இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தேவையானவை
முந்திரி - ஒன்றரை கப்
கடலைமாவு - 2 கப்
டால்டா - கால் கப்
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
அரிசி மாவு - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை, இஞ்சி - சிறிது
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைமாவில் டால்டா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரி பருப்பு, அரிசி மாவு இவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் அள்ளிப் போட்டோ எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பகோடா மீது சிறிது கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்து போட்டு சூடாக பரிமாறவும்.
***
thanks Mohamed
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக