...

"வாழ்க வளமுடன்"

24 நவம்பர், 2010

மூல நோயாளிகளுக்கு இயற்கை வைத்தியமும் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
1. இரத்தமூலத்திற்கு பசும்பால் கறந்தவுடன் மேலிருக்கும் நுரையை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து காலை, மாலை இருவேளை பருகினால் 3லிருந்து 7 நாட்களுக்குள் இரத்தப் போக்கு நிற்கும்.




2. நீண்ட நாள் இரத்த மூலத்திற்கு தயிரில் வெங்காயத்தை ஊறவைத்து தினம் இருவேளை சாப்பிட்டால் நல்லது.

*

3. எல்லா வகையான மூலத்திற்கும் தொட்டால் சிணுங்கி, செடி, இலை, தண்டு, வேர் இவைகளை கசாயமாக செய்து அருந்தலாம். வலி, வீக்கம் குறையும்.

*

4. எல்லா வகையான மூலத்திற்கும் கிரந்தநாயகம் இலையை பருப்புடன் சேர்த்து கூட்டுசெய்து சாப்பிட்டால் வலி, வீக்கம் இரத்தப்போக்கு தணியும்.

*

5. வெங்காய சாறுடன் நெய் அல்லது நாட்டுசர்க்கரை கலந்து பருகினால் விரைவில் குணம் பெறலாம்.

*

6. கொதிக்கும் நீரில் மாதுளம்பழ விதை சிலவற்றை போட்டு சிறிது நேரத்தில் இறக்கி தேநீர் போல் அருந்திவர விரைவில் குணம் பெறலாம்.

*

7. மூலம் வலி நீங்க சிறிதளவு பாலில் வாழைப்பழம் சேர்த்து கடைந்து ஜாம் போல் செய்து சாப்பிட்டு வர வலி நீங்கும்.

*

8. பாகற்காய் இலையை சாறெடுத்து மோருடன் கலந்து காலை, மாலை, பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.

*

9. வலியுள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து பூசலாம்.

*

10. மாங்கொட்டையிலிருக்கும் விதையை பவுடராக்கி இரண்டு ஸ்பூன் வீதம் தினம் இருவேளைதேன் கலந்து சாப்பிடலாம்


***
by - Dr. க. வெள்ளைச்சாமி, RHMP, RSMP
நன்றி - கீற்று.
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "