இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அதிக எடை கொண்ட நடுத்தர வயதினரைப் பல்வேறு நோய்கள் சீக்கிரம் தாக்கும் என்றும், அதன் விளைவாக அவர்கள் வெகு விரைவிலேயே மரணத்தைத் தழுவ வேண்டி வரும் என்றும் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
*
சுவீடன் நாட்டைச் சேர்ந்த நடுத்தர வயதினரான ஆயிரத்து 758 பேரிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை, அமெரிக்க இதயக் கழகத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
*
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
பொதுவாக உடல் வளர் சிதை மாற்றத்தின் அடிப் படையில் இயங்கி வருகிறது. இந்த வளர்சிதை மாற்றம் என்பது நமது உணவு மற்றும் உடற்பயிற்சியின் அடிப்படையில் நடப்பது. சரியான சத்தான உணவு உட்கொள்ளாதது, முறையான தேவையான உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் வளர்சிதை மாற்றத்தில் கோளாறு ஏற்படும்.
*
அந்தக் கோளாறால் நீரிழிவு, தொப்பை போடுதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதல், டிரைகிளிசரைடு என்ற கொழுப்பு தேவைக்கும் குறைவாக இருத்தல் போன்ற பிரச்னைகள் தோன்றும். வளர்சிதை மாற்றக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஒருவர், இந்த நோய்களால் தாக்கப்பட்டு அற்பாயுசில் உயிரிழக்க வாய்ப்பு உண்டு.
*
இந்த வாய்ப்பு அதிக எடை கொண்டவர்களுக்கும், சாதாரண உடல் எடை கொண்டவர் களுக்கும் சமமாகவே இருந்ததாக பழைய ஆய்வுகள் தெரிவித்தன.
*
இந்நிலையில், சமீபத் தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக எடை கொண்டவர்களுக்கு இதுபோன்ற வளர்சிதை மாற்றக் கோளாறு இல்லையென்றாலும் அவர்கள் நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இரண்டரை மடங்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆய்வில் 63 சதவீதம் பேர் அதிக எடையால் இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
***
நன்றி "லங்கா"
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக