...

"வாழ்க வளமுடன்"

18 அக்டோபர், 2010

டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று நாம் ஒரு அவசரயுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.





நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது.


*

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிக மாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது.

*

மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய் விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத்தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.

***

வியாதிகள்:

1. டென்ஷன் அதிகமாகும்போது நம்மால் சிறிய வேலையைக் கூட சரியாக செய்ய முடிவதில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம்.

*

2. இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன.

*

3. இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு பலவந்த மாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.

*

4. நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.

*

5. நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம்.

*

6. வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது. உள் மனம் சக்தி வாய்ந்தது - ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது.

*

7. வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.

*

8. உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது?

அப்படித்தான் நம் உள்மனமும். வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும். தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.


***

நன்றி டாக்டர் வேதமாலிகா

***

"வாழ்க வளமுடன்"

1 comments:

prabhadamu சொன்னது…

//// மங்குனி அமைசர் கூறியது...
நல்ல விஷயம்////




உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி மங்குனி அமைசர் .


உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி மங்குனி அமைசர் .


:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "