இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நீரிழிவு நோய்க்கு இந்த உணவு மிகவும் நல்லது...
கார்போஹைட்ரேட் கம்மியாக உள்ள உணவு..
சிகப்பு அவல் மிகவும் சத்தும், பலமும் வாய்ந்தது...
இது எங்கள் வீட்டில் வாரம் 2 முறை செய்யும் சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்;
சிகப்பு அவல் - 2 கப் ( கட்டி அவல் )
வெங்காயம் - 2 மீடியம் சைஸ்.
பச்சை மிளகாய் - 3 ( காரம் அதிகம் வேண்டும் எனில் 4 எடுத்துக் கொள்ளலாம் )
கடுகு- 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தாளிக்க மட்டும்.
கறிவேப்பிலை -1 இணுக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை;
1. முதலில் அவலை தண்ணீர் ஊற்றி 2 முறை அலசவும். பிறகு நீர் வடித்து வைத்து விடவும்... அது ஊறி உதிரி உதிரியாக இருக்கும்....
2. வெங்காயத்தையும், பச்சை மிளகாயும் ( நீட்டாக அரிந்தது ) நறுக்கிக் கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
4. பிறகு வெங்காயம் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும். உப்பு அதிலே சேர்க்கவும்.
5. வெங்காயம் வதங்கியதும் அவலை அதில் போட்டு இரண்டு கிளறு கிளறி இறக்கவும்...
குறிப்பு;
இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம்...
தேவை எனில் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்..
சிகப்பு அவல் உடலுக்கு மிகவும் நல்லது...
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது மிகச் சிறந்த உணவு...
இதில் காய் போட்டும் செய்யலாம்...
பரிமாறும் அளவு
2 பேர்.

8 comments:
நல்ல ருசியாருக்கும்போல...
நன்றி அண்ணா. உங்க வருகைக்கு நன்றி...
ருசியும் இருக்கும். சத்தும் இருக்கும்....
செய்து தர ஆள் இல்லை என்ன செய்து..?
இவன்
தமிழன்.
உங்கலுக்கு செய்து தர அண்ணி இருக்காங்க இல்லையா? அவங்கல கேலுங்க அண்ணா.....
சமைத்து சாப்பிட்டுட்டு திரும்ப வந்து பின்னூட்டம் கொடுக்கிறேன் பிரபா.
நன்றி இமா அம்மா. கட்டாயம் செய்து பார்த்து சொல்லுங்க.
piraba, very yummy recipe. I will try this one very soon.
vaany
நன்றி வானாதி. கட்டாயம் செய்து பார்த்து சொல்லுங்க.
கருத்துரையிடுக