இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உணவுமுறை :1. நல்ல சத்தான உணவு - விட்டமின் ஏ, விட்டமின் சி , கால்ஸியம், ஃபோலிக் ஆஸிட், புரோட்டீன், விட்டமின் பி12 நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.
*
2. பழங்கள், பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*
3. கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது. அதிக அளவு தண்ணீர் குடிப்பது நகங்களைப் பாதுகாக்கும்.
***
நகங்களுக்கு அழகூட்ட :
1. நகங்களைக் கிள்ள, கீற, குழி பறிக்க கருவி போல் உபயோகிக்காதீர்கள்.
*
2. அழகு சாதனங்களை, குறிப்பாக வாசனைத் திரவியங்களை குறைந்த அளவில் உபயோகிக்கவும்.
*
3. அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது.
*
4. நகங்களை வெட்டும் போது உங்கள் கைவிரலுக்கேற்றவாறு வளைவாக வெட்டவும்.
*
5. நகங்களைக் கழுவி எப்போதும் உலர்வாக வைத்திருக்கவும்.
*
6. இளஞ்சூடான நீரில் நகங்களை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
*
7. தரமான லோஷன்களைத் தடவி மஸாஜ் செய்யவும்.
*
8. நகப் பூச்சு போடும்முன் நகத்தில் ஏற்கெனவே இருக்கும் பூச்சுக்களை சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் உபயோகிக்கவும்.
*
9. நிதானமாக, முறைப்படி உலர வைத்து நகப் பூச்சு போடுவதால் நகங்கள் நன்கு பாதுகாக்கப்படும்.
*
10. நகங்கள் அடிக்கடி உடைந்தால் உணவில் கவனம் தேவை என அர்த்தம். கால்ஸியம் குறைந்தாலோ, அதிக நேரம் தண்ணீரில் இருந்தாலோ நகங்கள் அடிக்கடி உடைய வாய்ப்புண்டு.
***
thanks womens
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக