...

"வாழ்க வளமுடன்"

16 நவம்பர், 2010

குழ்ந்தை வளர்ப்பில் பல பரிணாமம் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உங்கள் குழந்தையின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்!




குழந்தைகளுக்கு வகை வகையான உணவுகளை ஆக்கித் தருகிறீர்கள். விதவிதமான உடைகளை வாங்கித் தருகிறீர்கள். இது போதுமா? நிச்சயம் போதாது. குழந்தையின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்?

*

நம்முடைய இயல்புகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இது தவறானது. குழந்தைகள் பெற்றோர்களிடம் பாதுகாப்பை மட்டுமல்ல, பரிவையும் எதிர்பார்க்கிறார்கள். அன்புடன் அக்கறையையும் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையையும் எதிர்பார்க்கிறார்கள்.


**

உங்கள் குழந்தைகளை நீங்களே புரிந்து கொள்ளாவிட்டால் பின்பு யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை மனிதர்களிடம் காணப்படுகிற ஒரு விசேஷப் பண்பு. உங்கள் குழந்தை உங்கள் சக மனிதர்தான். அடிமைகளைப் போல அவர்களை நடத்தாமல் நண்பர்களிடம் நடந்து கொள்வதைப் போல நடந்து பாருங்கள். உங்கள் குழந்தை வளர்வதை உணர்வீர்கள்.

உங்கள் குழந்தையும் பிறர் உணர்வும் எந்தக் குழந்தையின் உணர்வுகளை அதன் பெற்றோர்கள் அக்கறையோடு புரிந்து பரிவு காட்டுகிறார்களோ, அந்தக் குழந்தைதான் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறது என்று டாக்டர் பார்னெட் தெரிவிக்கிறார்.


**

பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை குழந்தைகளிடம் எப்படி இருக்கிறது?

இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் விரிவான ஆய்வு செய்து தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.

குழந்தைகள் வளர்ந்து வரும் சூழல்கள் அவர்களது குணத்தில் ஏற்படுத்துகிற மாற்றத்தை அந்த ஆராய்ச்சிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளன. இரக்ககுணம், அலட்சிய மனோபாவம், விரோத மனப்பான்மை போன்றவற்றைக் குழந்தைகள் சூழ்நிலைக்குத் தக்கவாறு பெற்று வளர்வதாகத் தெரிந்தது.


“பாதுகாப்பற்ற சூழலில் வளரும் குழந்தைக்குப் பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்” என்று டாக்டர் பார்னெட் கூறுகிறார்.


தன்னுடைய இயல்புகளை உணர்ந்து கொள்ளும் விலங்குகளால்தான் பிற விலங்குகளின் உணர்வைப் புரிந்து கொள்ள முடியும் என்று விலங்கியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதைப்போல மற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன் தன்னுடைய தனித்துவம் மீது கட்டுப்பாடு இருப்பதை ஒரு குழந்தை உணர்ந்து கொள்ள வேண்டும். பிறரின் உணர்வு களைப் புரிந்து கொள்ளும் உணர்வு குழந்தைகளிடம் நான்கு கட்டங்களில் உருவாகிறது என்கிறார்கள் மனவியல் வல்லுநர்கள்.


**

முதல் கட்டம்:


தனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியாத நிலையில் ஒரு குழந்தை இருக்கிறது. பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்தன்மை அவ்வளவாக இருக்காது. மற்ற குழந்தைகள் துன்பப்படுவதை அது பார்த்தால் பொதுவான ஒரு உணர்வைத்தான் வெளிப்படுத்தும்.


உதாரணமாக,

ஒரு குழந்தை தரையில் விழுந்து அதனால் சிராய்ப்பு ஏற்படுவதைப் பார்க்கும் இன்னொரு குழந்தை உடனே தன் முகத்தைத் தாயின் மடியில் புதைத்துக் கொள்ளும். இதுதான் ஏறத்தாழ 9 மாதத்தில் ஒரு குழந்தையின் வெளிப்பாடாக இருக்கும்.

**

இரண்டாவது கட்டம்:


குழந்தைகளின் வயது 14 மாத காலமாகும் போது அவை தனித்தன்மையைப் பெறத் துவங்கிவிடுகின்றன. அப்போது மற்ற குழந்தைகள் காயப்படுவதைப் பார்த்தால், இந்த குழந்தை காயம்பட்ட குழந்தையைச் சமாதானப்படுத்த முயற்சி செய்யலாம்.



அல்லது வேறு ஏதேனும் அரைகுறை முயற்சிகளை மேற்கொள்ளலாம். அடிபட்ட குழந்தையைத் தன் தாயிடம் அழைத்துச் செல்கிற நிலைமை வரையில்தான் இந்த அரைகுறை முயற்சிகள் தொடரும்.

**


மூன்றாவது கட்டம்:


இரண்டாவது வயது நிரம்பும்போது குழந்தை மூன்றாவது கட்டத்தை அடைகிறது. இப்போது தனக்கும் பிறருக்கும் உள்ள வேறு பாட்டை அறிந்து கொள்ளும் தன்மை அதனிடத்தில் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பிறரின் உணர்வுகளை உணரும் தன்மையும் உருவாகிறது.


***

நான்காவது கட்டம்:


குழந்தைப் பருவத்தின் இறுதி நிலையில்தான் பிறரின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அறிவாற்றலை குழந்தைகள் பெறுகின்றன. இப்போது மற்ற குழந்தை அனுபவிக்கும் உணர்வை இந்த குழந்தை அப்படியே உணராது. மற்ற குழந்தைகளின் சூழல்களுடன் உணர்வையும் பொருத்திப் பார்த்து உணர்ந்து கொள்ளும்.

உதாரணமாக


புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை சிரித்து விளையாடினால் அந்த குழந்தையின் மகிழ்ச்சியை இது அனுபவிக்காது.


***

குழந்தையை மதியுங்கள்:


பிறரின் உணர்வுகளை நம் குழந்தைகள் உணர்ந்து கொள்வதன் அடிப்படை நம் குழந்தை களின் உணர்வுகளை நாம் மதிப்பதுதான். கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் பிற குழந்தைகள் துன்பப்படும்போது இரக்கம் காட்டுவதில்லை.

*

துன்பத்துக்குள்ளான குழந்தையை இது வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கும். அல்லது அதன்அருகில் சென்று கூக்குரலிட்டு விட்டு அதனைத் தள்ளிவிடும் என்கிறார் டாக்டர் பார்னெட்.


*

எனவே, ‘பிள்ளை நல்லவராவதும் தீய வராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்பதைப் பெற்றோர் புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை. நம் பிள்ளையை நாம் மதித்தால் ஊரார் பிள்ளையை அது தானாய் மதிக்கும்.


***



குழந்தைகளின் குணமறிந்து செய்வோம் ஹோமியோ!



குழந்தைகளும் தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்தனித் தன்மைகள் உள்ளன. ஹோமியோவில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மருந்துகள் உண்டு.

AETHUSA BABY :

இக்குழந்தைகளுக்கு பால் ஒத்துக்கொள்ளாது.

பால் எந்த வடிவில் கொடுத்தாலும் பெரிய தயிர் கட்டிகளாக வாந்தியெடுக்கும்.

குழந்தை நிற்க முடியாமை.

தலை தொங்குதல்.

தலையை நேராக நிறுத்த முடியாமை.

மந்த நிலையில், குழம்பிய குழந்தை.

பல் முளைக்கும் காலத்தில் வரும் வயிறு உபாதை.

***

ANACARDIUM CHILD :

ஞாபக மறதி உள்ள சிறுவர்கள்.

திடீரென்று ஞாபக சக்தியை இழந்துவிடுவார்கள்.

தன்தோளில் ராட்சதன், தேவதை உட்கார்ந்திருப்பது போல் எண்ணம்.

குழந்தைகள் வயதானவர்கள் போல் தோற்றமளிக்கும்.

கால்கள் மெலிந்து காணப்படும்.

இச்சிறுவர்கள் சர்க்கரையை விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

எல்லாம் வியாதியும் சக்கரை அல்லது இனிப்பு தின்ற பின்புதான் ஏற்படும்.

மூத்திரம் தன்னையறியாமல் வெளியாகும்.


***


BARYTA CARB BABY :

புத்தி வளராத குழந்தை.

இக்குழந்தை பேசவும், நடக்கவும், தாமதமாகக் கற்றுக்கொள்ளுதல்.

புத்தியின்மை, ஞாபகமின்மை குழந்தைகள்.

புதிய மனிதர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால் குழந்தை கைகளால் முகத்தை மூடிக்கொள்ளுதல்.

நாற்காலி மேசைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் விளையாட விருப்பமில்லாது.

***

BELLADONNA BABY:

குழந்தையின் முகம்சிவந்து காணப்படும்.

சிறுவர்கள் பேய் பிசாசுகளை பார்ப்பதாகச் சொல்லுவார்கள்.

கருவிழி அகன்று இருக்கும்.

***

BOBAX-CHILD

குழந்தையைத் தூக்கி வைத்திருந்துவிட்டு கீழே இறக்கும் போது அலறும்.

கீழ் நோக்கும் எந்த அசைவும் பயத்தை கொடுக்கும்.

குழந்தையின் வாயில் புண் காணப்படும்.

எது சாப்பிட்டாலும் வாயில் இருந்து இரத்தம் வரும்.

குழந்தை மூத்திரம் போய்க்கொண்டே இருக்கும்.

***

CALCAREA CARB - BABY :

எலும்புகளில் பலமில்லாததால் சீக்கிரமாக நடக்காது.

குழந்தை மந்தமாய் உட்கார்ந்து கொண்டிருக்கும்.

புத்தியிருக்காது, சுறுசுறுப்பிருக்காது.

மிகப்பெரிய தலை மற்றும் உப்பிய வயிறு.

குழந்தையின் எலும்பு சரிவராமல் வளராது.

தலையில் எலும்பு சரிவராமல் வளராது.

தலையில் வியர்வை வரும்.

பல் முளைக்க கால தாமதம்.

குழந்தை செரிக்காத உணவை விரும்பி திங்கும்.

***

ALUMINA-BABY


குழந்தைகள் சாம்பல், கரி, கிராம்பு, மாவு, காபி, டீ, கொட்டை,போன்ற செரிக்காத உணவை விரும்பி சாப்பிடும்.

புட்டிப்பால் சாப்பிடும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.

***

AMBRA GRISEA - BABY:

குழந்தைகள் யாராவது இருந்தால் மூத்திரம் போகாது.

***

CHAMOMILLA - BABY

குழந்தைக்கு பல் முளைக்கும் காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு.

குழந்தைகள் வலி பொருக்காது.

குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டால் சமாதானடையும்.

குழந்தைகளை கீழே போட்டால் அழும்.

தன்னை பிறர் பார்ப்பதற்கோ அல்லது தொடுவதற்கோ விரும்பாது.

தூங்குவது போன்று நடிக்கும். ஆனால் தூங்காது.


***


CINA-BABY

நாக்குப்பூச்சி அதிகம் உள்ள குழந்தை.

மூக்கையும், ஆசனத்தையும் விரல்களால் நோண்டும்.

தூக்கத்தில் பற்களை நறநறவென்று கடிக்கும்.

கொடுக்கும் பொருட்களை தூக்கி எறியும்.

குழந்தை அழும்போது தூக்கி வைத்துக் கொண்டால் சமாதானம் அடையாது.

***

SULPHUR - BABY

குழந்தை கை, கால், கழுவ மற்றும் குளிக்க விரும்பாமை

குழந்தை அழுக்கடைந்து காணப்படும்.

உடல் மெலிந்து, வயிறு உப்பி காணப்படும்.

தண்ணீரைக் கண்டால் பயம்.

இரவு நேரங்களில் துணிகளை அவிழ்த்துப் போட்டுவிடும்.

(மேலே குறிப்பிட்டது போல் தங்கள் குழந்தையிருந்தால் அம்மருந்தை தக்க வீரியத்தில் கொடுக்கலாம்.)

**

குழந்தைகளின் குணநலன்களை மேம்படுத்தும் மலர் மருத்துகள்

“எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே பின்

நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே”


இன்றைய குழந்தையே நாளைய மனிதன். குழந்தைகள் வளரும்போது மனங்களில் மாசுபடிந்தால், அறிவுரைகளும், ஆலோசனைகளும் கூறி அவற்றை நீக்க முடியாவிட்டால் டாக்டர் பாச் மலர் மருந்துகள் மூலம் சிறந்த பலன்பெற முடியும்.

குழந்தையிடம் காணப்படும் இயற்கைக்குப் புறம்பான, எதிர்மறையான உணர்வுகளை, தீயபழக்கங்களை... ஆரம்ப நிலையிலேயே மலர் மருந்துகள் சிகிச்சை மூலம் எளிதில் திருத்த முடியும்.



ஒவ்வொரு குழந்தையும் சமுதாயத்திற்குப் பயனுள்ள பிரஜையாக மலர்ச்சி அடைய, சிறந்த ஆளுமைத் திறன்களைப் பெற கீழ்க்கண்ட மலர்மருந்துகள் பயன்படும்.

***


மலர்மருந்துகள்:


1. குழந்தை தூங்கி எழும் போது கோபத்துடன் எழுதல், தலையணை போர்வை மற்றவற்றை உதைத்தல், அழுதல் -செர்ரிப்ளம்

2. காலையில் நீண்ட நேரம் கழித்து விழிக்கும் குழந்தை - ஸ்கிளரான்தஸ்

3. எப்பொழுதும் தூங்கிக் கொண்டு இருத்தல். அதிக தூக்கம் - கிளமெடிஸ்

4. தூங்காமல் புரண்டு புரண்டு படுததல், அமைதியின்மையுடன் இருத்தல் - வொயிட்செஸ்ட்நட் + ரெஸ்கியூரெமடி

5. இரவு தூக்கத்தில் எழுந்து பயந்து வீறிட்டு அலறுதல் - Rock Rose, Aspen

6. தனியாக இருக்க தனியாக எங்கும் செல்ல பயம், பள்ளி செல்ல பயம் - மிமுலஸ்

7. பள்ளி செல்வதற்கு முன் வயிறு வலி, தலைவலி என ஏதோ ஒரு (பொய்) காரணம் சொல்லி பள்ளி செல்ல மறுக்கும் குழந்தை - செஸ்ட்நட்பட்

8. எல்லா நேரமும் விளையாட்டு விளையாட்டு என பொழுதை கழிக்கும் குழந்தைகள் ஓரிடத்தில் சிறிது நேரம் கூட அமைதி யாக உட்கார இயலாத குழந்தைகள் (Hyeractive children)) - வெர்வைன்

9. பேசுவதில், எழுதுவதில், சாப்பிடுவதில், நடப்பதில் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும், அதிவேகம், நிதானமின்மை - இம்பேஷன்ஸ்

10. எந்த விஷயத்திலும் ஈடுபடாமல் எங்கோ வெறித்தபடி மந்தமாக இருத்தல். படிப்பிலோ, வேலையிலோ ஈடுபடாமல் கனவுகளில், கற்பனைகளில் மிதத்தல் (Hypoactive) - கிளமேடிஸ்

11. எல்லாரின் அக்கரையும் கவனமும் தன்மேல் செலுத்த விருப்பம் சுயநலமுள்ள குழந்தை - சிக்கரி

12. எந்தவித காரணமுமில்லாமல் வெறுப்புணர்வு ஏற்படுதல்; எல்லாவற்றிக்கும் வெறுப்பு ஏற்படுதல் - வில்லோ

13. சாப்பிட வெறுப்பு - ஹால்லி

14. அதிக பசி, எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காமை - செர்ரிப்ளம்

15. குச்சி, சாக்பீஸ், மண் தின்னும் பழக்கம் - செர்ரிப்ளம், வால்நட்

16. பிறந்த குழந்தையின் மலச்சிக்கல் - வால்நட்

17. மலம் போன திருப்தியில்லாமல் திரும்ப மலங்கழிக்கும் உணர்வு (neffectual Urgin for stool) - ஸ்கிளரான்தஸ்

18. கடுமையான இருமல், கக்குவான் இருமல் (Whooping Cough) - வொயிட்செஸ்ட்நட் + ரெஸ்கியூரெமடி

19. அடிக்கடி சளி பிடித்தல் மற்றும் குழந்தை, அடிக்கடி காய்ச்சல் ஏற்படுதல் - வொயிட்செஸ்ட்நட்

20. தட்ப வெப்ப மாற்றங்களினால் ஏற்படும் சளி தொந்தரவுகள் அல்லது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் - வால்நட்

21. அழுகை வந்தாலும் அடக்குதல். அழுகையை வெளிக்காட்டாமை மனதுக்குள் அழுதல் - அக்ரிமோனி

22. அதிக வலி காரணமாக அழுதல், வலி தாங்காமல் கதறுதல் -செர்ரிப்ளம்

23. அடுத்தவர்கள் அனுதாபப்படுமளவு அழுதல் - சிக்கரி

24. எந்த விஷயத்தையும் நினைவுக்கு கொண்டு வதுவதில் தாமதல் - ஸ்கிளரான்தஸ்

25. வேடிக்கை பார்த்துக் கொண்டு எதையோ வெறித்தபடி கவனமில்லாமல் உட்கார்ந்திருக்கும் குழந்தை - கிளமெடிஸ்

26. வகுப்பறையில் ஒரு இடத்தில் அமராமல், இங்கும் அங்கும் விளையாடிக் கொண்டு இருத்தல் - இம்பேஷன்ஸ்

27. தேர்வு நேரத்தில் பதட்டம் தணிய -ரெஸ்கியூரெமடி

28. தேர்வுக்கு தன்னை தயார் செய்யும் மாணவர்களின் கடுமையான உடல் சோர்வு நீங்க - ஆலிவ்

29. தேர்வு நேரத்தில் ஏற்படும் மனச்சோர்விலிருந்து விடுபட்டு புத்துணர்வு பெற - ஹார்ன்பீம்

30. எந்த ஒன்றையும் செய்ய தொடங்கும் முன் தன்னால் இயலாது என தயங்குதல் (தன்னம்பிக்கையின்மை)- லார்ச்

by-மாற்று மருத்துவம்

***


குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:




குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?


*

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


*

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.


*

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


*

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.


*

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.


*

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.


*

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.


*

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.


*

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.


*

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.


*

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.



***
thanks மாற்று மருத்துவம் ஏப்ரல் 2010
thanks கீற்று
****



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "