...

"வாழ்க வளமுடன்"

09 ஜூன், 2011

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது கவனிக்க வேண்டியவை!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

• குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

•குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது.

•குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாக உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

•. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும்..

•. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும்.

• குறிப்பாக 90/10 முறையைக் கடைபிடிக்க வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது 90 விழுக்காடு ஆரோக்கியமான உணவும் மீதி பத்து விழுக்காடு இனிப்பு, பொரியல் போன்றவற்றையும் உண்பதும் நல்லது. அந்த இனிப்பு வகைகளிலும் அதிக கொழுப்பான, செயற்கைப் பொருட்கள் அதிகம் அடங்கியவற்றைத் தவிர்க்கவேண்டும்.

•. அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. .

• வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை.

• இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை

•. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

•. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் , பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

•. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். .

•. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.

•சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.

***
thanks Anitha
***

"வாழ்க வளமுடன்"

5 comments:

தமிழ்த்தோட்டம் சொன்னது…

பயனுள்ள நல்ல தகவல்

பெயரில்லா சொன்னது…

iphone unlock
unlock iphone

unlock iphone iphone unlock unlock iphone
Im not sure if it's got virus. But, when i switch on the laptop it shows the make and the "windows" thing. Shuts down by itself.. And opens automatically. This goes on till yu switch it off by pressing the power button. When i decided to format it by using the cd.. it says the hard disk is not found. now my dad wants to give the laptop to one of his friends who says he can fix it. The problem is, there are some personal pictures of me and my boyfriend. I dont want him to see it :| What should i do now ? thanks in advance :) unlock iphone

how to unlock iphone unlock iphone [url=http://ounlockiphone.com]iphone unlock [/url] unlock iphone

prabhadamu சொன்னது…

/// தமிழ்த்தோட்டம் கூறியது...
பயனுள்ள நல்ல தகவல்
////

நன்றி தமிழ்த்தோட்டம்...

:)

prabhadamu சொன்னது…

///// பெயரில்லா கூறியது...
iphone unlock
unlock iphone

unlock iphone iphone unlock unlock iphone
Im not sure if it's got virus. But, when i switch on the laptop it shows the make and the "windows" thing. Shuts down by itself.. And opens automatically. This goes on till yu switch it off by pressing the power button. When i decided to format it by using the cd.. it says the hard disk is not found. now my dad wants to give the laptop to one of his friends who says he can fix it. The problem is, there are some personal pictures of me and my boyfriend. I dont want him to see it :| What should i do now ? thanks in advance :) unlock iphone

how to unlock iphone unlock iphone [url=http://ounlockiphone.com]iphone unlock [/url] unlock iphone
///

உங்களுக்கு தேவையான தகவலை விரைவில் சொல்கிரேன் தோழி.....

இல்லை சில தளங்கள் தருகிரேன் அதில் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு இருக்கா இல்லையா என்று பாருங்கள்........

அந்த தளங்கள் நாளை இடுகிரேன்

prabhadamu சொன்னது…

/// பெயரில்லா கூறியது...
iphone unlock
unlock iphone

unlock iphone iphone unlock unlock iphone
Im not sure if it's got virus. But, when i switch on the laptop it shows the make and the "windows" thing. Shuts down by itself.. And opens automatically. This goes on till yu switch it off by pressing the power button. When i decided to format it by using the cd.. it says the hard disk is not found. now my dad wants to give the laptop to one of his friends who says he can fix it. The problem is, there are some personal pictures of me and my boyfriend. I dont want him to see it :| What should i do now ? thanks in advance :) unlock iphone

how to unlock iphone unlock iphone [url=http://ounlockiphone.com]iphone unlock [/url] unlock iphone
///

கண்டிப்பா இது வைரஸ் பிரச்சினைதான்

இதற்கு லேப்டாப் சர்வீஸ் செய்யுமிடத்தில் கொடுத்தால் அவர்கள் சர்வீஸ் செய்து கொடுப்பார்கள் அந்த முழு விவரத்தையும் லேப்டாப்பை பார்த்தால்தான் சொல்ல முடியும் சில விசயங்களை பிரச்சினை என்னவென்று முழுதாக தெரிந்தால்தான் சொல்லமுடியும்........

நான் சொல்வது உபயோகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

வைரஸ் பிரச்சினைக்கு திடீரென்று ஆண்டிவைரஸ் போட்டு கிளீன் பன்ன முடியாது. அப்படி பன்னாலும் அது வைரஸை முழுமையாக அழிக்காது...........

http://www.eegarai.net/t61679-please?thank=551907

இந்த தளத்தில் என் கணவர் மூலம் வழிக்கிடைத்தது.....

:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "