குறிப்பாக அணு உலைக் கூடங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள், இரைச்சலும் அதிர்வும் கூடிய கனரக இயந்திரங்கள், அறுவைச் சிகிச்சையறை சூழல்கள், கதிர்வீச்சு சார்ந்த தொழில்கள் மற்றும் கதிரியக்கச் சிகிச்சைத் துறைகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் பெண்கள் கருத்தரிக்கும் சூழலில் அவை கருவைப் பாதிக்கின்றன;
*
இதுபோன்ற பணியிடங்களில் வேலை செய்யும் ஆண்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, குறைபாடான அணுக்கள், ஆண்மையிழப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
*
குறிப்பாக, கதிர்வீச்சுக்கள், பாதசரம், பென்சீன், காரீயம் போன்ற சில ரசாயனங்கள் உள்ள இடங்களில் வேலை செய்வோருக்கும், மிகுந்த சிரமும், களைப்பும் ஏற்படுத்தும் வேலைகளைச் செய்வோருக்கும் இந்தப் பாதிப்புக்கள் அதிகம்.
*
எனவே, இதுபோன்ற பணியிடங்களில் வேலை செய்யும் பெண்கள், கருத்தரித்ததும் உடனடியாக தங்களது பணிச் சூழலை மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.
*
கரு பாதிக்கப்படக்கூடும் என சந்தேகித்ததால் உரிய முறையில் பரிசோதனைகள் மேற்கொள்வதோடு, தங்கள் மேலதிகாரிகளிடம் இதைப்பற்றி எடுத்துக்கூறி, பாதுகாப்பான வேறு பிரிவுகளுக்கு மாற்றல் வாங்கிக்கொள்ளலாம்.
*
பணியை மாற்றிக் கொள்ள இயலாது என்றால், பிரசவ காலம் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். எந்த வகையிலும், ஆபத்தான பணிச் சூழலில் கருத்தரித்த பிறகு வேலை செய்வதை தொடர வேண்டாம். அது உங்களுக்கும், உங்களது கருவிற்கும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
*
மேலும், எக்ஸ்-ரே எடுக்கும் வேலையையும், எக்ஸ்ரே அறைக்குள் அடிக்கடி சென்று வருவதையும் கருவுற்றப் பெண்கள் தவிர்க்க வேண்டும். கருவுற்ற சமயத்தில் ஏதேனும் உடல் உபாதைக்காக எக்ஸ்ரே எடுக்க வேண்டி வந்தால், வயிற்றுப் பகுதியை மிகவும் பாதுகாப்பான முறையில் மறைத்துவிட்டு பிறகுதான் எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.
*
கருவுற்ற பெண்கள் பலவற்றையும் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
***
thanks z9world
***
0 comments:
கருத்துரையிடுக