...

"வாழ்க வளமுடன்"

23 பிப்ரவரி, 2012

மாணவர்களுக்கு வேர்க்கடலை அவசியம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.



படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள்.



மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.



நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.



மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.


அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.



கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.



இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.


***
thanks luxinfonew
***


"வாழ்க வளமுடன்"

6 comments:

Vetirmagal சொன்னது…

நாம் மறந்துவிட்ட ஒன்று. இதை நினைவு படுத்தியது மிகவும் நன்று.

இதை எல்லா வகையினர்க்கும் பொருந்துவது போல தொகுத்தது பாராட்டுக்குரியது.

நன்றி.

prabhadamu சொன்னது…

////நாம் மறந்துவிட்ட ஒன்று. இதை நினைவு படுத்தியது மிகவும் நன்று.

இதை எல்லா வகையினர்க்கும் பொருந்துவது போல தொகுத்தது பாராட்டுக்குரியது.

நன்றி.////


thanks :)

போளூர் தயாநிதி சொன்னது…

கடுமையான வேலையின் காரணமாக உங்களின் சிறந்த விருது பற்றி உங்களின் வலைக்கு வர இயலவில்லை விருதிற்கும் உங்களின் சிறந்த படைப்புகளுக்கும் எமது பாராட்டுகளும் நன்றிகளும் . தொடர்க......

போளூர் தயாநிதி சொன்னது…

கடுமையான வேலையின் காரணமாக உங்களின் சிறந்த விருது பற்றி உங்களின் வலைக்கு வர இயலவில்லை விருதிற்கும் உங்களின் சிறந்த படைப்புகளுக்கும் எமது பாராட்டுகளும் நன்றிகளும் . தொடர்க......

prabhadamu சொன்னது…

///போளூர் தயாநிதி கூறியது...
கடுமையான வேலையின் காரணமாக உங்களின் சிறந்த விருது பற்றி உங்களின் வலைக்கு வர இயலவில்லை விருதிற்கும் உங்களின் சிறந்த படைப்புகளுக்கும் எமது பாராட்டுகளும் நன்றிகளும் . தொடர்க......
////


thanks :)

prabhadamu சொன்னது…

thanks :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "