...

"வாழ்க வளமுடன்"

06 ஏப்ரல், 2010

அருகம் புல்லின் மருத்துவ குணங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது.




அருகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

*

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடல் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

*

வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) ஆகிய முத்தோடங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், இரத்தப் பித்தம், சிறு விடப் பூச்சிகளின் கடி ஆகியவைகளுக்கு நல்லதொரு மருந்து. இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.



***



புல்லின் மருத்துவ குணங்கள்:



*





1. அருகம்புல் முழுச்செடியும் மருந்தாகப் பயன் அளிக்கிறது. சிறுநீரில் இரத்தம் கசிதல், சீறநீரகங்களில் கட்டிகள் தோன்றுதல், மேகம், வெட்டை, பால்வினை நோய்கள், எய்ட்ஸ், கிட்னி ஃபெயிலியர் போன்ற நோய்களுக்கு மூலிகை மருத்துவர்கள் அருகம்புல்லைத் தருகின்றனர்.





*



2. உயிர் குடிக்கும் நோய்களில் மாமருந்தாகப் பயன்படுத்துகின்றார்கள். நீல அருகம்புல் சளி, பித்தம், இரத்த நோய்கள், அக்கி என்னும் (HERPES) தோல் நோய், நாக்கு வறட்சி, எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்குகிறது.



*



3. யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.



*


4. அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.



*


5. உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.



*


6. வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.



*


7. நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.



*


8. நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.



*



9. அருகம்புல் சாறை தயாரிப்பது எப்படி?



*



1. வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைபடுத்த வேண்டும்.



*

2. பின்னர் அருகம்புல்லுடன் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து, (தேவைப்பட்டால்) துளசி, வில்வம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுக்க வேண்டும். வீட்டில் மிக்ஸி இருப்பின், அதைப் பயன்படுத்தியும் சாறு தயாரிக்கலாம்.



*

3. காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவில் இதை பருகலாம்.



*



4. உடல் இளைக்க அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.



*

5. அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.



*

6. அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.



*

7. அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.









எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்கு கிடைக்கிறது. காலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வோர் இதை பெருமளவில் வாங்கி பருகுகின்றனர்.


***

நன்றி வெதுப்னியா.

http://in.tamil.yahoo.com/


***



"வாழ்க வளமுடன்"




***

4 comments:

பனித்துளி சங்கர் சொன்னது…

மிகவும் சிறந்த பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி !

DREAMER சொன்னது…

உங்க ப்ளாக்-ஐ படிச்சதுக்கப்புறம்,
"வல்லவனுக்கு 'புல்'லும் ஆயுதம்"னு புல்லை இளக்காரமா பழமொழியில சொன்னது தப்புன்னு தோனுது. அவ்வளவு சுவாரஸ்யமான தகவல்கள் கொடுத்திருக்கீங்க..! பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

prabhadamu சொன்னது…

நன்றி பனித்துளி சங்கர். உங்கள் வருகைக்கும், ஊக்கதுக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி நண்பா.

தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறோன் நண்பா.


உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா.

prabhadamu சொன்னது…

நன்றி ஸ்டீமர். புல்லு என்று சாதாரமாக நினைக்கும் நாம் அதில் இருக்கும் மகத்துவம் பற்றி அறிந்ததும் எவ்வளவு பிரமிப்பு ஏற்ப்படுகிறது பாருங்கள் நண்பரே!



உங்கள் வருகைக்கும், ஊக்கதுக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி நண்பா. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறோன் நண்பா.


உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா. உங்களை போல் எல்லாரும் என்னை ஊக்குவிப்பதால் தான் நான் இன்னும் நல்ல பதிவுகள் இடவேண்டும் என்று ஆரவம் வருகிறது நண்பரே!


அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பர்களே!

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "