இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கர்ப்பக்காலத்தில் ஒரு தாய்க்கு எல்லா சத்துக்களும் சமச்சீராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவளுடைய கர்ப்பத்திலுள்ள குழந்தை சீராக பிறக்காது, பிறந்தாலும் அதன் வளர்ச்சி சரியாக இருக்காது. எனவே கர்ப்பக் காலத்தில் ஊட்டச்சத்துக்கள் அவசியம்.கருத்தரிப்பதற்கு முன்புகூட ஊட்டமுள்ள உணவைத் தயாரித்துண்பதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்வதன் மூலம், குழந்தை ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் வளர்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.
***
மாவுச்சத்து:
*
கார்போஹைட்ரேட் எனப்படும் இச்சத்து உடலுக்கு சக்தியை தருகிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு இது அவசியம். பருப்பு, பட்டாணி, தானியங்கள், சாக்லேட் போன்றவற்றில் உள்ளது.
***
கொழுப்பு:
*
மாவுச்சத்தைப்போல இரு மடங்கு அ;திகமான கலோரியைத் தரும். கொழுப் பில் கரையக்கூடிய வைட்டமின்களான- வைட்டமின்-ஏ,டி,.இ மற்றும் கே ஆகியவற்றை அளிப்பதோடு அவற்றை உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. எண்ணெய் மற்றும் தாவர எண்ணெய்கள் போன்ற கொழுப்புகள் உணவில் சுவை கூட்டுகிறது.
***
புரதம்:
*
புரோட்டின் எனப்படுகிறது. உடல் செல்களை உருவாக்குவது, அவற்றை சீர் செய்வது ஆகியவற்றை இது மேற்கொள்கிறது. குழந்தையின் திசு வளர்ச்சிக்கும், தாய்மைப் பராமரிப்பிற்கும் கர்ப்பக் காலத்தில் புரதங்கள் அதிகமாக தேவை. இருபதுக்கும் மேற்பட்ட அமினோ அமிலக்கூட்டுச் சேர்க்கையால் ஆனவை. இவற்றுள் எட்டு அமினோ அமிலங்களின் தொகுப்பை உடலால் தயாரிக்க முடியாது. எனவே இவற்றை அத்தியாவசிய அமிலங்கள் என்கிறோம். பருப்புகளிலுள்ள அமினோ அமிலங்கள் உணவு தானியங்களிலுள்ளவற்றை விட உடலில் சுலபமாகச் சேரக்கூடியதாகும். நம் நாட்டு ரொட்டி- பருப்பு நம்மை திடகாத்திரமாக வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை.
***
வைட்டமின்கள்:
*
நல்ல ஆரோக்கியத்திற்கு வைட்டமின் தேவை. புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை வினை மாற்றத்தை நேரடியாக இவை கட்டுப்படுத்துகின்றன. வைட்டமின்களில் பலவகை உள்ளன.
***
வைட்டமின்-ஏ:
*
நோய்த்தொற்றுக்கு எதிராக உடலைக் காக்கவும், இயல்பான எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும், இரவில் பார்வை நன்றாகத் தெரிவதற்கும் இது மிக முக்கியம். கரும்பச்சை, அடர் மஞ்சள் நிற காய்கறிள் மற்றும் பழங்கள் எல்லாம் வைட்டமின்- ஏ சத்து நிறைந்தவை. பால்மற்றும் வனஸ்பதி ஆயிலில்கூட வைட்டமின்-ஏ சத்து உள்ளது.
***
வைட்டமின்-டி:
*
எலும்பில் கால்சியம் மற்றும் பாஸ் பரஸ் சேர்வதற்கும். அதன் உருவாக்கம் மற்றும் பயன்பாட்டிற்கும், பல் மொட்டுக்கள் உருவாகவும் வைட்டமின்-டி அவசியம். இது முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் ஆகியவற்றில் அதிகமுள்ளது. இது ரிக்கட்ஸ் எனப்படும் நோயைத் தடுக்கும். சிறிதளவு வைட்ட மின் டி சத்து சூரிய வெளிச்சத்தி லிருந்துபெறப்படுகிறது.
***
வைட்டமின்-ஈ:
*
உறிஞ்சப்பட முடியாத கொழுப்பு அமிலங்களிலுள்ள உயிர்வலியேற்றத்தை குறைக்கவும்., செல் சவ்வுகளின் ஒருங்கிணைப்பை பராமரிக்கவும் உதவுகளிது. காய்கறிக் கொழுப்புகள் மற்றும் எண் ணெய்கள், பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், தானியங்கள், கொட்டைகள், மஞ்சட் கரு ஆகியவற்றில் இது அதிகமாக உள்ளது.
***
வைட்டமின் கே:
*
ரத்தத்தை உறைவிக்கும்பொருளான ப்ரோத்ராம்பின் உருவாக்கத்தில் முக்கியக் காரணியாக வைட்டமின்-கே விளங்குகிறது. ரத்த உறைவு இயல்பான நிலையில் ஏற்படவும் இது அவசியம். கீரைகள், பச்சைக்காய்கறிகள், உருளைக்கிழங்கு, பன்றியின் ஈரல் ஆகியவற்றில் இச்சத்து அதிகம் உள்ளது.
*
நல்ல ஊட்டச்சத்துக்குத் தேவையான எண்ணற்ற வேறுவேறு வைட்டமின் களையெல்லாம் பி-காம்ப்ளக்ஸ் பிரிவு உள்ளடக்கியிருக்கிறது. அவற்றுள் தையா மின், நையாசின் (வைட்டமின்-பி1), வைட்டமின் பி-6, போலாக்சின் எனப் படும் போலிக் அமிலம், வைட்டமின் -பி12 எனப்படும் சையானோ கோபால மின் ஆகியவை அடங்கும்.
*
செல் சுவாசம், குளுக்கோஸ் உயிர் வளியேற்றம், வளர்ச்சிதை வினைமாற்ற சக்தி ஆகியவற்றை இந்த ஊட்டப் பொருட்கள் அளிக்கின்றன. கர்ப்பக்காலத்தில் அதிகரிக்கும் வளர்ச்சிதைமாற்றங்கள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை சமாளிக்க வைட்டமின்-கே சத்தினுடைய தேவைகள் அதிகரிக்கிறது. பால், முழு தானியம், பிற தானியங்கள், ரொட்டிகள்,மொச்சை, அடர் பச்சை நிற காய்கறிகள், முட்டைகள், இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின்- பி சத்துக்கள் உள்ளன.
***
வைட்டமின்-சி:
*
கொல்லாஜென் உருவாக்கத்திற்கு வைட்டமின்-சி மிக முக்கியம். உடல் செல்களையும், திசுக்களையும் ஒருங் கிணைப்பதற்கு இவை சிமெண்ட் போலச் செயல்படுகினற்ன. உறுதியான எலும்புகள், பற்கள் அமையவும், காயங்கள் ஆறவும், நோய்த் தொற்று விரட்டப் படவும் வைட்டமின் சி சத்து அவசியம். புத்தம் புதிய பழங்கள், காய்கிறகள், அன்னாசி, கொய்யா, தக்காளி, நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவற் றில் வைட்டமின் -சி அதிகமுள்ளது.
***
தாதுக்கள்:
*
இவையும் ஊட்டச்சத்தின் ஒரு அங்கமாகும். மிகக் குறைந்த அளவே கிடைக்கக் கூடியவை. ஆனால்போது மானவை. இவற்றுள் முக்கியமானவை கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், அயோடின், சோடியம், நீர் ஆகியவை முக்கியமானவை.
***
கால்சியம்:
*
எலும்பு மற்றும் பற்களின் முக்கியப் பகுதிப்பொருளாக கால்சியம் இருகிறது. இயல்பாக ரத்தம்உறைதல், தசையின் பரிணாமம் அதிகரித்தல், இதயத் துடிப்பு ஒழுங்காதல் ஆகியவற்றுக்கு இது அவசியம். கர்ப்பக்காலத்தின் கடைசிப் பகுதியில்தான் இச்சத்து உடலில் அதிகமாக சேர்கிறது. பாலாடை, முட்டை, ஓட் தானியம், காய்கறிகள், பால் ஆகியவற்றில் கால்சியம் அதிகமுண்டு.
***
பாஸ்பரஸ்:
*
செல்கள் மற்றும் திசுக்களின் முக்கியச் சேர்மானத்தில் பாஸ்பரஸ் மிக அவசி யம். பால், முட்டைகள், இறைச்சி, பாலாடைக்கட்டி ஓட் மீல், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் இது அதிகம்.
***
இரும்பு:
*
ரத்தப் புரதத்தில் முக்கியக் கூட்டுப் பொருள் இது. ரத்தத்தின் வழியாக செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. கர்ப்பக் காலத்தில் குழந்தை யின் ரத்த சிவப்பணுக்கள், தாயின் ரத்த சிவப்பணுக்களுக்காக ரத்தப் புரதத்தை உற்பத்தி செய்ய இரும்புச் சத்து தேவை. கடைசி மூன்று மாதத்தில் கருக் குழந்தையின் இரும்புச்சத்து தேவை அதிகரிக்கும். அடர் பச்சைக்காய்கறிகள், கீரைகள், ஜாக்கரி, உலர் திராட்சை, பட்டாணி, பீன்ஸ்கொட்டைகள், சிவந்த இறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம்.
***
அயோடின்:
*
இது கர்ப்பிணித் தாய்க்கு மிகக் குறைந்த அளவில் கிடைத்தாலே போதுமானது. உப்பிலிருந்து கிடைக்கிறது.
***
***
துத்தநாகம்:
*
துத்தநாகச் சத்து குறைந்தால் கருக் குழந்தை போதுமான வளர்ச்சியடையாது. அதனுடைய வாழ்நாளும் குறைந்து போகும். பிறவிக்குறைபாடுகள், பிரசவச் சிக்கல்களான நீண்ட நேரம் பிரசவ வலியால் துடித்தல் போன்ற பல சிக்கல்கள் உண்டாகின்றன. பால், மீன், மஞ்சட் கரு போன்ற வற்றில் துத்தநாகச் சத்து உள்ளது.
***
சோடியம்:
*
டாக்சீமியா நோயைத் தடுக்கும் முக்கியப் பொருள் சோடியம். இதை உப்புச்சத்து என்றும் சொல்கிறார்கள்;. மிக அவசியமான சத்து இது.
***
நீர்:
*
நிரப்பிகளில் முக்கியமானது நீர். உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்த இது உதவுகிறது. இவை தவிர, சப்பிள்மெண்டுகள் எனப்படும் நிரப்பிகளும் உள்ளன.
0 comments:
கருத்துரையிடுக