...

"வாழ்க வளமுடன்"

30 நவம்பர், 2010

நீங்களும் அழகி ஆகலாம் :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


முடி: முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

*

கண்: கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க பெள்ளரிக்காய் யூசை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்..

*

உதடு: உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர்,பால் இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரினால் கழுவி விடவும்.

*

முகம்: உருளைக்கிழங்கை துவைத்துச் சாறுபிழிந்து சமமாகத் தேன் கலந்து முகத்தில் பூசிவர முகம் அழகு பெறும்.

*

முகச் சுருக்கம் நீங்க: முட்டையின் வெண்கருவைத் தடவுங்கள் சொறிது நேரம் கழித்து முகம் கழுவ முகத்தில் உள்ள சுருக்கம் மறையும்.

*

கருமை நீங்க: கருமையடைந்த முகத்திற்கு, பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசிவர முகம் மலரும்.

*

முகத்தின் எண்ணெப் பசை நீங்க: முட்டையின் வெண்கரு 7 ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூண், தேன் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.

*

கரும்புள்ளி மறைய: முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி மறைய ஜாதிக்காயை அரைத்து பூசவும்.

*

முகப்பரு நீங்க: பூண்டு அல்லது கருந் துளசியை அரைத்துப் போட நாளடைவில் முகப் பருக்கள் மறையும்.

*

முக வறட்சி நீங்க: பச்சை கொத்தமல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும்.

*

வாய் நாற்றம் நீங்க: புதினா கீரையைக் காய வைது பொடிசெய்து பல்துலக்குவதால் வாய் நாற்றம் நீங்குவதுடன் பற்களும் பளிச்சென்று இருக்கும்.

*

வெண்மையான பற்கள்: இரவு நேரத்தில் பச்சை கெரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன் வெண்மை பெறும்.

*

உதடு: உதட்டில் தேங்காய் எண்ணை தடவி வந்தால் மினுமினுப்பாக இருக்கும்.

*

கை: பாத்திரம் தேய்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து நசித்து கைகளில் தேய்த்து வந்தால் கை மிருதுவாக இருக்கும்.

*

நகம்: நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணையை கை, கால் நகங்களுக்கு பூசி விடவும்.

*

மார்பகங்களைப் பாதுகாக்க: வெள்ளைக் குண்டுமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக் அரைத்து மார்பகங்களில் மீது பூசிவர தளர்ந்த மார்பகங்கள் சரியான வடிவம் பெறும்.

*

உடல் பருமன் குறைய: பப்பாளிக் காயை பொரியலோ, குழம்பு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

*

பாதம்: பாதத்தில் உள்ள (பித்த வெடிப்பு) வெடிப்பு நீங்க ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை, ஒரு ஸ்பூன் பன்னீர், இரண்டு ஸ்பூன் எலுமிச்சம் சாறு மூன்றையும் கலந்து வெந்நீரில் கால்களை 10 நிமிடங்கள் வைத்து ஊறிய பின் பூசிவர வெடிப்பு நீங்கும்.

*

வியர்வை நாற்ற அகல: ஆவரசம்பூவை நிழலில் உலர்த்தி சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குழித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.

*

கூந்தல் அடர்த்தியாக வளர: செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

*

கூந்தல் நல்ல கருமையாக: கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

*

முடி வளர: கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சை கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

*

பேன் தொல்லை நீங்க: வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற விட வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.

*

பொடுகு நீங்க: வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.

*

தலைமுடி பளபளப்பாக: தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் (சக்கை) தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

*

முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்க: கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். அதன் பின் காய்ந்ததும் கழுவவும்.

*

முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்ற: தோடம்பழச் சாற்றை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்றும்

*

முகத்தில் வியற்குரு, கொப்பளங்கள் மறைய: பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவினால், வியற்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்

*

பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க: எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்த கலவையால் பல் துலக்குங்கள்.

*

இமைமயிர் வளரவும் செழிப்பாக தோற்றமளிக்கவும்: தினமும் படுக்கைக்கு போகுமுன் ஆமணக்கம் எண்ணையை பூசி தேய்த்து விடுங்கள்.

*

காது அல்லது மூக்கு துளைகளில் புண் மாற: தோடு, மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்பட்டால்; பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.

*

கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க: முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும்.

*

தோல் சொர சொரப்பு நீங்க: சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.

*

தோல் சுருக்கம் நீங்க: தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

*

நகம் வெட்டும்போது: நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

*

எடை குறைய: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

*

தேவையிலாத முடிகளை நீக்க: முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

*

முகம் பளபளப்பாக: தோடம்பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் கம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

*

தோல் பளபளப்பாக: தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

*

முகம் பளபளப்பாக: முகம் பளபளப்பாக முட்டை வெள்ளை கரு கொஞ்சம் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் சென்ற பின் கழுவினால் முகம் இயற்கை பளபளப்புடன் இருக்கும்

*

சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற: கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

*

சருமம் நிறம் மாற: கேரட்ஆரஞ்சு சாறுடன் சிறிது பால் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் நிறம் மாறும்

*

தலை முடி செழித்து வளர: வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்

*

முகம் எப்போதும் இளமையுடன் இருக்க: கனிந்த பப்பாளி பழத்தை தோலுடன் அரைத்து முகத்தில் பூசிவந்தால் சுருக்கமும் தொய்வும் இன்றி முகம் எப்போதும் இளமையுடன் இருக்கும்

*

சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறைய: ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்

*

கண்கள் பிரகாசமாக இருக்க: இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்

*

கருவளையம் நீங்க: ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்

*

கருமை நிறம் மாற‌: பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

*

முகம் மிருதுவாக‌: கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

*

வியர்வை நாற்றம் போக: வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

*

இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

*

உங்கள் முகம் வறண்டு பொலிவில்லாமல் இருந்தால்: தினமும் குளிக்கும் முன்பு பால் ஏடை நன்றாக முகம் முழுவதும் தடவி 10நிமிடம் வைத்திருந்து கழுவி விடவும். உங்கள் முகம் நார்மலாகிவிடும்.


செலவே இல்லாமல் உங்கள் முகமும் பளிச் என ஆகிவிடும். கல் உப்பு ஆலிவ் ஆயில் இரண்டையும் கலந்து உடம்பில் ஸ்கிரப் செய்யலாம்


***
thanks: இணையம்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "