...

"வாழ்க வளமுடன்"

21 செப்டம்பர், 2010

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை




தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னைகளால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்' என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

*
குடும்ப சுமை, வேலைப்பளு போன்றவற்றால், பெரியவர்களுக்கு தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுவதாக கருதப்படுகிறது.

*

ஆனால் இந்த பிரச்னைகளால் தற்போது பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

***


இதுகுறித்து குழந்தைகள் மற்றும் மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூ ஹெர்சி கூறியதாவது:

1. தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுகின்றனர்.

*

2. பள்ளியில் நீண்ட நேரம் பாடங்களை கூர்ந்து கவனிக்கின்றனர்.

*

3. மேலும் வீடு திரும்பும் அவர்கள் வீட்டு பாடங்களை முடித்துவிட்டு வெகு நேரம் கழித்து தூங்க செல்கின்றனர்.

*

4. இதுதவிர காலையில் பள்ளிக்கு செல்லும் பதட்டத்தில் அவர்கள் சாப்பிடுவதில்லை.போதிய தண்ணீர் குடிப்பதில்லை.

*

5. இதனால் அவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது.

*

6. ஒற்றை தலைவலி பரம்பரையாக வரக்கூடிய பிரச்னை.அடிக்கடி ஏற்படும் தலைவலியும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது.


*


ஹார்மோன்களில் மாற்றம், இரத்த நாளங்களை விரிவடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

*

தற்போது 10 சதவீத குழந்தைகளுக்கும், 28 சதவீத பெரியவர்களுக்கும் இந்த பிரச்னை உள்ளது.

*

பெரியவர்களுக்கு 4 மணி நேரமும்,குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூட ஒற்றை தலைவலி தொடர்ந்து இருக்கும்.

*

பெரியவர்களுக்கு தலையின் ஒரு பகுதியிலும் குழந்தைகளுக்கு நெற்றியிலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.

*

மூன்று வயது குழந்தைகளுக்கு கூட ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுகிறது.

*

சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்களாலும் அவர்களுக்கு தலைவலி பிரச்னை ஏற்படுகிறது.

இவ்வாறு ஆண்ட்ரூ ஹெர்சி கூறினார்.


***

நன்றி http://www.z9tech.com/

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "