...

"வாழ்க வளமுடன்"

05 மே, 2011

ஹேர் டைக்கான பிரஷை உபயோகிக்கலாமா ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


கூடுமானவரை ஹேர் டையை முதன்முதலில் உபயோகிக்கையில், அழகு நிலையங்களில் போடுவது நல்லது.

பாலிமர் டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். அது தானாகவே பரவிக்கொள்ளும். அநேகம்பேர் ஹேர் டைக்கான பிரஷை உபயோகிக்கிறார்கள். பிரஷில் டையை எடுத்து தட்டையாகவே போடுகிறார்கள்.


அப்படிப் போடுவது முறையல்ல. பிரஷ் உபயோகப்படுத்துகையில் காற்று உள்ளே போகாது. எவ்வளவுக்கெவ்வளவு காற்று முடியினுள் செல்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரஷில் போடும்போது காற்று உள்ளே செல்லும்படி, முடியை அவ்வப்போது தூக்கி விட்டுக்கொண்டு போட வேண்டும். தலையை ஒட்டி அழுத்தமாக டை போடுவதை விட்டு இருபக்கமும் சீராகப் போட வேண்டும்.


சிலர் ஹேர் டையைப் போட்டுவிட்டு அதிக நேரம் வைத்திருப்பார்கள். சிலர் அப்படியே வெளியிலும் அலைவார்கள். சிலர் மறுநாளோ, அதற்கு மறுநாளோ தலைக்குக் குளிப்பார்கள். பெரும்பாலும் ஆண்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள். இது மிகவும் தவறான முறை.


ஹேர் டை பாக்கெட்டுகளில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதன்படியே செய்ய வேண்டும். (15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வைத்திருக்கலாம்.)

தலையை அலசும்போது தரமான ஷாம்புடன் கண்டிஷனரும் அவசியம் போட வேண்டும். கண்டிஷனர் உபயோகப்படுத்தவில்லையெனில் டை முடியைச் சொர சொரப்பாகி விடும். அடிக்கடித் தலைக்குக் குளித்தால் டை மறைந்து, முடி வெளுத்து விடும் என்பதற்காகச் சிலர் அடிக்கடி தலைக்குக் குளிக்க மாட்டார்கள்.


எண்ணெயும் வைக்க மாட்டார்கள். இது மிகவும் தவறானது. சரியான பராமரிப்பைத் தலைமுடிக்குக் கொடுக்கவில்லை எனில் முடி கொட்ட ஆரம்பிக்கும்.

எவ்வளவுக்கெவ்வளவு டை போடுவதைத் தள்ளுகிறோமோ அல்லது தவிர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் ஹேர்டை உபயோகிக்க வேண்டும் அல்லது முக்கியமாக வெளியில் செல்லும் போது போடலாம்.


கண் புருவத்தின் மீது எக்காரணத்தைக் கொண்டும் டையைப் போடக் கூடாது.

ஆண்களில் சிலருக்கு மீசை மட்டும் வெள்ளை வெளேர் என்றிருக்கும். அதற்காகத் தற்பொழுது பிரஷுடன் சேர்ந்த டை வந்துள்ளது. மீசையை ட்ரிம் செய்யும்போது பிரஷ் செய்து டை போட்டுவிடலாம்.


தற்பொழுது 'பெர்மனென்ட்' டை வந்திருக்கிறது. முடி இருக்கும் இடத்தில் பெர்மனென்ட் டையைத் தடவும்போது அப்படியே இருக்கும். ஆனால் முடி புதிதாக வளர்கிற இடத்தில் வெள்ளையாக இருக்கும். எனவே அதற்குத் தகுந்தாற்போல் டையைப் பூசிக்கொள்ள வேண்டும்.


ஹேர் டையை விரும்பாதவர்களும், இளம் வயதில் இருப்பவர்களும் ஹென்னா உபயோகித்து முடியின் வெள்ளை நிறத்தை மறைக்கலாம். ஆனால் ஸ்கால்ப் மிகவும் வறண்டு விடும். ஹென்னாவை அடிப்படையாக வைத்தும் ஹேர் டை வந்துள்ளது.


ஹென்னா எல்லா முடிக்கும் ஒத்து வராது. நேரான முடிக்கு மட்டுமே ஒத்து வரும். ஹென்னாவை அப்படியே போடுவது முடியை முரட்டுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும். முடியும் கொட்டும். குறிப்பாக பெண்களுக்கு முன் தலையில் உள்ள முடி கொட்டும். ஹென்னாவைப் போட விரும்புபவர்கள் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும்.


மருதாணியை அரைத்து நேரடியாகப் பூசுவதை விடுத்து, அதை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி, அத்துடன் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும். இயற்கையான ஹென்னாவை உபயோகப்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

***

ஒரு நபருக்குத் தேவையானவை:

ஹென்னா - 250 கிராம்
ஒரு முட்டை - வெள்ளை, மஞ்சள் கரு கலந்தது
ஆலிவ் ஆயில் - 2 டீ ஸ்பூன்
காப்பி அல்லது டீ டிகாஷன் - 2 ஸ்பூன்

(சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் டீ டிகாஷனையும், அடர்ந்த ப்ரவுன் நிறத்தை விரும்புபவர்கள் காப்பி டிகாஷனையும் கலந்துகொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் உபயோகப்படுத்தவும்.)

நெல்லிக்காய் பவுடர் - 50 கிராம்
தயிர் - 2 டீ ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு - 5லிருந்து 8 சொட்டுகள்

இவை அனைத்தையும் கலந்து இரும்புப் பாத்திரத்தில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்படையும். ஹென்னாவின் நேரடியான வீரியமும் குறையும்.

***

ஹேர் டை எச்சரிக்கை

-டென்ஷன், சத்தில்லாத ஆகாரம், சரியான பாராமரிப்பின்மை, தண்ணீர், பாராம்பரியம் என இள நரைப் பிரச்சினைக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். நம்மில் அறுபது சதவிகிதத்தினருக்கு இப்பிரச்சினை இருக்கிறது. வயதாக, ஆக நம் உட லில் உள்ள மெலனினின் அளவு குறைவதே நரைக் கான காரணம். இளநரை வராமலிருக்க நல்ல சத்துள்ள ஆகாரங்கள் அவசியம். நரையை மறைக்க ஹேர் டை உபயோகிக்கலாம். ஆனால் அவற்றை உபயோகிப்பதற்கு முன்பாக, அது நம் சருமத்திற்கோ, கூந்தலுக்கோ ஏதேனும் அலர்ஜியை ஏற்படுத்துமா என்று தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும்.


கூந்தல் சாயங்கள் பெரும்பாலும் இரசாயனங்கள் கலந்தே செய்யப்படுவதால் சிலருக்கு அவை அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே டை டெஸ்ட் அல்லது பாட்ச் டெஸ்ட் செய்து பார்த்து குறைந்தது இருபத்தி நான்கு மணி நேரமாவது காத்திருந்து, எந்த அலர்ஜியும் ஏற்படாமலிருந்தால் உபயோ கிக்கலாம்.


பெண்களுக்கு 30 வயதுக்குப் பிறகும், ஆண் களுக்கு 35 வயதுக்குப் பிறகும் கூந்தல் நரைக்கத் தொடங்கும். முடி நரைக்கத் தொடங்கியதுமே தாழ்வு மனப்பான்மை காரணமாக அதை மறைக்க ஏதேனும் ஹேர் டையை உபயோகிப்பது ஆபத்தானது.


ஹேர் டை லோஷன், கிரீம், பவுடர் மற்றும் ஜெல் வடிவங்களில் கிடைக்கிறது. லோஷன்களில் கலரண்ட் மற்றும் டெவலப்பர் என இரண்டு விதங்கள் கிடைக்கின்றன. இவற்றை சமமாகக் கலந்து, கூந் தலில் ஒரு பிரஷினால் தடவினால் டை தானாகப் பரவும். அரை மணி நேரம் ஊறிய பிறகு கூந்தலை அலசலாம்.


பவுடர் டையை நீரில் குழைத்துப் பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் டைகள் அனைத்தையுமே கூந்தலில் தடவி, அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். கெமிக்கல் டையை விட ஹெர்பல் டை மிகவும் பாதுகாப்பானது. இது மருதாணியால் தயாரிக்கப் படுவதால் எந்தவிதப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆனால் இதைத் தடவிய பிறகு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும்.


வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய மூலிகை டை ஒன்றைப் பார்ப்போம்.

மருதாணி இலைத் தூள்-250 கிராம்
நெல்லிக்காய் பொடி-50 கிராம்
டீ டிகாக்ஷன்- 50 மி.லி
காபி டிகாக்ஷன்-50 மி.லி
எலுமிச்சம்பழச் சாறு-1 டீஸ்பூன்

மேற்கூறிய அனைத்தையும் கலந்து ஒரு இரும்புப் பாத்திரத்தில் போட்டு இரண்டு நாட்களுக்கு ஊற வைத்து விடுங்கள். மூன்றாவது நாள் அதைத் தலையில் தடவிக் கொள்வதற்கு முன்பாக அதில் ஒரு முட்டையைக் கலந்து அடித்துத் தடவ வேண்டும். கூந்தலை நன்றாகப் பிரித்து நரை உள்ள பகுதிகளில் நன்றாகத் தடவி ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் ஊறலாம். பிறகு நிறைய தண்ணீர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இதை மாதம் இரண்டு முறைகள் செய்து வந்தாலே போதும். அடிக்கடி செய்ய வேண்டாம். தொடர்ந்து செய்து வர கூந்தல் நல்ல கருமையும், அடர்த்தியும் பெறும்.


***
நன்றி சிவா
நன்றி google
***



"வாழ்க வளமுடன்"

1 comments:

vairam சொன்னது…

நல்ல தகவல் தொடரட்டும் உங்கள் பணி.நன்றி.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "