...

"வாழ்க வளமுடன்"

16 ஏப்ரல், 2011

10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!''

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இது ஜோஷ்னா ரகசியம் உலக அளவிலான ஸ்குவாஷ் தர வரிசைப் பட்டியலில் எந்த நேரத்திலும் முதல் ரேங்க்கை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ள இந்தியர் - ஜோஷ்னா சின்னப்பா! கனவு நனவாகும் நாளுக்காக இரவு பகலாகப் பயிற்சியில் இருக்கிறார் ஜோஷ். ''ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் பயிற்சி. ஆனா, ஒவ்வொரு நாளும் விதவிதமா பிராக்டீஸ் பண்ணுவேன். வாரத்தில் மூணு நாள் ஜிம், மத்த நாட்களில் சைக்கிளிங், ஜாக்கிங்னு உடலை ரிலாக்ஸ் ஆக்கும் பயிற்சிகள் செய்வேன். தினமும் மூணு மணி நேரம் ஸ்குவாஷ் பயிற்சி. அதிலும் சும்மா நெட் பிராக்டீஸ் பண்ணாம, பிராக்டீஸ் கேம் ஆடுவேன். அதில்தான் கவனத்தைச் சிதற விடாம பிரஷர் சிச்சுவேஷன்களைச் சமாளிக்கும் பயிற்சி கிடைக்கும். 'எப்படா இவ ரெஸ்ட் கொடுப்பா?’னு என் உடம்பு ஏங்கும் அளவுக்குப் பாதி நாள் இந்தப் பயிற்சிகளிலேயே போயிடும். கேப் கிடைச்சா... நல்லா ரெஸ்ட் எடுப்பேன். இதுக்கு நடுவில், அப்பப்போ ஸ்விம்மிங்... செம ஜாலியான எக்சர்சைஸ். மத்த பயிற்சிகளால் சோர்ந்துபோய் இருக்கும் உடம்புக்கு, ஸ்விம்மிங்தான் நல்ல ரிலாக்சேஷன்!'' எனும் ஜோஷ்னாவுக்கு யோகா மீதும் ஆர்வம் அதிகம். ''உணவு விஷயத்தில் எப்படி?'' என்றால், ''ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிடுவேன்!'' என்று ஆச்சர்யப்படுத்துகிறார். ''வழக்கமான மூணு வேளை உணவைப் பிரித்து, ஆறு வேளைகளாகச் சாப்பிடுவேன். பசிக்கப் பசிக்கச் சாப்பிடுவேன். மற்றபடி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிடுவேன். வாரத்துக்கு இரண்டு நாட்கள் கீரை சாப்பிட வெச்சிருவாங்க. சாப்பாட்டுக்கு ஏற்றபடி பயிற்சிகளில் தீவிரம் காட்டுவேன். ஜூஸ் நிறையக் குடிப்பேன். அது உடம்பின் எனர்ஜி குறையாமல் பார்த்துக்கொள்ளும். நிறையத் தண்ணீர் குடிப்பேன். உடம்போட நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதில் நான் ரொம்ப சமர்த்து!'' என்கிற ஜோஷ்னா, தீவிரமான சாக்லேட் பைத்தியம். ''அது என்னவோ இன்னமும் சின்னக் குழந்தை மாதிரி சாக்லேட் மேல் அவ்வளவு ஆசையா இருக்கு. தோல்வியால் மனசு துவண்டுபோகாமல் இருக்க, சாக்லேட்தான் எனக்கு உதவுது!'' என்கிறார் குழந்தையாக. உடலை உற்சாகப்படுத்தும் பயிற்சிகள் போக, போட்டிக்கு முந்தைய சில மணி நேரங்களில் மனதை ஒருமுகப்படுத்தும் தியானத்தில் ஈடுபடுவது ஜோஷ்னா வழக்கம். ''போட்டி ஆரம்பிக்க சில மணி நேரங்கள் இருக்கும்போது, அமைதியான இடத்தில் தியானத்தில் ஆழ்ந்துவிடுவேன். 10 நிமிஷ ஆழ்ந்த தியானம், 10 நாள் தீவிரப் பயிற்சிக்குச் சமம். என்னதான் தீவிரமான பயிற்சிகள் மூலம் உடம்பை ஃப்ளெக்ஸிபிளா வெச்சுக்கிட்டாலும், ஸ்குவாஷ் விளையாடுறப்போ... மிகச் சில நொடிகளில் எதிராளிக்கு எதிரான வியூகங்கள் வகுப்பதற்கு மனசு நம்ம கன்ட்ரோல்ல இருக்கணும். ஒரே ஒரு கணம் நிதானம் தவறிப் பதற்றப்பட்டாலும், கேம் நம் கையைவிட்டு நழுவிடும். அதனால், பிராக்டீஸ் பண்ண மறந்தாலும், போட்டிக்கு முன் தியானத்தை மட்டும் தவறவிடவே மாட்டேன்!'' தன் வெற்றி ரகசியம் சொல்லும் ஜோஷ்னாவின் இறுதி பஞ்ச் இது... ''எப்பவும் மனசு சந்தோஷமா இருக்கணும். ஆறு மணி நேரத்துக்குக் குறையாமல் தூங்கினா, அதைவிட உடம்புக்கு வேற பெரிய ரீ-சார்ஜ் கிடையாது. நாம தூங்கிட்டு இருந்தாலும், நம்ம உடம்பு சும்மா இருக்காது. அடுத்த நாள் நாம் இயங்குவதற்காக, நம் உடம்பு ரீ-சார்ஜ் ஆகிட்டேதான் இருக்கும். அதை எப்பவும் மிஸ் பண்ணவே கூடாது!'' *** நன்றி விகடன் *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "