...

"வாழ்க வளமுடன்"

16 செப்டம்பர், 2010

காலை கவனிப்பதுண்டா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காலை கவனிப்பதுண்டா? எல்லா பாரத்தையும் தாங்குதே:





உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது கால் தான். ஆனால், இதனை பராமரிப்பதில் எத்தனை பேர் அக்கறை காட்டுகின்றனர் என்பது கேள்விக்குறி தான்.

தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும் போது, காலை சுத்தமாக கழுவிக்கொள்வதில் இருந்து, வெளியில் போய் விட்டு வீடு திரும்பினால், காலை சுத்தம் செய்வது வரை மிக முக்கியமானது.


ஆனால், காலை சரியாக கூட கழுவத்தெரியாதவர்கள் இல்லாமல் இல்லை. கால் வழியாக பாக்டீரியா கிருமிகள், உடலில் புகுவதற்கு இடமுண்டு;

அதுபோல, பூச்சி கடித்து, அதன் மூலம் நோய் வரும் ஆபத்தும் உண்டு. அதனால் , கால் மீது அதிக கவனம் தேவை.

***


புறக்கணிப்பதா? :

உடலில் மற்ற பாகங்களை போல கால் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அதை அவ்வப்போது பராமரித்து வர வேண்டும். எங்காவது இடித்துக்கொண்டாலும், புண் ஏற்பட்டாலும், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.

காலில் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால், தோல் தடித்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடக்கூடாது. தோல் சிகிச்சை நிபுணரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.

***


வறண்டு போவதேன்? :

கால்களில் தான் அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளன. அவற்றில் சில எண்ணெய் சுரப்பிகளும் அடங்கும். அதனால் தான் கால் எப்போதும் வறண்டதாகவே இருக்கிறது.

அதேசமயம், உள்ளங்கால்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால், எண்ணெய் பசையுடன் வியர்வை வெளியேறுவதில்லை; வறண்டு போவதும் இல்லை.

பொதுவான பாதிப்பு பெரும்பாலும் கோடை காலத்தில் கால்களில் பாதிப்பு வராது; ஆனால், மழைக் காலத்தில் தான் பாதிப்பு அதிகம். பெண்களுக்கு சேற்றுப் புண் வருவதுண்டு.


கால் விரல்களில் இடுக்குகளில் வியர்வை தங்குவதாலோ, அதிக நீர் கோர்த்தாலோ தடித்துப்போய் காளான் குடை போல பாதிப்பு வரும்.

அதிக புழுக்கம், அதிக மழை நீர் படுவதால் இப்படி ஏற்படும். சிலருக்கு சொறி, சிரங்கு போன்றவை வரும். வழக்கமாக காலுறை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும்;

பெரும்பாலும் பருத்தியினாலான காலுறைகளை அணிய வேண்டும். வியர்வை தங்காமல் இருக்கும் வகையில் அணிய பருத்தி காலுறை தான் சிறந்தது. நைலான் காலுறை அணிந்தால், அவ்வப்போது சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

***


காலாணி வருவதேன்? :

கால் எப்போதும் உராயக்கூடியதும், அழுத்தம் ஏற்படுத்திக் கொள்வதுமாகத் தான் இருக்கும். அதனால் தான், காலாணி ஏற்படுகிறது.

மூட்டு வலி இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு காணப்படும். காலின் வெளிப்பகுதியில் உள்ள தோல் அடர்த்தியாகிறது; அதனால், வலியும் ஏற்படுகிறது. சீரான வடிவத்தில் உள்ள காலில் காலாணி வராது;

அப்படியே வந்தாலும் வலி அதிகமாக இருக்காது. அப்படியில்லாதவர்களுக்கு தான் காலாணி பாதிப்பு அதிகமாக இருக்கும். வெறுங்காலுடன் நடப்பது, காலில் அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் வேலை செய்வது, பொருத்தமில்லாத செருப்பை அணிவது போன்றவை தான் இதற்கு காரணம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் காலை சில நிமிடங்கள் வைத்து கொண்டால் வலி குறையும். காலாணியும் வராது.



நாற்றமெடுப்பதேன்? :

சிலருக்கு அதிகமான வியர்வை சுரக்கும். அதனால் காலில் நாற்றம் எப்போதும் குடிகொண்டிருக்கும். காலை சுத்தம் செய்வதில் குறைபாடு, அடிக்கடி செருப்பு போடாமல் நடப்பது போன்றவற்றாலும் இது ஏற்படும்.

காலுறை மாற்றாமல் தொடர்ந்து நாலைந்து நாள் பயன்படுத்துவதாலும் கால் நாற்றம் அடிக்கும். பனியன் , ஜட்டி மாற்றுவது போல, காலுறையையும் தினமும் மாற்ற வேண்டும்.

ஆனால் இதை பலர் செய்வதில்லை. காலுறையையும், ஷூவையும் சுத்தம் செய்வதும் இல்லை.


வளைந்த நகங்கள் கைகளை போல, கால் விரல்களையும் சீராக வைத்திருக்க வேண்டும். அதற்காக அவ்வப்போது சீராக்கிக்கொள்ளவும், சுத்தம் செய்யவும் வேண்டும்.

அப்படியில்லாவிட்டால், காலில் உள்ள நகங்கள் வளைந்தும், உடைந்தும் இருக்கும். இப்படி இருந்தால் காலில் செருப்பு போட்டு நடக்க முடியாது;

நகங்கள் வளைந்து இருப்பதன் மூலம் இடுக்குகள் வழியாக கிருமிகள் நுழைந்து விடும் ஆபத்தும் ஏற்படும்.

***


எப்படிப்பட்ட காலணி? :

செருப்பு, ஷூ வாங்கி அணியும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இறுக்கமானதோ, மிகவும் பெரிதானதோ அணியக்கூடாது.

அப்படி அணிந்தால் காலுக்கு வசதியாக இல்லாதது மட்டுமின்றி, பாதிப்பையும் ஏற்படுத்தும். காலில் மிகவும் இறுக்கமான காலணியை போடக்கூடாது.

அதனால் தான் பல பிரச்னைகள் வரும். ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு சரும பாதிப்பும் வரும். காலணி போல, காலுறைகளையும் கவனமாக தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

பருத்தி காலுறையை தவிர, மற்ற வகையில் தயாரிக்கப்படும் காலுறைகளை பயன்படுத்தினாலும் தினமும் அதை மாற்ற வேண்டும்.

***


சுத்தம் முக்கியம் :

காலுக்கு எப்போதும் சுத்தம் தான் மிக முக்கியம். குளிக்கும் போதும், வெளியில் போய்விட்டு திரும்பும் போதும் முழுமையாக கால்களை அலம்ப வேண்டும்.

குதிகாலில் தண்ணீர் படாமல் சிலர் காலை கழுவுவர்; அது தவறு.

***

by: vayal.
நன்றி vayal.


***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "