...

"வாழ்க வளமுடன்"

13 ஜூன், 2011

இடுப்பு ஸ்லிம்மாக இருக்க :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் தெரிந்துகொள்வது அவசியம்.

*

கலோரி:

பெண் வயதுக்கு வந்தவுடன் அதிகமான கலோரி சத்துக்கள் தேவைப்படும். 13-18 வயதுள்ள பெண்களுக்கு 2,200 கலோ ரிகள் தேவை. கலோரிகளை தினசரி டயட்டில் எப்படி சேர் ப்பது?
பருப்பு மற்றும் கடலை வகை உணவு வகைகளை சாப்பாட்டுடன் சேர்த்து க்கொள்ளலாம்.


பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள் சாப்பிடலாம். தினமும் மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்களை சாப்பிடலாம்.

*

புரதம்:

பருவ வயதில் புரதச் சத்து மிகவும் அவசியம். புரதம் அளவு குறைந்தா ல் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் உபாதைகள் ஏற்ப டும். மேலும் உடலில் உள்ள ஹார் மோன், என்சைம் மற்றும் ஜீரண சக்தி குறைந்து போகும். டீன் ஏஜ் பெண்கள் தினமும் 50 கிராம் புரதச் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.


தினமும் ஒரு கப் கொண்டைக் கட லை அல்லது காராமணி போன்றவ ற்றை வேக வைத்து சாப்பிடவும்.


தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்க லாம். பால் பிடிக்காதவர்கள் தயிர் அல்லது பாயசம் சாப் பிடவும்.


சோயா உணவுகள், கடலை மற்றும் பருப்பு (பாதாம், முந்திரி) வகைகளை சாப்பிடலாம்.

*

இரும்புச் சத்து:

தினமும் ஏதேனும் ஒரு கீரை வகை யை 100 கிராம் சாப் பிடலாம்.

சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து டீ, காபி பால் குடி க்கலாம்.
உலர்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம் பழங்கள் தினமும் சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகமாகும்.
முளை கட்டிய பயறு மற்றும் வை ட்டமின் ‘சி’ அதிகமுள்ள நெல்லிக் காய், கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.

*

கால்சியம்:

கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. கால்சியம் சத்துக் குறைவதால் எலும்பு மற்றும் பற்கள் வலுவிழந்து சீக்கிரமே தேய்ந்து விடும்.

தினமும் ஒரு லிட்டர் பால் குடிப் பது அவசியம்.
வாரத்தில் மூன்று நாட்கள் ஏதே னும் ஒரு வகைக் கீரையை உண வில் சேர்த்துக்கொள்வது அவசி யம்.

ராகி, எள் போன்றவற்றில் கால் சியம் நிறைய இருக்கிறது.
அதிகக் கொழுப்புச் சத்துள்ள உண வுகளைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள கால்சியம் குறை யும். அத னால் முடிந்த வரை எண் ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவதைக் குறை த்துக்கொள்ளலாம்.



***
thanks thlam
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "