...

"வாழ்க வளமுடன்"

21 ஜூலை, 2015

குடை மிளகாய் இருக்கிறது உடல் ஆரோக்கியம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


எந்த வகையில் கற்பனை செய்து பார்த்தாலும் குடைக்கும், மிளகாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு ஏன் குடைமிளகாய் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. பெயர் என்னவாக இருந்தால் என்ன? குடைமிளகாய் பார்க்க கலர் கலராக அழகாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கிறது; அது போதும்.
குடைமிளகாயில் பல நோய்களை போக்கும், மருத்துவ குணம் இருப்பது இன்னும் விசேஷம். குடை மிளகாயின் சுவை, கிராமத்து மக்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. பொதுவாக, குடை மிளகாய் தென்மாநில சமையல்களில் யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை.

ஆனால் சைனீஸ் வகை உணவுகளில் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக, பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மஞ்சூரியன், சில்லி பிரைடு ஐட்டங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஓட்டல்களில் பல வகை சாலட்கள் குடைமிளகாயில் தயாரிக்கப்படுகின்றன. உணவை அழகுபடுத்தவும் பயன்படுகிறது.
குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் உள்ளன. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவை குணமாக பயன்படுகிறது. கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும். அந்நோய்களை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

பல்வலி, மலேரியா, மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் உள்ளது. குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை, குறைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்தும். இதில், கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். குடைமிளகாயில் உள்ள கேயீன் எனும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளை குறைக்கும்.


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடை     மிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து, 4 நிமிடம் வதக்க வேண்டும்.


பின்பு அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான வெண்ணெய் குடைமிளகாய் சாதம் ரெடியாகி விடும். குடை மிளகாய் சுவை சாப்பிட ஆரம்பத்தில் பிடிக்காது. சாப்பிட்டு பழகினால் அதன் சுவையை விட முடியாது.


***
படித்ததில் பிடித்தது,
***


"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "