இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அர்த்த’ என்றால் ‘பாதி’ என்று பொருள். அதாவது பாதி திருகிய நிலை ஆசனம் என்பதாகும். யோகி மச்சேந்திரர் இந்த ஆசனத்தை ஹடயோக மாணவர்களுக்கு முதன்முதலாகக் கற்றுக் கொடுத்தார். அதனால் அவனுடைய பெயர் இந்த ஆசனத்திற்கு வைக்கப்பட்டது.செய்முறை:
1. கால்களை முதலில் நேராக நீட்டி விரிப்பின் மீது விறைப்பாக நேரே நிமிர்ந்து உட்காரவும்.
2. வலது காலை மடக்கிக் கொள்ளவும்
.
3. வலது கணுக்காலின் மேல் உட்கார்ந்து கொள்ளவும்.
4. இடது காலைத் தூக்கி, கீழே வைக்கப்பட்டிருக்கும் வலது காலுக்குக் குறுக்கே அப்புறம் (வலப்புறம்) கொண்டு சென்று வைக்கவும். இடது காலை இன்னமும் தரைப்பக்கம் அமர்த்தி பாதத்தைப் பிறப்பு உறுப்புக்குக் கீழே அமைத்துக் கொள்ளவும். இடது முழங்கால் செங்குத்தாய் நிற்பதுபோல் இருக்கவும்.
5. வலது கையின் கை இடுக்கிற்குள் இடது முழங்காலானது போகும் வண்ணம் செய்யவும்.
6. பின்னர் வலது உள்ளங்களையினால் வலது கால் மணிக்கட்டைப் பிடித்துக் கொள்ளவும்.
7. இடது கையை முதுகுப்பக்கம் கொண்டு வரவும்.
8. இடது கையினால் இடது கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும்.
9. மூச்சை விட்டுக்கொண்டே இடது பக்கமாக இடுப்பை நன்றாகத் திருப்புங்கள். மார்பை நேராக நிறுத்தி வைக்கவும்.
10. தலையை நன்றாகத் திருப்புங்கள்.
11. அப்போது உங்களின் கண்பார்வை இடது பக்கமாக அமையக் கூடாது. வலது பக்கம் உள்ள பொருட்கள் மீது நிலைபெற வேண்டும்.
12. இவ்வாறு இரண்டு மூன்று முறை செய்தபின் சிறிது சிறிதாகப் பிடிகளைத் தளர்த்தி கை, கால்களை விடுவித்து யதார்த்த நிலைமைக்குத் திருப்பவும்.
***
பலன்கள்:
1. நரம்புத்தளர்ச்சி அடைந்தவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறது. முதுகெலும்பினை வளைத்து நெகிழுந்தன்மையானதாக்கி, வளமுடன் செயல்படச் செய்கிறது. வயிற்றுத் தசைகளை வளமாக்குகிறது. முதுகெலும்புப் பகுதி முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. பிடரியில் ஓடக்கூடிய நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.
3. நோய்களை உருண்டு திரளச் செய்கிறது.
4. இடுப்புவலி, முதுகு வலிகளைப் பறந்தோடச் செய்யும்.
5. வயிற்றுக் கோளாறுகளை நீக்குகிறது. மலச்சிக்கல், பசி மந்தத்தையும் இது நீக்கும். சிறுநீரக நோய்கள் நீங்கும்.
6. இளமையுடன் இருக்கச் செய்யும் ஆசனம் இது.
***
நன்றி உங்களுக்காக
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக