...

"வாழ்க வளமுடன்"

06 மே, 2011

தாயின் உடற்பருமன் குழந்தையின் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


உடற்பருமனான தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கும் என்றும், இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கும் என்றும் ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.


யுனிவர்சிட்டி ஆப் விஸ்கான்சின் மற்றும் மேடிசன் ஆராய்ச்சியாளர்கள் 281 பிரசவமான தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகளிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். தாய்மார்களின் உடல் எடை கணக்கில் கொள்ளப்பட்டது. அதுபோல் அவர்களுடைய குழந்தைகளின் இரும்புச் சத்து அளவு கணக்கிடப்பட்டது.


இந்த ஆய்வில் குண்டாக இருந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருந்தது தெரியவந்தது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பொதுவாக உடல்பருமனாக இருக்கும் பெண்களுக்கு குடல் வழியாக இரும்புச் சத்து பரவுவது தடைபடுகிறது. இதனால் இரத்த சோகை ஏற்படுகிறது. அதேநேரம் கர்ப்பிணியாக இருந்தால் குடல் வழியாகதான் இரும்புச் சத்து குழந்தைச் செல்லும்.


இந்நிலையில் கர்ப்பிணிகள் பருமனாக இருந்தால் குழந்தைக்கு இரும்புச் சத்து செல்வது தடைபட்டு குறைபாடுடன் பிறக்கிறது. பருமனாக இருக்கும் கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் இதுபற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆய்வுக் குழு தலைவரும், விஸ்கான்சின் யுனிவர்சிட்டியின் குழந்தைகள் பிரிவு உதவி பேராசிரியருமான பமீலா ஜெ.க்ளிங் தெரிவித்தார்.



***
thanks technology
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "