இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உடற்பயிற்சி (Exercise) மற்றும் யோகா இரண்டுமே உடல் நலத்திற்காக அமைந்தது என்றாலும் இரண்டிற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளது. முக்கிய வேறுபாடுகளை கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உடற்பயிற்சி (Exercise)யோகா (Yoga) உடல் சக்தி அதிக அளவு விரயமாகும் உடல் சக்தி விரயம் மிக மிக குறைவு. சக்தியை சேமிக்கும் அதிக சக்தி விரயத்தால் அதிக உணவு சக்தி உடலுக்கு தேவை சாதாரண உணவு போதுமானது செய்யும் போது தளர்ச்சியை கொடுக்கும் எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும் அதிக நேரம் செய்ய வேண்டும் குறைந்தது 5 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை போதுமானது.
அதிக நேரம் செய்தாலும் சில பயிற்சிகளை செய்ய அதற்கான கருவிகள் , அதற்கான இடம் தேவைப்படும் பிரத்யேகமாக எந்த கருவியும் தேவையில்லை அதிகமாக வெளித்தசையை மட்டும் பலப்படுத்தும் உள் உறுப்புகளையும் பலப்படுத்தும் உடல் கடினத்தன்மை பெறும் உடல் வளையும் தன்மையும் உறுதியும் பெறும் செல்கள் வளர்வதை கூட்டி வயதை சீக்கிரம் அதிகமாக காட்டும் இளமையாக காட்டும் முரட்டுத்தன்மை அதிகமாகி அது பழகிவிட்டதால் நாளாக நாளாக குறையத்துவங்கும்.
போட்டி குணம் பெருகும் உள்ளம் அமைதியாகி எந்நிலையையும் ஏற்கும் பக்குவம் பெறும். சாந்த குணம் வளரும் அதிக வியர்வை வெளியாகும். வியர்வை வராது. அதனால் குளித்து விட்டும் செய்யலாம். உடல் உள் நோய்களை தடுக்கும் சக்தி அதிகமாக கிடையாது யோகா தேவையான எல்லா ஹார்மோன்களையும் தேவைக்கேற்ப சுரக்க வைப்பதால்
நோய்தடுப்பு மருந்தாக விளங்குகிறது இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் இரத்த அழுத்தத்தை சமச்சீராக்கும் கடினமாக செய்ய வேண்டும் எளிதாக செய்தே அதிக பலன் பெறலாம் தொடர்ந்து செய்ய வேண்டும். இல்லையேல் கொழுப்பு அதிகரிக்கும்.
ஆண்களுக்கு தொந்தி வரும் எந்த கெடுதலும் இல்லை வேறு கருவிகள் தேவைப்படுவதால் பணச்செலவு ஆகும் எவ்வாறு செய்வது என்பதை அறிந்து விட்டால் எந்த செலவும் இல்லை உடல் திறன் மட்டும் பெருகும் உடல் திறனுடன் அறிவுத்திறன் மற்றும் ஞாபக சத்தி பெருகும் மனதிற்கான பயிற்சி கிடையாது மனதிற்கான பயிற்சி உண்டு வெளிநாட்டு வரவு இந்திய ஆதிகால பயிற்சி
***
ஒற்றுமைகள்:
வேறுபாடுகளை பார்த்தது போல சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்
இரண்டு பயிற்சிகளுமே உடல் நலத்திற்கானது சில குறிப்பிட்ட பயிற்சிகளை தக்க ஆசிரியரிடம் கற்காமல் செய்வது ஆபத்தானது
வெற்று வயிற்றுடன் செய்ய வேண்டும். சாப்பிட்ட உடன் செய்யக்கூடாது. அல்லது 4 மணி நேரம் கழித்தே செய்ய வேண்டும்
காலையும் மாலையும் இப்பயிற்சிகள் செய்ய உகந்த நேரம்
பயிற்சி செய்யும் போது எளிமையான உடை அவசியம்
நல்ல காற்றோட்டமான இடம் நல்லது
கர்ப்பிணி தாய்மார்கள் 3 மாதத்திற்கு பிறகு இப்பயிற்சிகளை செய்யக்கூடாது.
அல்லது மிகமிக எளிமையானவற்றை மட்டும் மருத்துவர் ஆலோசனை படி செய்யவேண்டும்
***
thanks வினோத்
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக