...

"வாழ்க வளமுடன்"

21 ஆகஸ்ட், 2010

செல்போன்களிலுள்ள பாக்டீரியாக்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


கழிப்பறைக் கதவின் கைப்பிடியில், பல நூறு பாக்டீரியாக்கள் படிந்திருக்கும். கழிப்பறைக்குச் சென்று வந்தபின் கைகளை நன்றாய் சோப்பு போட்டுக் கழுவுவதன் மூலம், பாக்டீரியாவின் பாதிப்பிலிருந்து தப்பலாம். ஆனால், நாம் அண்மைக்காலமாக அதிகம் பயன்படுத்தும் செல்போன்களில், கழிப்பறைக் கதவின் கைபிடியில் உள்ளதுபோல், பல மடங்கு பாக்டீரியாக்கள் படிந்துள்ளன.


சமீபத்தில், இலண்டனில் பயன்படுத்தப்படும் செல்போன்களிலுள்ள பாக்டீரியாக்கள் குறித்து, ஜிம் பிரான்ஸிஸ் என்ற சுகாதாரத்துறை நிபுணர் ஒரு ஆய்வு நடத்தியுள்ளார். அந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி தரத்தக்கவையாயிருந்தது. அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட ஆறு கோடி செல்போன்களில், சராசரியாக 25 சதவிகித செல்போன்களில், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாக்டீரியாக்கள் இல்லாத இடமே இல்லை. எனினும், பாதுகாப்பான அளவென்று ஒன்று உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, பல செல்போன்களில், 18 முதல் 39 மடங்கு வரை பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி இருக்கின்றன. இது போதாதென்று. உணவை நஞ்சாக்கும் “இ-கோலி” மற்றும் “ஸ்டெபைலோகாக்கஸ்” போன்ற பாக்டீரியாக்கள் தற்போது செல்போன்களில் குடியிருக்கத் துவங்கிவிட்டன.



ஜிம்மின் ஆராய்ச்சியில், சுவாரசியமான தகவலொன்று உண்டு. அவரின் ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப்பட்ட செல்போன்களில், அதிக அளவு பாக்டீரியாக்களை வைத்திருந்தவருக்குத் தீராத வயிற்று வலி இருந்து வந்தது தெரியவந்துள்ளது. ஆய்வின் உபயத்தால், அவருக்கு வயிற்றுவலி தீர்ந்ததோ இல்லையோ, பலருக்கு நோய் வரும் காரணம் செல்போனென்று தெரிந்து கொண்டோம் நாம்.

செல்களைக் கழுவ முடியாது. கைகளை நன்றாய்க் கழுவுங்கள்.

***

நன்றி உணவு உலகம்.
நன்றி சகோதரர் FOOD.


***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "