...

"வாழ்க வளமுடன்"

19 ஆகஸ்ட், 2010

குழந்தைகள் பார்வையை பாதுகாக்க :

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



படிக்கும் போதும் , டிவி பார்க்கும் போதும் நேராக உட்கார்ந்தே பார்க்க வேண்டும் , குப்புற படுத்தோ, மல்லாக்க படுத்தோ பார்க்க கூடாது .

டிவி , கணினி பார்க்கும் போது நேராக பார்க்க வேண்டும் , சாய்வான கோணத்தில் பார்க்க கூடாது .

படிக்கும் போதும் ,கணினி பார்க்கும் போது, டிவி பார்க்கும் போதும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அரை நொடி கண்களை மூடி ஓய்வு எடுக்கவேண்டும் .

சரியான அளவில் வெளிச்சம் இருக்க வேண்டும் , அதிகமான வெளிச்சத்தில் கண்களின் ரெட்டின பாதிப்படையும் , குறைவான வெளிச்சத்தில் கருவிழி தசைகள் சோர்வடையும் . பொதுவாக படிப்பதற்கு குழல் விளக்கை விட குண்டு பல்பு சிறந்தது என்று ஒரு ஆய்வு கூறுகிறது .

அதி காலையில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் , ஏன் எனில் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் . நள்ளிரவில் படிக்கும் போது கண் தசைகள் வலுவிழந்து போகும். ( early to bed, early to rise)

வாகனத்தில் போகும் போது படிப்பதை தவிர்க்க வேண்டும் . கண்களுக்கு அதிகபடியான அழுத்தத்தை தரும் . ( விமானத்தில் படிக்கலாம் )

***
நன்றி டாக்டர் ராஜ்மோகன்.

***

"வாழ்க வளமுடன்"

1 comments:

prabhadamu சொன்னது…

நன்றி டாக்டர் ராஜ்மேகன். உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. தவிர்க்க முடியாத காரணத்தால் உங்கள் கருத்தை வெளியிட முடிய வில்லை சகோ. நீங்கள் சொன்ன கருத்தை ஏற்க்கிறேன். மிக்க நன்றி சகோ.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "