உங்களுடைய மகனுக்கு வயிறு மந்தமாக இருக்கிறது. அதனால் கொழுப்புமிக்க மீன் எண்ணெய் செரிக்கவில்லை.
*
இதற்கு மாற்றாக ஆட்டுப்பால், பசும்பால், பசுவின் தயிர், வெண்ணெய், வெந்தயம் இவற்றை உணவாகக் கொடுக்கலாம்.
*
பசி மந்தம் நீங்கினால்தான் இவற்றில் உள்ள சத்து உடலில் சேரும்.
*
அதற்குச் சிறந்த வழி கொத்தமல்லி துவையல் அல்லது கறிவேப்பிலைத் துவையல் செய்து சூடான சாதத்துடன் கலந்து, சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடக் கொடுக்கவும்.
*
அதற்கு மேல் நன்றாகக் கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர் குடிக்கக் கொடுக்கவும். இதைக் காலை உணவாக சிறிது நாட்கள் தொடர்ந்து கொடுத்து வர, பசித்தீ மளமளவென வளரும்.
***
ஒருசில உணவில் உள்ள யூனிட் விட்டமின்:
1. மேலும் கொத்தமல்லியும், கறிவேப்பிலையும் மீன் எண்ணெய்க்குச் சற்றும் குறைந்தவை அல்ல.
*
2, 100 கிராம் மீன் எண்ணெய்யில் சுமார் 50,000 யூனிட் விட்டமின் ஏ கணிசமாக உள்ளது எனக் கூறுகின்றனர்.
*
3, அதேபோல பச்சைக் கொத்தமல்லி இலையில் சுமார் 12,500 யூனிட்டும்,
*
4. பச்சைக் கர்ரிவீப்பிலையில் 12,500 யூனிட்டும்,
*
5. முருங்கைக்கீரையில் 11,500 யூனிட்டும்,
*
6. அகத்திக்கீரையில் 10,000 யூனிட்டும்,
*
7. முளைக்கீரை, அரைக்கீரை, வெற்றிலை ஆகியவற்றில் 10,000 யூனிட்டும் விட்டமின் ஏ கணிச விகிதத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
*
8. 5,000 யூனிட் வேப்பிலைக் கொழுந்துவிலும், பசலைக்கீரை மற்றும் வெந்தயக் கீரையில் 4,000 யூனிட்டும் விட்டமின் ஏ இருப்பதாகத் தெரிகிறது.
*
இவை அனைத்தும் உடலுக்கு ஒரு தொந்தரவும் செய்வதில்லை.
**
அழகாக சமைத்து ஒரு கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு வைத்துவிட்டால் பார்ப்பதற்குத்தான் எத்தனை அழகு! மனதிற்கு எத்தனை இன்பத்தைத் தருகின்றன!
*
எத்தனை விரைவில் செரித்து பசியைத் தூண்டுகின்றன! எந்தப் போஷகச் சத்தையும் உடல்தானே ஏற்றுக்கொள்ளும் சக்தியை இவை மூலம் பெறுவதால் உங்கள் மகன் விரைவில் நோஞ்சான் நிலையிலிருந்து மீண்டு, குண்டாக அழகாக கொழுகொழு குழந்தையாகக் காட்டலாம்.
*
உணவுச் சத்து இடைவிடாமல் சேர்வதால் உடல் புஷ்டிதானே ஏற்படும். அடிக்கடி காய்ச்சல், சளி முதலிய நோய்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*
அதற்கு எண்ணெய்க் குளியலைத் தவறாமல் அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய மகனுக்கு ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் புஷ்டியைத் தரக்கூடும்.
*
லாக்ஷதி தைலம், சந்தன பலாலாக்ஷôதி தைலம், அச்வகந்தி பலாலாக்ஷôதி தைலம் முதலியவை இந்நிலையில் ஏற்ற எண்ணெய் தேய்ப்புத் தைலங்கள் ஆகும்.
*
ஆக, உள்ளுக்கு விட்டமின் ஏ சத்து நிறைந்த அதே சமயத்தில் ஜீர்ணகோச உறுப்புகளின் சக்தியையும் தூண்ட உதவும் கொத்தமல்லி, கறிவேப்பிலைத் துவையல் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமாகவும், மேலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும், உடலில் சுறுசுறுப்படைந்த பசித்தீ, கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
*
எதையும் செரிக்கும் அளவிற்கு அது வளர்ந்துவிட்டால், தினமும் காலைச் சிற்றுண்டியுடன் இரண்டு உளுந்து வடையை, நடுவே ஓட்டை போடாமல்! பசு நெய்யில் பொரித்துச் சாப்பிடக் கொடுக்கவும்.
*
உடல் வனப்பு நன்றாகக் கூடும். அதன் பிறகு ஆயுர்வேத லேஹிய மருந்துகளாகிய கூஷ்மாண்டரஸôயனம், அமிருதப்ராசம், சியவனப்ராசம், பிராம்ஹ ரஸôயனம் போன்றவற்றில் ஒன்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடக் கொடுக்கவும்.
***
நன்றி தினமணி!
***
0 comments:
கருத்துரையிடுக