...

"வாழ்க வளமுடன்"

22 பிப்ரவரி, 2012

ஊட்டச்சத்தும் உணவு கட்டுப்பாடும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவையில் ஒன்றாகும். அவை மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் அடங்கிய சத்துக்களை கொண்டதாகும்.
மேலும் இவை கர்பிணி, தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மற்றும் நோயாளிகளை நோயிலிருந்து விடுவிக்க பெரிதும் உதவுகிறது. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவுகளின் வெயல்கூறுகள்:உடலில் நடக்கும் செயல்கூறுகளை அடிப்டையாகக் கொண்டு பத்திய உணவுகள் வகைப்படுத்தப்படுகிறது.அ) உடற்செயலியல் அடிப்டையில் உணவு வகைகள்:


1. சக்தி அளிக்கும் உணவுகள்:


1.  மாவு மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்களி உணவு வகைகள் ஆகும். உடலில் உள்ள அனைத்து உறுப்பக்களும் செயல்பட சக்தி அளிக்கிறது. (எ-டு) தானியங்கள் வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் உலர்ந்த பழ வகைகள், எண்ணெய், வெண்ணெய் மற்றும் நெய்.2.   உடல் கட்டுக்களை மேம்படுத்தும் உணவுகள்:
புரதச்சத்து அடங்கிய உணவு வகைகள் ஆகும். (எ-டு) பால், இறைச்சி, மீன், பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள்.

3. பாதுகாப்பான உணவுகள்:

புரதம், வைட்டமின் மற்றும ்தாதுப்பொருட்கள் கொண்ட உணவு வகை ஆகும். இவை உடற்செயல் மேம்பாடு, உடல் வெப்பத்தை மேம்படுத்துதல் தசை சுருக்குதல், நீர் உடல் நீரை சமநிலையில் வைத்தல் மற்றும் ரத்த உறைதலை தடுத்தல், உடல் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் இதயத் துடிப்பை சீராக வைத்தல், (எ-டு) பால், முட்டை, கல்லீரல், பழங்கள் மற்றும் காய்கறி வகைகள்.


சமூக செயல்பாடுகளின் அடிப்படையில் உணவு வகைகள்:
உணவு என்பது சமூகம் பண்பாடு மற்றும் மதம் கார்புக் கொண்ட மையப் பொருளாக விளக்குகிறது. மேலும் இலை அனபு, நட்புரிமை, மகிழ்ச்சியை மதம், சமூக மற்றும் குடும்ப நிகழ்ச்சியில் வெளிப்படுத்தவல்லதாகும்.
உளவியல் செயல்பாடுக் கொண்ட உணவு வகைகள்:


வினை மற்றும் சமூக தேவைகளை பூர்த்தியாவது மட்டுமின்றி மனிதனின் உணர்ச்சியையும் திருப்தி அடைய செய்ய வேண்டும்.
(எ-டு) வீட்டு அருஞ்சுவை உணவு செய்து பரிமாறினால் அதுவே அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாகும்.


ஆ) இந்திய மருத்துவ ஆராய்ச்சி செயலகம்: உணவு வகைகள்:

வ.எண் உணவு வகைகள் முக்கிய வகைகள்


1. தானியங்கள், குறுணிகள் மற்றும் சார்ந்த பொருட்கள்:

நெல், கோதுமை, ராகி, பாஜ்ரா, ஜோவர், பார்லி, அரிசி அப்பளம், கோதுமை மாவு சக்தி, புரதம், கரையாத கொழுப்பு வகைகள் தையாமின், ரிபோப்ளேவின், போலிக் அமிலம், இரும்பு மற்றும் நார் சத்து


2. பருப்பு மற்றும் பயிறு வகைகள்:


கொண்டைக் கடலை, உளுந்து, பாசிப்பயிர், துவரை, மைசூர் பருப்பு, தட்டைப்பயிர், பட்டாணி, சோயா, பீன்ஸ் சக்தி.........
போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து3. பால் மற்றும் இறைச்சி பொருட்கள்:


பால்: பால், தயிர், ஆடை நீக்கிய பால், நெய்
இறைச்சி: கோழிக்கறி, ஈரல், மீன், முட்டை, மற்றும் ஆட்டிறைச்சி புரதம், கொழுப்பு, சையனோகோபலமின் கால்சியம்
புரதம், கொழுப்பு, சையனோகோபலமின் கால்சியம்4. பழங்கள் மற்றும் காய்கறிகள்:


பழங்கள்: மா, கொய்யா, பழுத்த தக்காளி, பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி.

காய்கறிகள்: (பசுங்கீரை), கீரை, ஸ்பினாச், முருங்கை, கொத்தமல்லி, கடுகு மற்றும் வெந்தயக் கீரை.


இதர காய்கறிகள்: காரட், கத்தரி, வெண்டை, குடைமிளகாய், பீன்ஸ், வெங்காயம், முருங்கைக்காய், பூக்கோசு காரட்டினாய்டு, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து.


கரையாத கொழுப்பு வகைகள், காரட்டினாய்டு, ரிபோப்ளேவின், போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து.


காரட்டினாய்டு, போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து.5. கொழுப்பு மற்றும் சர்க்கரை கொழுப்புக்கள்:


வெண்ணெய், நெய், நீர்ம எண்ணெய்கள், சமையல் எண்ணெய்கள் (கடலை, கடுகு மற்றும் தேங்காய்)

சர்க்கரை: சீனி, வெள்ளம் சக்தி, கொழுப்பு, தேவையான கொழுப்பு - எண்ணெய்கள் சக்தி
5. வகை உணவுகளின் முக்கியத்துவங்கள்:

நிறையான உணவுகளை தருவதால் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கிறது.  ஊட்டச்சத்துக்களின் நிலையை அறிதல்இவற்றைக் கொண்டு தனிமனிதனுக்கு ஊட்டவியல் கல்வியை புகட்டலாம்.


உணவு பட்டை கூம்புகள்:


ஜக்கிய வேளாண் மாநில துறை, 1992 ஆம் ஆண்டு உணவு பட்டை கூம்பு கையேடுகளை அறிமுகம் படுத்தியது, ஆரோக்கிய வாழ்வு வாழ இக்கையோடு ஓர் அருமையான சாதனமாகும்.உணவு பட்டைக் கூம்பு கையேடு:


சமநிலை:

வெவ்வேறு உணவு வகைகளிலிருந்து உணவுகளை தேர்வு செய்ய வேண்டும்.
ரகங்கள்:

ஒவ்வொரு உணவு வகைகளிலும் பல்வகை உணவுகளை சேர்க்க வேண்டும்.
மிதமானவை:

பரிமாறும் உணவு வகைகளை அளவோடு மேம்படுத்த வேண்டும்
உணவு பட்டைக் கூம்பு பதிவேடு தனிமனிதனின் உண்ணும் எண்ணிக்கை அளவை பரிந்துரைக்கும்வயது வந்தோருக்கான சமமான பத்திய உணவு வகைகள்:

உணவு வகைகள் வயது வந்தோர் ஆண் வயது வந்தோர் பெண்
நிலையான பணி மிதமான பணி கடினமான பணி நிலையான பணி மிதமான பணி கடினமான பணி


தானிய வகைகள் 470 550 250 370 450 575
பருப்பு வகைகள் 40 60 60 40 45 50
கீரை வகைகள் 100 100 100 100 100 100
இதர காய்கறிகள் 60 70 80 40 40 50
வேர் மற்றும் கிழங்கு வகைகள் 50 70 80 50 50 60
பழங்கள் 30 30 30 30 30 30
பால் 150 200 250 100 150 200
கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் 30 40 45 20 25 30
சீனி / வெள்ளம் 30 40 50 25 30 30குழந்தை மற்றும் வயதுவந்தோருக்கான சமமான உணவு வகைகள்:

உணவு வகைகள் குழந்தைகள் வயது வயதுவந்தோரின் வயது
1-3 4-6 7-9 10-12 13-15 16-18
தானிய வகைகள் 180 275 285 335 300 410 340 460 325
பருப்பு வகைகள் 25 35 60 60 60 60 60 60 50
கீரை வகைகள் 40 50 50 75 75 100 100 100 100
இதர காய்கறிகள் 20 30 50 50 50 75 75 75 75
வேர் மற்றும் கிழங்கு வகைகள் 10 20 30 30 30 50 50 50 50
பழங்கள் 50 50 50 50 50 50 50 50 50
பால் 300 250 200 200 200 200 200 200 200
கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் 15 25 30 30 30 50 40 50 40
சீனி / வெள்ளம் 30 40 50 40 40 40 40 50 50
(இறைச்சி உண்பர்களுக்கு ஒரு பங்கு பருப்பு உணவுக்கு 50 கிராம் முட்டை / கோழிக்கறி / ஆட்டிறைச்சி / மீன்) என்ற விகிதம் பின்பற்ற வேண்டும்.
மூலதனம்:

இந்தியர்களுக்கு பத்திய உணவுக்கான கையேடுகள் - கை நூல் (1998) தேசிய உணவியல் நிலையம், ஹைதராபாத் - 500007
‚லட்சுமி . பி. 2003. உணவு பத்தியங்கள் நியூ ஏஜ் இண்டர்நேஷனல் வெளியீட்டாளர் லிட், சென்னை.


கோபாலன். சி. ராமசாஸ்திரி.பி.வி. மற்றும் பாலசுப்பிரமணியம். எஸ்.சி. 1989 இந்திய உணவுகளின் ஊட்டச்சத்துக்களின் மதிப்பு தேசிய உணவியல் நிலையம், ஹைதராபாத்.
***
thanks tamil book
***"வாழ்க வளமுடன்"

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "