...

"வாழ்க வளமுடன்"

12 ஜூலை, 2011

பித்தப்பை கற்கள் ஏன் ? எப்படி- ? ஒரு முழு விளக்கம்--

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


மருத்துவர். மு. சங்கர்


இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு. வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.


பித்தப்பையில் சிறு சிறு கற்கள் உண்டாகும். கற்கள் மிளகு அளவு உள்ளவனாக இருக்கும். ஒரு சில கற்கள் பெரியவைகளாகவும் இருக்கும். புளியங்கொட்டை அளவிற்கும் கற்கள் உறுவாவது உண்டு. ஒரு சிலருக்கு ஒரே கல் பித்தப்பை முழுவதும் நிரம்பி இருப்பதும் உண்டு.பித்தப்பையி¢ல் உண்டாகிற கற்கள் ஒரு சில மிருதுவாகவும், ஒரு சில கற்கள் கனமாகவும், கெட்டியாகவும் இருக்கும் சிறிய கற்களாக இருந்தால் அவை ஒன்றோடு ஒன்று உராய்ந்து உருண்டையாகி விடும். இவை உண்டாவதற்கு முக்கியமான காரணம் இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு.வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.பித்தப்பையில் சிறு சிறு கற்கள் உண்டாகும். கற்கள் மிளகு அளவு உள்ளவனாக இருக்கும். ஒரு சில கற்கள் பெரியவைகளாகவும் இருக்கும். புளியங்கொட்டை அளவிற்கும் கற்கள் உறுவாவது உண்டு. ஒரு சிலருக்கு ஒரே கல் பித்தப்பை முழுவதும் நிரம்பி இருப்பதும் உண்டு.பித்தப்பையி¢ல் உண்டாகிற கற்கள் ஒரு சில மிருதுவாகவும், ஒரு சில கற்கள் கனமாகவும், கெட்டியாகவும் இருக்கும் சிறிய கற்களாக இருந்தால் அவை ஒன்றோடு ஒன்று உராய்ந்து உருண்டையாகி விடும். இவை உண்டாவதற்கு முக்கியமான காரணம் பித்தப்பையில் ஏற்படும் அயற்சி. இந்த அயற்சி ஏற்பட்டவுடன் பித்தநீர் அதிக நேரம் பையில் தங்கி இருகிவிடுகிறது. வேறு காரணங்களாலும் பித்த நீர் தடைப்பட்டு நிற்குமானால் இந்த நோய் உண¢டாகலாம்.இது போன்று கற்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம் உண்டாகின்றன. அதிலும் ஐம்பது முதல் அறுபது வயது உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகிறது. அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் இந்த கற்கள் உண்டாகலாம். இருதய நோய், கல்லீரல் நோய், பித்தநீர் வடிகுழாயில் நாக்குப் பூச்சிகளாலும் சதைக் கட்டிகளாலும் அடைப்பு உண்டாகப் பித்தம் தங்கி விடுவது போன்றவற்றாலும் இது போன்ற கற்கள் உண்டாகலாம்.பித்தப்பையில் உண்டாகும் கற்கள் சிறியவைகளாக வெகு காலம் தங்கியிருந்தாலும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும். ஆனால் கற்களால் வலி உண்டாவதற்கு முன்பு சில குறிகள் கவனிப்பவர்களுக்கு தெரியும். உணவு உண்டப்பின் வயிற்றில் கனமாகவும் உப்புசமாகவும் இருக்கும். இவை ஏப்பம் விடுவதாலும் வாந்தி எடுப்பதாலும் குறைந்துவிடும்.இதுபோல் சில காலம் சென்ற பிறகு திடீரென்று குத்தல் போன்ற வலி உண்டாகும். வலி பொருக்க முடியாமல் முழங்காலை வயிற்றின் மேல் மடக்கி அமுக்கினால் வலி சற்று குறைவது உண்டு பித்தப்பையில் இருக்கும் கற்கள் சில சமயங்களில் அங்கிருந்து சிறு குடலுக்கு வரும் குழாயில் இறங்கி அதனுள் அகப்பட்டு கொண்டால் வலி உண்டாகும்.இந்த வலி வலது விலாபுறத்தில் மார்புக் கூட்டு எலும்பின் கீழே இருக்கும். அங்கிருந்து வலது தோள்பட்டை முதுகின் வலது பக்கம் இவைகளிலும் இந்த வலி உண்டாகும். கல்லீரல் கனத்துப் பருத்து கையால் தொட்டாலும் இந்த வலியைக் கொடுக்கும். இந்த வலி வரும்போது முகம் சுளித்து கைநாடி வலுக்குறைந்து நெற்றியில் வேர்வை உண்டாகும்.அதிகமான காய்ச்சலும் உண்டாகும். வாந்தி இருக்கும். அடைத்திருக்கும் கற்கள் நழுவி சிறுகுடலுக்குள் வந்தாலும் அல்லது பித்தப் பைக்குள் திரும்பி சேர்ந்துவிட்டாலும் வலி உடனே நின்று விடும். அடைப்பு நீ¢ங்காவிட்டால் மஞ்சள் காமாலை, வெண்ணிறமும் தூற்நாற்றமும் உள்ள மலம் பிரியும். பித்தம் மற்றும் இரத்தத்தில் கலந்திருக்கும் விஷக் குறிகள் எல்லாம் அடுத்தடுத்து காணப்படும்.
மருத்துவம்:

பித்தப்பை கற்களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு வேறு விதங்களில் மருத்துவம் அளிக்கலாம். ஒன்று வலி உள்ளபோது செய்வது, மற்றொன்று வலி இல்லாதக் காலத்தில் செய்வது.வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம், கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் மருத்துவம் செய்ய வேண்டும். நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம். உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம். பித்தக் கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில¢¢ மருத்துவரை அணுகி மருத்துவம் செய்துக் கொள்வது நல்லது.***
thanks மருத்துவர். மு. சங்கர்
***
"வாழ்க வளமுடன்"

2 comments:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

prabhadamu சொன்னது…

//// Rathnavel கூறியது...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
////


thanks :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "