...

"வாழ்க வளமுடன்"

06 அக்டோபர், 2010

சின்ன விஷயம் தானே...! இப்படி நினைச்சீங்க...( டாக்டர்களின் ஆலோசனை )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சின்ன விஷயம் தானே...! இப்படி நினைச்சீங்க...


1. நண்பன் குடித்த பாட்டிலை வாங்கி, வாய் வைத்து தண்ணீர் குடிப்பது, ஒரே டம்ளரில் டீ குடிப்பது, ஒருவர் கர்சீப்பை இன்னொருவர் துடைத்துக் கொள்வது, தோழி சுவைத்த சாக்லெட்டை வாங்கி கடிப்பது... இது போன்ற விஷயங் கள் நட்பின் நெருக்கத்தை காட்ட செய்யலாம்.

*

2. ஆனால், அதனால் எந்த அளவுக்கு தொற்றுநோய் பிரச்னை ஏற்படுகிறது என்பது பலருக்கு தெரியாது. சிறிய விஷயமானாலும், கவனமாக இருந்தால், ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது.

*

3. உங்களை பரிசோதிக்கும் டாக்டரை பாருங்கள்; அவர் பரிசோதித்த பின், டெட்டால் திரவத்தை கையில் தடவிக்கொள்வார்; சோப்பினால் கையை கழுவுவார்.

*

4. அப்படியிருக்கும் போது, நாம் கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டாமா? இது பலருக்கு தெரிவதில்லை. சுத்தம் இருந்தால், பாதி உடல் கோளாறுகளை தவிர்க்கலாம்.

*

5. திறந்து வைத்த ஆறிய சாப்பாடு, குழம்பு, கறி வகைகள், ஈ மொய்த்த பண்டங்கள் போன்றவற்றால் தான் பல தொற்றுநோய்கள் வருகின்றன.

*

6. காலை, மாலை குளிப்பது, பல் தேய்ப்பது, கை, கால்களை சுத்தமாக வைத்திருப்பது, வீட்டில் தூசி படியாமல் பார்த்துக்கொள்வது, அதிக வேலை செய்யாமலும், அதே சமயம் சுறுசுறுப்பு குறையாமலும் இருப்பது, வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பது,

*

7. குளிர் பானம் போன்றவற்றை குறைப்பது, முடிந்தவரை வாகனத்தை தவிர்த்து நடப்பது, யோகா போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவது போன்றவை மட்டுமே, உங்களுக்கு நாற்பதில் சர்க்கரை, ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் வழிகள்.டீன் ஏஜில் இருப்பவர்கள் இதை இப்போதே உணர்ந்தால், கண்டிப்பாக எந்த ஆரோக்கிய குறைவுக்கும் ஆளாகமாட்டார்.


*

8. சர்க்கரை, உப்பு இரண்டுமே தொல்லை தான். இரண்டும் மிகவும் சரிசமமாக இருக்கும் வரை பிரச்னையில்லை. இரண்டில் உப்பு தான் மிக ஆபத்தானது. சிலர் சாப்பாட்டில் உப்பு போதவில்லை என்று தனியாக உப்பை சாம்பார், ரசம், பொரியலில் போட்டு சாப்பிடுவர். இது மிகக்கெடுதல் என்கின்றனர் டாக்டர்கள்.முப்பது வயது வரை பரவாயில்லை; ஆனால், அதை தாண்டி உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டால், தினமும் சாப்பாட்டுக்கு ஈடாக மாத்திரைகளை விழுங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

*

9. சாதாரண இருமல், காய்ச்சல், ஜீரணத்துக்கு எல்லாம் விழுங்கும் ஆன்டாசிட்ஸ், லேக்சடிவ்ஸ், ஆஸ்பிரின்ஸ் மாத்திரைகளில் சோடியம் உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகளில் சோடியம் உள்ளது; போதாக்குறைக்கு டேபிள் சால்ட்டை போட்டுக்கொண்டால் என்னாவது? நீங்கள் எப்படி, உப்பு பிரியராக இருந்தால் கண்டிப்பாக "தடா' போடுங்க!


*

10. பெரும்பாலோருக்கு ஷுகர் இருக்கத்தான் செய்யுது. ஆனால்,வெளியில் தெரியாமல் உள்ளது. குறிப்பிட்ட வயதில் தன் வேலையை ஆரம்பிக்கிறது அது. அதனால், 30 வயதை தாண்டினாலேயே ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்துக்கொள்வது நல்லது. அதிகமாக குடிநீர், திரவ உணவு எடுத்துக்கொள்ளலாம். எந்த மருந்தை சாப்பிட்டாலும், டாக்டரின் ஆலோசனை முக்கியம்.

*

11. சிலருக்கு சாப்பிட்டாலே தலைவலி வரும். அதாவது, குறிப்பிட்ட உணவுகளை, இனிப்புகளை, பழங்களை சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி சாக்லெட், சீஸ், சிட்ரஸ் அடிப்படையிலான பழங்கள், தக்காளி, ப்ரைடு உணவுகள், சில கடலை வகைகள் , குளிர்பானங்கள் ஆகியவை சிலருக்கு அடிக்கடி சாப் பிட்டால், பாதிப்பு வரும். இவற்றில் மோனோசோடியம் க்ளூட்டோமேட் என்ற ரசாயனம் உள்ளது தான் இதற்கு காரணம். இதனால், சிலருக்கு மட்டும் தலைவலி வரும்.


*

12. ஆண், பெண்கள் இரண்டு பேருக்கும் கால்சியம் மிக முக்கியம். எலும்புகள் வலுவாக இருக்க இது இல்லாமல் முடியாது. ஆனால், பெண்களை பொறுத்தவரை, கண்டிப்பாக இதன் தேவை உள்ளது.பெண்கள், வயதான பின் கால்சியம் மாத்திரை விழுங்கலாம், கால்சியம் சத்து உணவுகளை சாப்பிடலாம் என்றால் முடியாது; அப்போது மூட்டு வலி ஆரம்பித்துவிடும்.டீன் ஏஜ் பெண்கள், பால், பால் பொருட்கள், தயிர், ரெய்த்தா, கீர், குல்பி போன்றவற்றை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், 35 வயதுக்குள் இவற்றை சாப்பிட்டு வந்தால் தான் அதன் பின் 50களில் மூட்டு வலி என்று புலம்ப வேண்டாம்.


*

13. கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது, எந்த வித அழுத்தமும், உடலில் எந்த பாகத்துக்கும் தராமல் உட்கார வேண்டும்; வேலை செய்யும் போது, கைகளுக்கோ, இடுப்புக்கோ இறுக்கமோ, அழுத்தமோ இருக்கக்கூடாது. கைகளை , கம்ப்யூட்டர் கீபோர்டில் சமமாக படியும் படி வைத்து பணி செய்ய வேண்டும்; நெடுக்காக வைத்து செய்தால், உள்ளங்கையிலும் வலிக்கும். உடலில், முக்கியமாக கழுத்து வலி தான் கம்ப்யூட்டர் பணியில் அடிக்கடி ஏற்படும்.


இருக்கையில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் மூழ்கி விடக்கூடாது; எந்த வித கழுத்து அழுத்தமும் இல்லாமல் ரிலாக்சாக கம்ப்யூட்டரில் பணி செய்ய வேண்டும். கழுத்தை குனிந்தோ, கம்ப்யூட்டருக்குள்ளேயே தலையை விட்டுக் கொள்வது போலவோ வேலை செய்யக்கூடாது என்பது டாக்டர்களின் ஆலோசனை.

*

14. உடலில் தீக்காயம் பட்டால், உடனே ஆயின்ட் மென்டை தேடாதீங்க. சாதாரண அடுப்பு சூடு பட்ட காயம், தீக்காயம் என்றால், காயம் பட்டவுடனேயே என்ன செய்யணும் தெரியுமா? எவ்வளவோ முறை சொல்லியும் பலரும் ஒரே தவறை செய்வாங்க. அது தான் மருந்து போடறது! அதை செய்யவே கூடாது. காயம் பட்டவுடன், குளிர்ந்த தண்ணீரில் மூழ்க விட வேண்டும்; குறைந்தபட்சம் 10 நிமிடமாவது அப்படியே இருக்க வேண்டும். அதன் பின், பெரிய காயம் என்று நினைத்தால், டாக்டரிடம் காட்டலாம். மற்றபடி வீட்டுவைத்தியம் எதுவும் செய்யக்கூடாது; காயம் தான் அதிகமாகும்!

*

15. குழந்தைக்கு ஒரு வயது, இரண்டு வயதாகும் போதே மீன் உணவை தரலாம். வாயில் சுவைக்கத்தெரிந்தால், எளிதில் விழுங்கும் வகையில் உள்ள மிருதுவான மீன் உணவு தரலாம். குழந்தைகளுக்கு தரும் போது, சோடியம், கொழுப்பு அதிகம் இல்லாத மீனாக பார்த்து வாங்க வேண்டும். அதுபோல, எலும்புகள் இருக்கவே கூடாது.



***
http://www.viparam.com/

***



"வாழ்க வளமுடன்"


2 comments:

Asiya Omar சொன்னது…

தேவையான பகிர்வுக்கு நன்றி.

prabhadamu சொன்னது…

/// asiya omar கூறியது...
தேவையான பகிர்வுக்கு நன்றி.
///

நன்றி அக்கா . உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி அக்கா .

உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா .

:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "