...

"வாழ்க வளமுடன்"

03 டிசம்பர், 2010

கார்டின் ( மஞ்சள் முள்ளங்கி ) மருத்துவ குணங்கள் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.



காரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் காரட் கிடைக்கின்றது. காரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது.

*

காரட் அல்லது மஞ்சள் முள்ளங்கி எனப்படுவது சிவப்பு அல்லது மஞ்சள்சிவப்பு (ஆரஞ்சு) நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.

*

மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A (vitamin A) வாக மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுக்களில் கண்டறியப்பட்டுள்ளது.

*

பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம்.

**

100 கிராம் காரட்டில் உள்ள சத்துக்கள்:

சக்தி 41 கலோரிகள்
கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம்
நார்சத்து 3 கிராம்
கொழுப்புச் சத்து 0.2 கிராம்
புரோட்டின் 1 கிராம்

*

வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்)
பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்)
வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்)
வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்)
வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்)
வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்)
வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்)
வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்)

*

கால்சியம் - 3% (33 மில்லி கிராம்)
இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்)
மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்)
பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்)
பொட்டாசியம் - 5% (240 மில்லி கிராம்)
சோடியம் 2.4 மில்லி கிராம்

***

தாவரத் தங்கம் - காரட்:

தாவரத் தங்கம் என்று நாம் அவ்வப்போது உணவில் பயன்படுத்துகின்ற ஒரு பொருளை அழைக்கிறார்கள். அது எந்தப் பொருள் தெரியுமா? காரட் தான் அது. காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

*

தங்க நகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகூட்டுகின்றதோ அவ்வாறு காரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும் என்பதனால் தான் காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

அது மட்டுமல்ல வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. உலகத்தில் இதுவரை மருந்தே கண்டு பிடிக்கப்படாத ஒரு நோய் உண்டென்றால் அது புற்று நோய் (கேன்சர்) தான்.

*

அந்த நோய் நமக்கு வராமல் செய்கின்ற ஆற்றல் வேறு எந்த காய் கறிக்கும் கிடையாது. அந்த சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. காரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து உள்ளது தான் இதற்கு காரணமாகும்.

*

இதனை உயர்வாக சொல்வது என்றால் காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகின்ற சத்து உள்ளது என்று சிறப்பித்து விஞ்ஞானிகள் கூறுவார்கள்.

*

இந்த பீட்டா கரோட்டினின் உள்ள சிறப்பு அணுக் கூறுகள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. இந்த சமயத் தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற ஆற்றல் மட்டும்தான் உள்ளதா?

*

இல்லை-புற்று நோய் வந்தவர்களுக்கு குணம் அளிக்கின்ற ஆற்றல் காரட்டில் உள்ளதா? என்று நீங்கள் கேட்கலாம். காரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது.



காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர் பான எல்லாவித நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்ற சக்தி பெற்றவை.

*

உதாரணமாக பல காலமாக அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் காரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் வரவிடாமலும் செய்துவிடும் காரட்.

*

சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்து கொண்டே இருக்கும் எத்தனை தடவை பல் துலக்கினாலும் அந்த துர்நாற்றம் சிலரு க்கு போகவே போகாது. அதற்கு காரணம் வாயோ, பற்களோ அல்ல.

*

வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். எனவே வயிறு குறைபாட்டை ஒழித்தால்தான் அந்த வாய் துர்நாற்றம் போகும். வாய் துர் நாற்றம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு இனிப்பான செய்தி இது.

*

வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள். அப்புறம் பாருங்கள் வாய் துர்நாற்றம் போயே போயிந்து என்று நீங்கள் சொல்வீர்கள்.

*

காரட்டினை வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது.

*

காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். உங்களுக்கு தாங்க முடியாத பசியா? எதாவது கிடைத்தால் சாப்பிடலாம் என்று தோன்றுகின்றது…

*

ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்கின்ற சூழ்நிலையா? சற்றும் தயங்க வேண்டாம். அருகில் காய்கறி கடை உள்ளதா என்று பாருங்கள். ஒரே ஒரு காரட் வாங்கி பச்சையாக மென்று தின்று பாருங்கள். பசி காணாமல் போய் விடும். காய சண்டிகையின் தீரா பசியைகூட காரட் போக்கி விடும் சக்தி பெற்றது.


***

சத்தான சாறு எது?

காரட் சாறு

1. மிகவும் சத்தான சாறு காரட்தான்! மலச்சிக்கலை உடனடியாக அகற்றும். காரட் சாறு தயாரிக்கும் போது எலுமிச்சம்பழம், புதினாக்கீரை சேர்த்து தயாரித்து அருந்தினால் மலச்சிக்கல் அகலும். இந்தச் சாற்றில் உப்பைச் சேர்க்கக்கூடாது.

*

2. கண்களில் பலவீனம் உள்ளவர்கள், படிக்கும் போது கண்களில் எரிச்சல் உள்ளவர்கள், எழுத்தாளர்கள் தினமும் காரட் சாறு அருந்தி வந்தால் ‘விழி லென்ஸ் பவர்’ குறைவது தடுக்கப்படும். அதில் அதிக அளவு உள்ள வைட்டமின் ஏ, கண்களை தளர்ச்சி, பலவீனம் முதலியவை அண்டாமல் பார்த்துக் கொள்கிறது.

*

3. முட்டையில் உள்ளது போலவே பி குரூப் வைட்டமின்கள் அதிகம் உள்ளது காரட் சாறு. இந்தச் சாறு எளிதில் செரிமானமாகும். நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள் காரட் சாறு பருகும் பழக்கத்தை தினமும் பின்பற்ற வேண்டும். வயிற்றை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வதால் குடல்வால் வியாதி வராது. கல்லீரல், வயிறு முதலியவற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் காரட் சாறு அருமருந்து.

*

4. இதயத் துடிப்பைச் சீராக வைத்துக் கொள்ள காரட் சாறு உதவும். இரத்தம் கெட்டியாகி உறைந்துவிடாமல் கவனமாகக் கண்காணித்து, இதய அடைப்பில் இருந்து முழு விடுதலை அளிக்கும். இதனால் வாழ்நாள் அதிகரிக்கும்.

*

5. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக சக்தி அதிகரிக்கவும், புத்திகூர்மை உண்டாகவும், ஏழு எட்டு பாதாம் பருப்புகளுடன் காரட் சாறு அருந்தி வந்தால் போதும், மூளை விழிப்புடன் இருக்கும். மஞ்சள்காமாலை நோயாளிகள் விரைந்து குணமாக தினமும் அருந்தும் காரட் சாறு உதவுகிறது.

*

6. இரத்தப் புற்று நோயாளிகள் தினமும் காரட் சாறு அருந்த வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். வயிற்றில் உள்ள பூச்சிகளை மருந்தின்றி அப்புறப்படுத்தவும், வறண்ட தோல் பளபளப்பாக மாறவும், பருக்கள் மருந்தின்றி மறைந்து முகம் சிவப்பாக மாறவும், நெஞ்சுவலி, முதுகுவலி குணமாகவும், மாத விலக்குக் காலம் சரியான இடைவெளியின்படி ஏற்படவும் தினமும் ஒரு டம்ளர் காரட் சாறு அருந்தி வரவேண்டும்.

*

7. தாய்ப்பால் தரமாக இருக்கவும், தொடர்ந்து கிடைக்கவும் காரட் சாறு அருந்த வேண்டும். குறைவான செலவில் கிடைக்கும் சத்துணவு இது. ஓரளவு சதைப்பிடிப்புடன் வளர விரும்பும் ஒல்லியான மற்றும் இரத்த சோகையுள்ளவர்கள் தினசரி அருந்த வேண்டிய சாறு, காரட் சாறுதான்.புதிய காரட்டுகளை உடனுக்குடன் மிக்ஸியில் அரைத்துத் தயாரித்து அருந்துவதே நல்லது.

*

8. இரத்தத்தில் உள்ள தேவை இல்லாத யூரிக் அமிலத்தை காரட் சாறு கட்டுப்படுத்துகிறது. இதனால், மூட்டுவீக்கம் மற்றும் வாத நோயாளிகள் வலியிலிருந்து முழுவதும் குணம் பெறுகிறார்கள். உருளைக்கிழங்கில் உள்ளதைவிட 6 மடங்கு அதிகமான சுண்ணாம்புச் சத்து காரட்டில் இருக்கிறது. இந்தக் கால்சியம் எளிதில் ஜீரணிக்கப்படுவதால், எலும்புகள் உறுதி பெறுகின்றன. பெண்கள் எலும்பு மெலிந்து உடைந்து போகும் நோயில் இருந்து தப்பிக்கலாம்.

*

9. Tocokinin என்ற ஹார்மோன் காரட்டில் இருக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் போல் இருந்து உதவுகிறது. எனவே, இவர்களும் காரட்டின் சாறு அருந்தலாம். குழந்தை இல்லாத தம்பதிகள் தினமும் அருந்தும் காரட் ஜுஸில் உள்ள வைட்டமின் ‘ஈ’யால் குழந்தை பாக்கியம் அடைய வாய்ப்பு உண்டு.

*

10. இவ்வளவு நன்மைகள் கொண்ட காரட் ஜுஸை தினமும் ஒரு கிளாஸ் அருந்தினாலே போதும். அதிகத்தடவை அருந்தினால் மூலத்தொந்தரவுகள் வரவும் வாய்ப்புண்டு.

by- கே.எஸ்.சுப்ரமணி.


***
thanks ஈகரை
thanks தமிழ்வாணன்.காம்
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

2 comments:

ஆமினா சொன்னது…

நல்ல தகவல் பிரபா!!!!

வாழ்த்துக்கள்

prabhadamu சொன்னது…

/// ஆமினா கூறியது...
நல்ல தகவல் பிரபா!!!!

வாழ்த்துக்கள்

///

நன்றி ஆமினா. உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "