இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கூலிங் கிளாசின் மிக முக்கியமான பகுதி அதன் கண்ணாடி அல்லது லென்ஸ். வாங்குவதற்கு முன் லென்ஸ் சரியாக உள்ளதா அல்லது பார்வையை கோணலாக்குகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
ஒரு கண்ணை மூடிக் கொண்டு கண்ணாடி வழியே கதவு முனை போன்ற நேரான பொருளைப் பார்க்கவும். நேராக இல்லாமல் கதவின் முனை கோணலாக தெரிந்தால், வேறு கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கவும்.
பொதுவாக கண்ணாடி, பாலிகார்பனேட் பிளாஸ்டிக், அக்ரிலிக் ஆகியவற்றால் லென்ஸ்
தயாரிக்கப்படுகிறது. இவற்றில் கண்ணாடியால் ஆன லென்ஸ் சிறந்தது என்றாலும் இதன் விலையும், எடையும் அதிகம். அத்தோடு எளிதில் உடைந்து விடும்.
அடுத்தபடியாக பாலிகார்பனேட் பிளாஸ்டிக் சிறந்தது. இதில் விரைவில் கோடுகள் விழாது, கண்ணாடி லென்ஸை விட உறுதியானது. விலை மலிவான அக்ரிலிக்கால் ஆன லென்ஸில் வெகு சீக்கிரம் கீறல்கள் விழ வாய்ப்புண்டு.
பல்வேறு நிறங்களில் லென்ஸ் கிடைக்கின்றன. கிரே மற்றும் பச்சை நிறங்களில் உள்ள லென்ஸ் உலகத்தை உள்ளபடியே காட்டும்.
***
thanks val
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக