...

"வாழ்க வளமுடன்"

03 பிப்ரவரி, 2010

வடை கறி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எங்கள் வீட்டில் நாங்கள் செய்யும் " வடை கறி " இது என் அம்மாவின் கை மணம்.

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2 ( மீடியம் சைஸ் )
தக்காளி - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 2
கிராம்பு, பட்டை - 3,2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க மட்டும்

செய்முறை:

1. முதலில் பருப்பை 1/2 மணி நேரம் ஊறவிட்டு ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.

2. அதை சிறு சிறு உருண்டைகலாக உருட்டி ஆவியில் வேக விடவும். பிறகு அதை உதுத்து விடவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு பொரித்ததும் இடித்த இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.


4. பிறகு மஞ்சத்தூள், உப்பு, காரம் தேவை எனில் மிளகு தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

5. கொதித்ததும் உதித்து வைத்துள்ள பருப்பை ( ஆவியில் வேக வைத்தது ) போட்டு கொதிக்க விடவும்.

6. கொத்த ம‌ல்லி போட்டு இற‌க்க‌வும்.

2 comments:

அண்ணாமலையான் சொன்னது…

சவாலக்கடி கிரி கிரி
இந்த ப்ளாக்குல போட்டாங்க
வட கறி...

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணா. உங்கலுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். நல்ல கருத்தும் சொல்லுரிங்க. அதை நகைச்சுவையோட சொல்லுரிங்க. நன்றி அண்ணா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "