...

"வாழ்க வளமுடன்"

25 ஜூலை, 2011

உடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


'வலியில்லாமல் வழியில்லை' என்று உடற்பயிற்சியை குறிக்கும் சில சான்றோர் மொழிகள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து விட்டாலும் சில தவறான நம்பிக்கைகள் இன்றளவும் உலவுகின்றன என்றால் மிகை ஆகாது. வாருங்கள், உடற்பயிற்சியை சுற்றி இருக்கும் சில அசாதாரண உண்மைகளையும் தவறான நம்பிக்கைகளையும் சற்று அலசுவோம்.



உடற்பயிற்சி - இது நம்பிக்கை என்றால் எது நிஜம் :



நம்பிக்கை #1 : எடை இழக்க விருந்தை தவிர்க்க வேண்டும்


நிஜம் : உங்கள் அன்றாட உணவில் இருந்து சிலவைகளை நீக்குதல் என்பது உங்களை அதன் பால் மேலும் ஆசை கொள்ளச் செய்யும். இதன் விளைவாக நாம் சபலப் பட்டு அருந்தும் உணவால் எடை இழப்பதற்கு பதிலாக எடை கூட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு. ஆகையால், அவ்வப்போது விருந்துகள் சுவைப்பது தவறாகாது. அதன் பிற்பாடு சமச்சீரான உணவு முறை மேற்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.






நம்பிக்கை #2
: தண்ணீர் அதிகம் அருந்துவதால் உடல் எடை கூடி விடும்.


நிஜம் : இயற்கையான தண்ணீரில் காலோரிகள் இல்லததால் அது கொழுப்புச் சத்தாக மாறாது என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால், தண்ணீர் நம் உடற்கொழுப்பை கரைக்கக் கூடியது. மேலும், நம் உடல் சீராக இயங்க தண்ணீர் அத்தியாவசியமாக தேவை.


தண்ணீரிற்கும் உடல் எடைக்கும் எந்த விதமான நேரடி தொடர்பும் கிடையாது. தண்ணீர் அருந்தியவுடன் உடலில் அது தங்குவதால் தர்க்க ரீதியாக சிலமணி நேரம் உடல் எடை கூடும் என்பது மெய்யானாலும், உடலை விட்டு வெளியேறும் நீரின் மூலம் கொழுப்பு கரைகிறது. இன்னுமா தண்ணீர் உங்கள் எதிரி ??






நம்பிக்கை #3 : உணவுக்கு இடையில் நொறுக்குத் தீனி சுவைப்பதை தவிர்க்க வேண்டும்


நிஜம் : இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. உணவிற்கு இடையில் ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பது உடலின் சர்க்கரை அளவை செவ்வனே நிர்வகிக்க உதவுகிறது. மேலும், உங்கள் உடல் இயக்கங்களை சுறுசுறுப்போடும் வலிமையோடும் வைத்திருக்க இது உதவும்





நம்பிக்கை #4 : உடற்பயிற்சி என்பது இளமையானவர்களுக்கே !


நிஜம் : ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது மூத்தவர்கள் "ஏரோபிக்", யோகா, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறான பயிற்சிகள் இதய நோயின் ஆபத்திலுருந்து முடியோர்களை காக்கவல்லது.






நம்பிக்கை #5 : உடற்பயிற்சிக்கு ஏற்ற உடைகள் அவசியம்.

நிஜம் : விலை மதிப்புள்ள இறுக்கமான உடைகள் தேவை இல்லை. சௌகரியமான உடைகளே போதுமானது.





நம்பிக்கை #6 : உடற்பயிற்சியால் நம் உடலின் கொழுப்பு தசைகளாக மாறுகிறது.


நிஜம் : கொழுப்புச் சத்தும் தசை நாறுகளும் முற்றிலும் வேறுபட்ட அணுக்களால் ஆனது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவற்றில் ஒன்றை இழந்து மற்றொன்றை பெறலாமேயன்றி இவை மற்றொரு வடிவத்திற்கு மாறாது.



**



உடற்பயிற்சியின் பலன்கள் :


முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவையால் நம் நல்லாரோக்கியத்திற்கு உத்திரவாதம் கிடைக்கிறது.




முறையான உடற்பயிற்சி எல்லோருக்கும் பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை உடற்பயிற்சி செய்தால், கீழ்காணும் நன்மைகள் பெறலாம் :


1. எடையை கட்டுப் படுத்தலாம்

2. திண்மையும் வலிமையும் பெறலாம்

3. மூட்டுகளிலும் தசைகளிலும் இளக்கம் பெறலாம்

4. மன அழுத்தம் குறைக்கலாம்

5. நம் மதிப்பையும் தோற்றத்தையும் மேம்படுத்தலாம்

6. எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் வலிமை ஏற்படுத்தலாம்

7. மாத விடாய் பிரச்சனைகளை மட்டுப் படுத்தலாம்.

8. மூப்படையும் போது வலிமையை பேணலாம்.



***


நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு ?



வெளியிடம் செல்கையில் ...

1. லிஃப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை உபயோகிப்பது


2. பேருந்திலிருந்து வழக்கமான இறங்கும் இடத்திற்கு முன்பாகவே இறங்கி நடந்து செல்வது



*


அலுவலகங்களில் ...


3. இருந்த இருக்கையிலேயே தொலைபேசியில் தொடர்ந்து பேசுவதை தவிர்த்து அவ்வப்போது நின்ற நிலையில் பேச்சை தொடரலாம்.


4. சக பணியாளர்களை, மதிய உணவிற்கு பின்பு மேற்கொள்ளும் சிறிய உடற்பயிற்சி முறைகளில் கூட்டு சேர்த்து கொள்ளலாம்.


*


வீட்டில் உள்ள படியே ...


5. தொலைக் காட்சியில் விளம்பர இடைவேளைகளின் போது கை கால்களை நீட்டியோ உட்கார்ந்து எழுந்தோ தசைகளை தளர்வடையச் செய்யலாம்.


6. பணி முடிந்த பிறகு குழந்தைகளுடன் மைதானத்தில் விளையாடலாம்


7. இரவு உணவிற்கு பிறகு தொலை காட்சி பார்ப்பதை தவிர்த்து விட்டு சற்றேனும் குடும்பத்தினருடன் நடை பழகலாம்.





***
thanks யாழினி
***






"வாழ்க வளமுடன்"

2 comments:

RIPHNAS MOHAMED SALIHU சொன்னது…

This is very useful

keep blogging. Best wishes...

prabhadamu சொன்னது…

///// RIPHNAS MOHAMED SALIHU கூறியது...
This is very useful

keep blogging. Best wishes.../////




thanks :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "