இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பிறந்த குழந்தைக்கு பசும் பால் நல்லது:*
குழந்தை பிறந்து 15 நாட்களுக்கு பசும்பால் கொடுப்பது மிகவும் நல்லது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் பல்வேறு அலர்ஜிகளை தடுக்கலாமாம்.
*
இதுகுறித்து டெல் அவிவ் பல்கலைக்கழக குழந்தைகள் பிரிவு பேராசிரியர் இட்சாக் கட்ஸ் கூறுகையில், குழந்தை பிறந்து முதல் 15 நாட்கள் வரை அவற்றுக்கு பசும்பால் கொடுத்து வந்தால், பின்னாளில் பசும்பால் புரோட்டீனால் ஏற்படும் அலர்ஜி உள்ளிட்டவற்றை தவிர்க்க முடியும்.
*
இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னாளில் உடலில் புள்ளிகள் வருவது, மூச்சுத் திணறல் ஏற்படுவது, அதிர்ச்சிகளால் பாதிக்கப்படுவது போன்றவற்றையும் கூட தவிர்க்கலாம்.
*
பிறந்த குழந்தைகளுக்கு தினசரி இரவு ஒரு குவளை பசும்பால் தரலாம். அதேசமயத்தில் தாய்ப்பாலும் போதிய அளவுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
*
அதேசமயம், ஆரம்ப கட்டத்தில் பசும் பால் கொடுக்காமல், குழந்தைக்கு 3 முதல் 5 மாதம் இருக்கும் வரையிலான காலகட்டத்தில் பசும்பாலைக் கொடுக்கக் கூடாது. அது அபாயத்தை ஏற்படுத்தலாம்.
*
தொடக்கத்திலேயே பசும்பாலைத் தர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஒரு வருடம் போன பிறகுதான் தர வேண்டும் என்றார்.
***
பசுப்பால் சளியை தடுக்கும்:
"இவனுக்கு சளி அடிக்கடி பிடிக்கிறபடியால் நான் பசுப்பால் கொடுக்கிறதில்லை" என்றாள் தாய்.
வளரும் குழந்தை முன்பள்ளிக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான்.
*
"நீங்கள் செய்வது தவறு. அவனது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பால் அவசியம் அல்லவா?" எனக் கேட்டேன்.
மாப் பால் கரைத்துக் கொடுப்பதாக சொன்னாள்.
பசும் பாலுக்கு சளிபிடிக்கும் என்பது அவளது நம்பிக்கை.
*
அவள் மட்டுமல்ல எல்லாப் பெற்றோர்களது நம்பிக்கையும் கூட,
ஒட்டு மொத்த தமிழ் மக்களது நம்பிக்கை என்று கூட சொல்லலாம். அந்த நம்பிக்கை முற்று முழுதாக தவறானது என அண்மையில் ஆய்வு சொல்கிறது.
*
பசும்பாலுக்கு சளிபிடிக்காது என்று மட்டுமல்ல, அது சளிக்குக் காரணமான ஆஸ்மா, அலர்ஜி(ஒவ்வாமை) ஆகிய நோய்கள் வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என ஆய்வு செய்த டொக்டர் மக்ரோவாசர் ( Dr. Macro waser) கூறுகிறார். இவர் சுவிட் சர்லாந்து நாட்டு பஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.
*
பதனிடப் படாத பாலைக் குடித்த பிள்ளைகளுக்கு அல்லது அதிலிருந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பாற் பொருட்களை உண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்மா அலர்ஜி ஆகியன ஏற்படுவது குறைவாம்.
*
5 முதல் 13 வயது வரையான 14893 பேரை உள்ளடக்கிய ஆய்வு இது.
இக் குழந்தைகள் பாற்பண்ணை, கிராமம், நகரம் எனப் பல்வேறு சூழல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
*
அவர்கள் எந்தச் சூழலிருந்து வந்தாலும் பசும்பால் சளியிலிருந்து பாதுகாப்பு கொடுத்தது. பசும்பாலை ஒரு வயது முதல் குடித்து வந்த குழந்தைகளுக்கு கூடியளவு நன்மை கிடைத்ததாம்.
*
பசும்பாலை பச்சையாகக் கொடுக்கக் கூடாது. காய்ச்சித்தான் கொடுக்க வேண்டும்.
*
இல்லையேல் சில நோய்கள் தொற்றக்கூடும்.
இத்தகைய காய்ச்சிய பால் தான் பாதுகாப்பை கொடுத்தது.
பதனிடப்பட்டு பைக்கற்றில் அடைக்கப்பட்ட பாலோ, மாப்பாலோ அத்தகைய பாதுகாப்பை கொடுப்பதாக அறியப்படவில்லை.
*
இதிலிருந்து சளிபிடிப்பவர்களுக்கு பசும்பால் கொடுக்காது மாப்பால் கொடுப்பது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
*
அத்துடன் சிறு வயதிலிருந்தே, அதாவது ஒரு வயது முதற் கொண்டு தினசரி பசும்பால் கொடுத்துவந்தால் ஆஸ்மா, அலர்ஜி போன்ற சளித்தொல்லைகளும் அதிகம் வராது என்பதும் தெளிவாகிறது.
*
எனவே உங்கள் குழந்தைக்கு சளித்தொல்லை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பசும்பால் கொடுத்து வாருங்கள். அதனால் சளித்தொல்லை குறைவதுடன் ஆரோக்கியமும் கிட்டும்.
*
பசும்பாலில் உள்ள என்ன பொருள் அல்லது என்ன குணாதிசயம், அலர்ஜிக்கும் ஆஸ்மாவிற்கும் எதிரான பாதுகாப்பைக் கொடுக்கின்றது என்று அறிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
***
நன்றி டாக்டர்.
by Dr.எம்.கே.முருகானந்தன்
நன்றி தினக்குரல்.
நன்றி தட்ஸ்தமிழ் தளம்.
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக