...

"வாழ்க வளமுடன்"

04 மே, 2011

நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நாம் உயிருடன் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம், ஆக்ஸிஜன். இந்த உயிர் காக்கும் ஆக்ஸிஜனைத்தான் உடலுக்குள் இருக்கும் தீய ஆக்ஸிஜனின் சிறிய நுன் கூறுகள் திருடிக் கொண்டே இருக்கின்றன. இந்த நுண் கூறுகளுக்கு ஃப்ரீராடிக்கல் என்று பெயர்.

உணவின் மூலம் இந்தக் கெட்ட ஆக்ஸிஜன் கூறுகளை முறித்துவிட்டால் நோய்கள் வரா. இந்த நுண் கூறுகள் உடலில் சேரச்சேர செல்களுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் உடல் முதுமையடைகின்றது. அல்லது உறுப்புகள் கெட்டுப்போய் விடுகின்றன.

இவற்றைத் தடுக்கும் சிறந்த ச்சு முறிவு மருந்துகளாக சில உணவு வகைகள் உள்ளன.

புற்று நோய், காட்ராக்ட், இதய நோய், இரத்தக் கொதிப்பு வராமல் முன் கூட்டியே தடுக்கும் எதிர் நச்சுமருந்தாக வைட்டமின் ‘சி’ திகழ்கிறது. முக்கியமாக நோய்களை எதிர்த்து அழிக்கும் வெள்ளை இரத்த அணுக்களை இந்த வைட்டமின் சி தான் உற்பத்தி செய்கிறது. வைட்டமின் சி, இரத்தக்குழாய் நன்கு உறுதியாக, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆஸ்துமா நோயாளிகளும், இரத்தக் கொதிப்பு நோயாளிகளும் வைட்டமின் ‘சி’யை மாத்திரையாகவும், உணவாகவும் சாப்பிடலாம். முக்கியமாக நெல்லிக்காய், முருங்கைக்கீரை, உலர்ந்த தேங்காய், முட்டைக்கோஸ், சோளம், பட்டாணி முதலியவற்றைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் தொற்றுநோய் உட்படப் பல நோய்களும் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்படும். இவை நஞ்சை முறிக்கும் மருந்து போல முற்றிலும் முறிக்கப்பட்டு விடும்.


இத்துடன் பார்வை தொடர்பான பல குறைபாடுகளையும் தினமும் ஒரு காரட்டைப் பச்சையாகச் சாப்பிட்டு வருவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் ஒரு நாள் தேவையான பீட்டா கரோட்டின் 15,000 யூனிட்டுகள் கிடைத்துவிடுகின்றன.


பக்கவாதம் வராமல் தடுப்பதில் வைட்டமின் ஈ சிறந்த நச்சு முறிவு மருந்தாகச் செயல்படுகிறது. இது கிடைக்க சூரியகாந்தி எண்ணெயில் சமைப்பது, பாதாம் பருப்பு, வேர்க்கடலை முதலியவற்றை அளவுடன் வறுத்துச் சாப்பிடுவது, தினமும் வைட்டமின் ஈ யை 200 சர்வதேச அலகு என்ற அளவில் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வருவது ஆகியவை ‘வருமுன் காப்போம்’ என்ற விதியை உண்மையில் கடைப்பிடிப்பதாகும்.


வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் ஆகியவற்றைப் போலவே சிறந்த ஆன்ட்டிடாக்ஸிடென்ட்டுகளாக செலினியம், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய தாது உப்புக்களும் செயல்படுகின்றன. இதனால் திசுக்களும், அதைச் சுற்றியுள்ள சவ்வுப் பகுதிகளும் பாதுகாப்பாக ஆக்கப்பட்டு முதுமையைத் தள்ளிப்போட்டு ஆரோக்கியமாக வாழ வைக்கின்றன. இந்த மூன்று நச்சு முறிவு மருந்துகளும் கிடைக்கத் தினைமாவு, பாசிப்பருப்பு, பார்லி அரிசி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சாத்துக்குடி, வாழைப் பழம், திராட்சை, சோயா மொச்சை முதலியவற்றை அடிக்கடி உணவில் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குடிகாரர்கள் இந்த உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் குடியினால் வரும் கேடுகள் தடுக்கப்படும். மக்னீசியம் அளவு உடலில் குறைவாக இருந்தால் மாரடைப்பு ஏற்படும். திராட்சைப் பழம் திடீர் மாரடைப்பை முற்றிலும் தடுக்கும்.


உடலில் நோய்களை உருவாக்கும் நச்சுக்கூறுகள் சேரும்போதெல்லாம் அவற்றை முற்றிலும் முறித்து உடல் நலனைப் பாதுகாப்பில் வைத்திருக்கும் மேற்கண்ட பதினெட்டு வகையான உணவு வகைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதுடன் ஏற்கனவே உள்ள உடல் நலக்கோளாறுகளையும் முற்றிலும் குணமாக்கிவிடும்.


இத்துடன் படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் உள்ளங்கையில் புள்ளிகள் இடம் பெற்றுள்ள பகுதிகளில் தலா ஒரு நிமிடம் விட்டுவிட்டு அழுத்தவும். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்ததும் கட்டை விரலால் இப்படி அழுத்துவதால் தைமல் சுரப்பி எழுச்சி பெற்று வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்கி கிருமிகளை அழித்து விடும். மாலையிலும் இதுபோல் ஒரு புள்ளிக்கு ஒரு நிமிடம் வீதம் ஆறு புள்ளிகளிலும் அழுத்தவும். இதைச் செய்தால் செலவில்லாமல் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி விடலாம்.


***
thanks கே.எஸ்.சுப்ரமணி
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "