...

"வாழ்க வளமுடன்"

10 மே, 2011

நீங்கள் `அம்மா செல்லமா’..!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். பக்குவமான மனநிலையையும் இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது.


தென்றல் வீசும்போதும், அரும்பு மலரும்போதும் அதை பற்றி யோசித்திருக்க மாட்டோம். அதை போல் தாயின் அரவணைப்பும் இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான்.


ஒரு தாய் தன் பிள்ளைகள் என்னதான் தவறே செய்தாலும், அவர்களை அரவணைத்தே செல்வாள். பள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள்.


அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உணவைத் தயார் செய்து கொடுப்பாள். அவளது முதுகைத் தட்டிக் கொடுத்து செல்லமாகத் தூங்க வைப்பாள்.


ஆனால், ஒருநாள் தாய் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட, தனிமையில் தவித்துக் கொண்டு இருப்பாள் மகள். அப்போது தான் அம்மாவின் பணிவிடைகள் மகளுக்குத் தெரியத் தொடங்கும்.


பருவ வயது பெண்களுக்கு அம்மா மேல் அவ்வளவாக பிரியம் வருவதில்லை. இதற்குக் காரணம், காலத்திற்கு ஏற்ற படி அம்மாக்கள் சிந்தித்து செயல்படாமல் இருப்பதுதான். மகள் வளர்ச்சியில் எந்த தாய்க்குத்தான் மகிழ்ச்சி இருக்காது?


அந்த மாதிரியான காலகட்டத்தில் அட்வைஸ் என்ற பெயரில் அள்ளிவிடும் அம்மாக்கள் இவர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள்.


இன்னும் சில அம்மாக்கள் தங்கள் இளமைக்காலத்தில் தங்களால் முடியாமல் போன சாதனைகளை மகள் வழியாக நிறைவேற்றி பெருமைபட விரும்புவார்கள். இந்த திணிப்பு பிடிக்காத பிள்ளைகள் அம்மாவை எரிச்சலாய் நோக்கத் தொடங்குவது இந்த இடத்தில் இருந்து தான்.


ரசனைகள், விருப்பங்கள் தலைமுறைக்கு தலைமுறை மாறிக் கொண்டே இருக்கும் என்பதை அம்மா-பெண் இருவருமே புரிந்து கொள்ள வேண்டும்.


பிரபல பாடகி அவர். தன் மகளையும் தன்னைபோல் பாடவைக்க விரும்பினார். ஆனால் மகளுக்கு பாட்டில் ஆர்வம் இல்லை. பாட்டுக்கேற்ற குரல் வளமும் மகளுக்கு இல்லை. இதனால் தன் மகள் விரும்பிய நாட்டியத்துறையில் இணைத்தார். இந்தமாதிரி அம்மாக்கள்தான் இன்றைய இளம் பெண்களின் பிரியத்துக்குரியவர்கள்.


அம்மாவை நிறைவு பெற வைக்க அவள் கூட உட்கார்ந்து உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். உங்கள் சுமையில் பாதியை அவள் இதயத்தில் சுமக்கத் தொடங்கிவிடுவாள்.


பல குடும்பங்களில் சிக்கல்கள் உருவாக முக்கிய காரணமே, அம்மா-பெண்ணிடையே போதிய தகவல் தொடர்பு இல்லாதது தான்.


இதுவே நீடித்தால் ஒரு கட்டத்துக்கு பின் அம்மாவிடம் எதையுமே சொல்ல அவசியமில்லை என்கிற `பெரிய மனுஷித்தனம்’ பிள்ளைகளிடம் வந்து விடும். இது தேவையற்ற இடைவெளியை அம்மாவிடம் ஏற்படுத்தி விடும்.


`உனக்கு ஒண்ணும் தெரியாது… சும்மாயிரு’ என்று சொல்லும்போது அம்மா மனதளவில் புண்பட்டு விடுகிறாள். இதுவே பெரிய குறையாக நாளடைவில் அவளுக்குள் வளர்ந்து விடுகிறது. உணர்வு ரீதியாக எபோதும் அம்மாவை மனதளவில் பாதிக்கும்படி பேசிவிடக்கூடாது.


வலி காணும் மனதுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பவள் தாய் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீங்கள் தப்பே செய்து விட்டு வந்தாலும் ஒருபோதும் அம்மா உங்களை விட்டுக் கொடுக்க மாட்டாள்.


அவள் தான் அம்மா. இந்த அம்மாவை புரிந்து கொண்டாலே இருவருக்கும் இடையில் ஒரு அழகான சிநேகம் பூத்துக்குலுங்கத் தொடங்கி விடும்.
***
தேங்க்ஸ் vayal
***"வாழ்க வளமுடன்"

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "