இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பல் உறுதியாக – மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெரும்.
பல் நோய் – மகிழம்இலை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர எதுவும் அணுகாது.
பல்வலி நிவாரணம் பெற – கோவைப்பழம் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் இரத்தக்கசிவு, பல் சொத்தை வராமல் இருக்க – செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வரலாம்.
பல் ஆடுதல் – மகிழ மறக்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப சரியாகி உறுதிப்படும்.
பல்வலி நீங்க – ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ளலாம்.
பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி பெற – ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம்.
பல்லரணை – கற்கண்டு அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும்.
பல் உறுதியாக – குறைந்த பட்சம் 10 முறையாவது பற்களால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
பற்கள் உறுதியாக – பிரஷ் கொண்டு பல் துலக்குபவர்கள் வாய் கொப்பளிக்கும் போது கட்டாயம் ஈறுகளை அழுத்திக் கொடுத்துவர உறுதியாகும்.
பல் வலி, பல் அரணை தீர – கண்டங்கத்திரி பழத்தை நெருப்பில் இட்டு வாயில் புகை பிடிக்க குணமாகும்.
பல் கூச்சம், ஈறுவீக்கம் தீர – புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை, தூள் உப்பு கலந்து பல் துலக்கலாம்.
பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்க – பேய்மிரட்டி இலை சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பல் உறுதியாக – காலை, இரவு இருவேளை கட்டாயம் பல் துலக்க வேண்டும், சாப்பிட்ட பின் பல் துலக்கி விடுவது மிக நன்று.
ஈறு பலமடைய – மாசிக்காயை தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.
***
thanks uma
***
"வாழ்க வளமுடன்"
2 comments:
பகிர்வுக்கு ரொம்ப நன்றி..
///GEETHA ACHAL சொன்னது…
பகிர்வுக்கு ரொம்ப நன்றி..
////
நன்றி கீதாக்கா :)
கருத்துரையிடுக