...

"வாழ்க வளமுடன்"

21 ஜூலை, 2011

வாழை இலை விருந்து ...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


வாழைனாலே 'மங்களம்'னு அர்த்தம். கல்யாணம் போன்ற விசேஷங்களில் கூட வாழைமரத்தைத்தான் கட்டறோம். வாழைமரத்தோட எல்லா பாகங்களுமே நமக்குப் பயன்படுது. அந்தக் காலத்துல பெரும்பாலும் எல்லா வீடுகள்லயும் வாழை மரம் இருக்கும். அதனால் எல்லாரும் அப்போ தினமும் வாழை
இலையிலதான் சாப்பிடுவாங்க.வாழை இலையில சாப்பிட்டாகண்ணுக்குக் குளிர்ச்சி. 'ஆல இலை, அரச இலை, தேக்கு இலை'னு எத்தனையோ இலைகள் இருந்தாலும், வாழை இலைக்கு மட்டும்தான் தனிப் பெருமையே இருக்கு. எதைச் சாப்பிடறோம் அப்படிங்கற மாதிரி, எதுல சாப்பிடறோம்ங்கறதும் முக்கியம்னு சொல்லுவாங்க. அதனால விருந்துன்னாலே வாழை இலைதான்! ஆனால் இப்போ நம்ம ஊர்களிலயே
ஏதாவது விசேஷம்னாலோ, கல்யாண வீட்டுக்குப் போனாலோ தான் நாம, வாழை இலையிலயே சாப்பிடறோம்.
எங்கப் பாட்டி வாழை இலையில சாப்பிடறது பத்தி ஒரு கதை சொல்லியிருக்காங்க. " ஒரு முறை பரத்வாஜ முனிவர் வீட்டுல ராமன் சாப்பிடும்போது, அவருக்குப் பார்க்காமல் உதவிய அனுமனுடன் ஒரே இலையில்
சாப்பிட்டாராம். அணில் முதுகில் போட்ட கோடு மாதிரி, வாழை இலையின் நடுவுல இருக்குற கோடும் ராமன் இலையை இரண்டு பகுதியாக பிரிக்குறதுக்கு தனது கையால் போட்டக் கோடுதானாம். இலையின் ஒரு பகுதியில்
மனிதர் விரும்பி சாப்பிடும் உணவு வகையும், எதிர்ப்பகுதியில் குரங்குகள் விரும்பும் காய்கறிகளும் பரிமாறப்படுவதற்கு இதுதான் காரணமாம்." அதேபோல, வாழை இலையில எப்படி உணவு பரிமாறணும்னும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. " இலையின் நுனிப்பகுதி இடதுபக்கமாகவும், அகலமான பகுதி வலதுபக்கமாகவும் இருக்கணும். உடலில் கொஞ்சமாக சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு, காய்கள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும் பரிமாறணும். அதேபோல, முற்றிய இலையைவிட தளிர்
இலைதான் நல்லது.இலை கருகுகிற மாதிரி, உணவு சூடாக இருக்கக் கூடாது; சுத்தமாக ஆறியும் இல்லாமல் மிதமான சூட்டில் பரிமாறணும். முதலில் பசியைத் தூண்டும் பருப்பு, நெய் விடணும். அப்புறம் காரவகைக் குழம்புகளை ஊற்றணும். உணவின் செரிமானத்துக்கு உதவும் மல்லி, பூண்டு, மிளகு உள்ள ரசம், தொடர்ந்து புளிப்பு சுவையுள்ள மோர் வழங்கணும். கடைசியா ருசிக்குப் பாயசம்" இப்படி ஒரு முறையே இருக்கு.
ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலகூட வாழை இலை பெரிதும் பயன்படுது. "அல்சர், குடல் நோய்கள் வராமல் தடுக்க கைகண்ட மருந்து வாழை இலையில தொடர்ந்து சாப்பிடறதுதான். சிறுநீரகப்பிரச்சனை, அலர்ஜி, உடலில்
இருக்குற நச்சுத்தன்மை நீங்க எனப் பல பிரச்னைகளுக்கு நிவாரணம் வாழை இலையில சாப்பிடறதுதான். வாழை பதினெட்டு வகைகள் இருக்கு. அவை
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவகுணங்கள் உண்டாம்".வாழை இலையில சாப்பிடறதே குறைஞ்சுட்டு வருகிற இந்தக்காலத்துல, இவ்வளவு பெருமையாக பேசுற, வாழை இனமே அழிஞ்சுக்கிட்டிருக்கு. நம்ம நாட்டுக்கேயுரிய பாரம்பரிய ரகங்களான சிறுமலை வாழை, பூவன், கற்பூர
வாழை இப்படிப் பலரக வாழைகளும் ஒரேயடியாக அழிஞ்சுக்கிட்டிருக்காம். வாழை இலைகள் பதப்படுத்தப்பட்டு சருகாகவும், 'தொன்னை' அப்படிங்கற சிறுகிண்ணங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருது. என்னதான் இப்படிப்
பயன்படுத்தினாலும் பச்சை இலையில சாப்பிடறமாதிரி இருக்குறதில்லை.
இவ்வளவு மகத்துவம் இருக்கிற வாழை இலை, இன்னைக்கு ஒரு பூட்டு, அதாவது ஐந்து இலைகள், 10லிருந்து 15ரூபாய் வரை விற்கப்படுது. டெல்லியில போன
பொங்கலுக்கு, இலையில சாப்பிடலாம்கிற ஆசையில, என் கணவரை வாங்கிகிட்டு வரச்சொன்னேன். ஒரே ஒரு இலைதான் இருந்ததுனு வாங்கிட்டு வந்தார். அதுவும் ஐந்து ரூபாய்னு சொன்னதும் அதிர்ந்தே போயிட்டேன். ஒரு பூட்டு இலை 5ரூபாய்க்கு விற்ற காலம் போய் ஒரு இலை 5ரூபாய்க்கு
விற்கப்படுது. எவ்வளவு அநியாயமா இருக்கு? என்னைக்காவது இலையில சாப்பிடற ஆசையும் கூட இதனால போயிடுது. டெல்லியிலயே இந்த நிலைமை என்றால், வெளிநாடுகளில் இருக்குறவங்களெல்லாம் வாழை இலையில சாப்பிடறதுக்கு ஆசையே பட முடியாது போல!***

படித்ததில் பிடித்தது


***
"வாழ்க வளமுடன்"

4 comments:

சாந்தி மாரியப்பன் சொன்னது…

இடுகை நல்லாருக்குங்க.. ஏதோ மும்பையைப்பொறுத்தவரை செம்பூர்,மட்டுங்கா பகுதிகளுக்கு நம்மூர்லேருந்தும் இலைகள் வர்றதால குறைஞ்சபட்சம் பண்டிகைகளுக்காவது இலை கிடைக்குது. விலை மட்டும் அதே அஞ்சு ரூபாதான் :-))

vetha (kovaikkavi) சொன்னது…

mika nalla pathivu. Nanry.
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

prabhadamu சொன்னது…

//// அமைதிச்சாரல் கூறியது...
இடுகை நல்லாருக்குங்க.. ஏதோ மும்பையைப்பொறுத்தவரை செம்பூர்,மட்டுங்கா பகுதிகளுக்கு நம்மூர்லேருந்தும் இலைகள் வர்றதால குறைஞ்சபட்சம் பண்டிகைகளுக்காவது இலை கிடைக்குது. விலை மட்டும் அதே அஞ்சு ரூபாதான் :-))///thanks அமைதிச்சாரல்.....

:)

prabhadamu சொன்னது…

//// kavithai கூறியது...
mika nalla pathivu. Nanry.
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

//////thanks kavithai.....

:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "