் சாதக பாதகம் என்று உண்டு அதுப் போல் கைப்பேசியிலும் உண்டு.*
இதை படித்தாவது கைப்பேசியில் அதிகம் கடலை போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் நண்பர்கலே!
சிலர் எங்குபார்த்தாலும் செல்போனில் பேசிய படியே இருப்பார்கள்.
*
பஸ்ஸில் பயணிக்கும் பொது, நடந்து திரியும் போதும், சாப்பிடும் போதும், படுக்கும் போதும், வழிபாட்டுத்தலங்களிலும், கல்லூரிகளிலும் காதுக்குள் எந்த நேரமும் செல்போன் இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கு இது நாகரீகமாகத் தெரிகின்றதோ என்னவோ.
அதிக நேரம் செல்போன்களை உபயோகிப்பதனால் வெளியாகும் மைக்ரோவேவ் கதிர்களினால் மூளையில் இரத்தக்கசிவு உண்டாகின்றது, மூளை திசுக்கள் பாதிப்படைகின்றது, அது இது என்று எவ்வளவு சொல்லியும் இன்னமும் கேட்டபாடில்லை.
***
செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கும் இளைஞரா நீங்கள். உஷார்!
*
அளவுக்கு அதிகமாக செல்போனில் பேசும் ஆண்களுக்கு ஆண்மை பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
*
டாக்டர் அசோக் அகர்வால் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்படி, ஆரோக்கியமான ஆண்கள் 23 பேர் மற்றும் ஆண்மைக்குறைவு பிரச்சனை உள்ள 9 பேர் ஆகியோரிடமிருந்து பரிசோதனைக்காக உயிரணுக்கள் எடுக்கப்பட்டன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
*
இந்த உயிரணுக்களை செல்போன்களில் இருந்து வரக்கூடிய 850 மெகா ஹெர்ட்ஸ் ரேடியேஷனுக்கு உட்படுத்தியபோது, செல்போன் அதிர்வலைகளால் உயிரணுக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்தது.குறிப்பாக, செல்போன்களை இடுப்புப் பகுதி, சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருப்பவர்கள் அல்லது நாளொன்றுக்கு குறைந்தது 4 மணிநேரத்துக்கும் மேல் பேசுபவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
*
இதனால், உயிரணுக்களின் நகரும் தன்மை, அவற்றின் வீரியத் திறன், மூலக்கூறு மாற்றம் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகிறது.
*
ஆரோக்கியமான ஆண்களை விட, அளவுக்கு அதிகமாக செல்போனில் பேசும் ஆண்களுக்கு சுமார் 6 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
*
எது உங்களுக்கு முக்கியம் என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்!
***
by barthee .
*
நன்றி ஈகரை.
***
0 comments:
கருத்துரையிடுக