...

"வாழ்க வளமுடன்"

20 ஏப்ரல், 2011

அழகான பாதாங்களுக்கு பெடிக்யூர் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


பாதங்களை அழகாக்குவதற்கு பெடிக்யூர் செய்து கொள்கிறோம். இதை நல்ல தரமான அழகு நிலையத்தில் செய்து கொள்வதற்கு அதிகமாக செலவாகும். இப்படி செய்து கொண்டாலும், அதை அனேகம் பேர் விரும்புவதில்லை. காரணம், அது மருத்துவ முறையில் இயந்திரத்தனமாக செய்யப்படுகிறது. இதோ, வீட்டிலிருந்தபடியே இதை செய்து கொள்வதற்கு சில ஆலோசனைகள்….





* கால் நகங்களில் ஏற்கனவே இருக்கும் பாலீஷ்களை முதலில் நீக்க வேண்டாம். இதற்கு தேவையான ஸ்க்ரப்பர், கிரீம், துவாலை, காலுறை, செருப்புகள் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.




* நகத்தை வெட்ட வேண்டும். அப்படி வெட்டும் போது, நகத்தை ஒட்ட வெட்டக் கூடாது. கால் இன்ச் அளவிற்கு இடைவெளி விட்டே வெட்ட வேண்டும். நகத்தை வெட்ட மற்றும் நகத்தின் அழுக்குகளை எடுக்க என்று, இரண்டுவிதமாக செயல்படும் நகவெட்டிகளை பயன்படுத்துவது நல்லது.




* பிறகு, மிதமான சுடுநீரில் சிறிதளவு ஷாம்பூ கலந்து, அதில் நம்முடைய கால்களை வைத்து ரிலாக்ஸாக சாய்ந்து அமர்ந்து கொண்டு புத்தகம் படிப்பது அல்லது நமக்கு பிடித்தமான இசையை ரசிப்பது என்று அதை அனுபவிக்கலாம்.


* கால்களுக்கான நல்ல தரமான ஸ்க்ரப்பர், பூமிஸ் கல், அதற்கான பிரஷ் போன்றவற்றை கொண்டு நன்றாக கால்களை தேய்த்துவிட வேண்டும். இதன் மூலம், கால்களில் படிந்துள்ள இறந்த செல்கள் உதிர்ந்துவிடும்.




* கால்களை இவ்வாறு தேய்க்கும் போது சிலருக்கு வலி ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படாமல் தவிர்க்க, அதற்கான கிரீம்கள் அல்லது பவுடரை தடவி தேய்க்கலாம். இப்படி செய்வதால், வலி குறைவதுடன் இறந்த செல்களும் இதனுடன் சேர்ந்து உதிர்ந்துவிடும்.



* இந்த செய்முறை முடிந்தவுடன், கால்விரல்களின் கணுப்பகுதியில் உள்ள தேவையில்லாத சதையினை, அதற்கென உள்ள பிரத்யேக கருவியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.




* இது முடிந்தவுடன், அடுத்தது முக்கியமாக செய்ய வேண்டியது கால்கள் மற்றும் நகங்களுக்கு தகுந்த மாய்ஸ்டரைசர் மற்றும் நக கிரீம் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.



* முகத்திற்கு தரமான அழகு சாதனப் பொருட்களை வாங்கி உபயோகிப்பது மட்டும் போதாது. நம்முடைய கால்களையும் நாம் பேண வேண்டும்.
கால்விரல்களுக்கு நல்ல தரமான நகப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டும்.



* பெடிக்யூரை மாதத்திற்கு ஒருமுறையாவது செய்து கொள்வது நம்முடைய பாதங்களை அழகாக, மென்மையாக வைக்கும்.




* நம்முடைய தோழிகளை அழைத்து ஒருநாளில் அனைவரும் சேர்ந்து பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.


***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "