...

"வாழ்க வளமுடன்"

26 ஜனவரி, 2010

சோயா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உடலுக்கு என்றும் நலம் தரும் இயற்க்கை பொருட்கள் அதிகம்... நமக்கு தெரிவது குறைவு.

இன்று சோயா பற்றி பார்க்கலாம்...




1. சோயா அவரை இனைத்தை சேர்ந்தது. இதன் தாயகம் கிழக்காசியா.

2. சோயா மனிதனுக்குத் தேவையான எல்லா அமினோ அமிலங்களையும், புரதச் சத்துக்கான சிறந்த மூலமாக உள்ளது.

3. சோயா ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ உண‌வு பொருட்களாகவும், பால் ( சோயா பால் ) பொருட்களாகவும் செய்யப்ப‌டுகிறது.

4. பெண்களுக்கு உண்டான ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை நீக்க சோயா நல்ல உணவாகும்.

5. இளமையாக இருக்க ( தக்க வைக்க ) உதவும் உணவு சோயா...

6. சோயா அவரையில் ஊட்டசத்து அதிகம். இதில் அதிக தாவர வெண்புரதம் உண்டு.


7. சோயா பாலில் இருக்கும் இரும்புச்சத்து நாம் குடிக்கும் மற்ற‌ பாலில் இருப்பதை விட 5 மடங்கு அதிகமாகும்.

8. சோயா பாலை அடிக்கடி குடித்தால் உடம்பில் உள்ள கொழுப்புச்சத்து குறைக்கிறது.

9. டின்னில் இருக்கும் சோயா பாலை விட, நாமே தயாரித்து குடிப்பது நல்லது...

10. இவ்வளவு சத்து இருக்கும் சோயா பாலை இனி கட்டாயம் பருகுங்கள்...


இனி வரும் தகவல் தினகரன் நாளிதழில் கிடைத்தது.

( நீரழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் ஆபத்து எப்போதும் மிக அருகிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாள் ஆக ஆக பாதிப்புகள் கூடுமே தவிர நிச்சயம் குறையாது.

இந்நிலையில் டைப்-2 வகை நீரழிவு நோயாளிகளுக்கு சோயா சிறப்பான அளவுக்கு கைகொடுக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது. இல்லீனாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீரழிவு நோய் பாதித்த சிலருக்கு சோயா புரோட்டீன் சத்தும், மற்றவர்களுக்கு மிருக புரோட்டீன் சத்தும் தரப்பட்டன.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இவர்களை சோதனை செய்து பார்த்தனர். அப்போது சோயா புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு சிறுநீரில் காணப்படும் புரோட்டீன் 10 சதவீதம் குறைந்து போய் இருந்தது. ஆனால் மிருக புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு புரோட்டீன் அளவு உயர்ந்து கொண்டே போனது. இந்த இடத்தில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது சோயாவானது, சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கும் வேலையைச் செய்யாமல் அதை நிலைநிறுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபடுகிறது.

சோயா மறைமுகமாக 2 வகைகளில் நன்மை செய்கிறது.

அதாவது சிறுநீரில்சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் கொழுப்பான எச்டிஎல் கொழுப்பை 4 சதவீதம் கூடுதலாக உண்டாக்குகிறது. மற்றொன்று நல்ல கொழுப்பான எச்டி.எல்; அளவு அதிகரிப்பதால் இது இதயத்துக்கும் நல்லதுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இது விஷயத்தில் மேற்கொண்டு தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. )

நன்றி:
தினகரன் நாளிதழ்.

http://www.soya.be/

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "